முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » பிருடை முதல் - பிழம்புநனிவெறுத்தல் வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - பிருடை முதல் - பிழம்புநனிவெறுத்தல் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| பிருடை | யாழ் முதலியவற்றின் முறுக்காணி ; சுழலாணி ; அடைக்குந் தக்கை ; பொய்ச் செய்தி ; போலி நடிப்பு . |
| பிருத்தியன் | அடிமை . |
| பிருதிவி | நிலம் , ஐம்பூதத்தினுள் ஒன்று ; கடுக்காய்வகை . |
| பிருதிவிலிங்கம் | காஞ்சி , திருவாரூரிலுள்ள மண்ணாலாகிய இலிங்கம் . |
| பிருது | விருது ; சூரிய குலத்தரசருள் ஒருவன் . |
| பிருதுமானம் | யானைக்கொம்புகளுக்கு இடையிலுள்ள முகப்பகுதி . |
| பிருதூதரம் | ஆட்டுக்கடா . |
| பிருந்தம் | கூட்டம் ; துளசிச்செடி ; விலங்கின் கூட்டம் . |
| பிருந்தாவனம் | துளசிக்காடு ; கல்லறை . |
| பிருந்தை | துளசிச்செடி ; காண்க : நெருஞ்சி . |
| பிரேதக்குழி | கல்லறை . |
| பிரேதகருமம் | சாவுச்சடங்கு . |
| பிரேதகாரியம் | சாவுச்சடங்கு . |
| பிரேதபதி | இறந்தோர்க்குத் தலைவனான யமன் . |
| பிரேதம் | பிணம் ; பேய் ; தெற்கு ; பிதிரர் ; பின் . |
| பிரேதவனம் | நன்காடு . |
| பிரேதவிசாரணை | ஐயப்பட்ட சாவின் காரணத்தைப்பற்றிய விசாரணை . |
| பிரேயம் | காண்க : பிழி . |
| பிரேரகப்பிரேரியபாவம் | தூண்டுவோன் தூண்டப்படுவோன் இருவருக்குமுள்ள தொடர்பு . |
| பிரேரகம் | தூண்டுவது ; சத்தியின் இயக்கம் . |
| பிரேரகன் | வினை நடத்துவோன் ; ஏவுவோன் ; முன்மொழிபவன் , பிரேரிப்பவன் . |
| பிரேரணம் | காண்க : பிரேரணை . |
| பிரேரணை | தூண்டுகை ; முன்மொழிகை , அவையோர் முடிவு அறிய ஒரு செய்தியை முதலில் எடுத்துக் கூறுகை . |
| பிரேரித்தல் | செயற்படுத்துதல் ; அவையோர் முடிவு அறிய ஒரு செய்தியை எடுத்துக் கூறுதல் ; முன்மொழிதல் ; நல்லாசானிடம் மாணாக்கனைச் சேர்ப்பித்தல் ; காரியப்படுதல் . |
| பிரேரியம் | செலுத்தப்படுவது . |
| பிரை | உறைமோர் ; பாதி ; பயன் ; பந்தலிட்ட இடம் ; தொழிற்சாலை ; சுவரின் மாடம் . |
| பிரைக்காற்சின்னி | அரைக்காற் படி . |
| பிரைகுத்துதல் | உறைமோர் குத்துதல் . |
| பிரோகம் | முடிச்சு . |
| பிரௌடம் | பெருமிதமானது . |
| பில்குதல் | சிறுதுவலை வீசுதல் ; பொசிதல் ; வழிதல் ; கொப்புளித்தல் . |
| பில்லடை | இடியப்பம் . |
| பில்லாணி | பெண்கள் கால்விரலில் அணியும் மிஞ்சி . |
| பில்லி | சூனியவித்தை ; சூனியக்காரர் ஏவும் தீத்தேவதை ; பூனை . |
| பில்லு | நெசவுப்பாவைச் செம்மை செய்யும் கருவிவகை ; புல் ; பணச்சீட்டு . |
| பில்லை | மங்கிய மஞ்சள் நிறம் ; வில்லை ; திரண்டு உருண்டது ; தலையிலணியும் அணிவகை ; சதுர ஓடு ; ஆணியின் திருகுவரை ; சேவகர் முதலியோர் தரிக்கும் வில்லை . |
| பிலகரி | ஒரு பண்வகை . |
| பிலகாரி | பெருச்சாளி . |
| பிலஞ்சுலோபம் | எறும்பு . |
| பிலந்துவாரம் | கீழுலகஞ் செல்லும் வழி ; நிலவறை . |
| பிலம் | பாதாளம் ; கீழறை ; குகை ; வளை . |
| பிலம்பி | புளிச்சைக்காய் . |
| பிலவ | அறுபதாண்டுக் கணக்கில் முப்பத்தைந்தாம் ஆண்டு . |
| பிலவகம் | குரங்கு ; தவளை . |
| பிலவங்க | அறுபதாண்டுக் கணக்கில் நாற்பத்தோராம் ஆண்டு . |
| பிலவங்கம் | ஆடு ; தவளை ; மான் ; நஞ்சுள்ள உயிரினங்கள் . |
| பிலவம் | தவளை ; ஆடு ; காண்க : வாகை . |
| பிலன் | எறும்பு . |
| பிலா | பலாமரம் . |
| பிலாக்கு | ஒரு மூக்கணிவகை . |
| பிலாச்சை | கடல்தவளை ; மீன்வகை . |
| பிலாளகம் | புழுகுசட்டம் . |
| பிலிஞ்சி | புளிச்சைக்காய்மரம் . |
| பிலிம்பி | புளிச்சைக்காய்மரம் . |
| பிலிற்றுதல் | தூவுதல் ; வெளிவிடுதல் ; கொப்புளித்தல் . |
| பிலுக்கன் | பகட்டன் . |
| பிலுக்கி | பகட்டுக்காரி . |
| பிலுக்கு | பகட்டு . |
| பிலுக்குதல் | பகட்டுதல் . |
| பிலுபிலுவெனல் | இலை முதலியன உதிர்தற் குறிப்பு ; மக்கட்கூட்டத்தின் ஒலிக்குறிப்பு ; ஒலியோடு கூட்டம் கூடுதற்குறிப்பு ; வாயால் அடுக்குதற்குறிப்பு . |
| பிவாயம் | சோறு சமைத்த பானைகளுக்கு இடும் திருநீற்றுக் குறி . |
| பிழக்கடை | வீட்டின் பின்வாயிற்புறம் ; கடை மடை ; நுழைவாயில் . |
| பிழக்கடைநடை | வீட்டின் பின்புறத்துள்ள நடைவழி . |
| பிழக்கு | பிழை . |
| பிழம்பு | திரட்சி ; வடிவு ; உடல் ; கொடுமை . |
| பிழம்புநனியுலர்த்தல் | நியமத்தின் உறுப்பாகிய காயக்கிலேசம் . |
| பிழம்புநனிவெறுத்தல் | நியமத்தின் உறுப்பாகிய காயக்கிலேசம் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 767 | 768 | 769 | 770 | 771 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பிருடை முதல் - பிழம்புநனிவெறுத்தல் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, கூட்டம், தவளை, ஆண்டு, கணக்கில், அறுபதாண்டுக், எறும்பு, புளிச்சைக்காய்மரம், காயக்கிலேசம், உறுப்பாகிய, நியமத்தின், வீட்டின், வில்லை, உறைமோர், பிரேரணை, சாவுச்சடங்கு, கல்லறை, துளசிச்செடி, அவையோர், முடிவு, எடுத்துக், செய்தியை, அறிய, கொப்புளித்தல்

