தமிழ் - தமிழ் அகரமுதலி - பிரதிக்கினை முதல் - பிரபை வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| பிரதிக்கினை | துணிந்த பொருள் ; நேர்த்திக் கடன் ; சூளுரை ; சம்மதி ; தீர்மானம் ; அனுமான உறுப்புகளில் சாதிக்கவேண்டிய பொருள் ; பாவம் நீங்க அவற்றைக் குருவிடம் தெரிவிக்கை . |
| பிரதிகருமம் | செய்ததற்கு மாறுசெய்கை ; அலங்கரிக்கை . |
| பிரதிகுலம் | தீமை ; தடை ; கைகூடாமை . |
| பிரதிகூலம் | தீமை ; தடை ; கைகூடாமை . |
| பிரதிகூலியம் | தடை . |
| பிரதிச்சீட்டு | எதிர்ச்சீட்டு ; நகல் . |
| பிரதிசாபம் | எதிர்ச்சபிப்பு . |
| பிரதிசாயை | காண்க : பிரதிபிம்பம் . |
| பிரதிசிகுவை | உள்நாக்கு . |
| பிரதிஞ்ஞை | காண்க : பிரதிக்கினை . |
| பிரதிட்டாகலை | சீவான்மாவை முத்தியில் உய்க்குங் கலை . |
| பிரதிட்டை | தெய்வத்தைப் புதுக்கோயிலில் வைத்தல் ; நிலைநிறுத்துகை ; புகழ் ; காண்க : பிரதிட்டாகலை . |
| பிரதிதானம் | கைம்மாறு , பிற்பயன் கருதி உதவுங் கொடை ; பண்டங்கட்கு விலையாகக் கொடுக்கப்பட்ட பொருள் . |
| பிரதிதொனி | எதிரொலி . |
| பிரதிநிதி | பதில் ஆள் ; காலத்தின் தகுதிநோக்கி ஒரு செயலைச் செய்தற்கும் ஒழிதற்கும் உரிமையுள்ள அமைச்சர் . |
| பிரதிப்பிரயோசனம் | காண்க : பிரதிபலன் . |
| பிரதிபத்தி | சிறப்பு ; மதிப்பு ; நம்பிக்கை . |
| பிரதிபதம் | பரியாயச்சொல் ; பதவுரை . |
| பிரதிபந்தகம் | தடை . |
| பிரதிபந்தம் | தடை . |
| பிரதிபலன் | கைம்மாறு . |
| பிரதிபலனம் | காண்க : பிரதிபிம்பம் . |
| பிரதிபலித்தல் | உருவம் தோன்றுதல் . |
| பிரதிபாத்தியம் | எடுத்து விளக்கப்படுவது . |
| பிரதிபாதகம் | எடுத்து விளக்குகை . |
| பிரதிபாதனம் | எடுத்து விளக்குகை . |
| பிரதிபாதித்தல் | எடுத்து விளக்குதல் . |
| பிரதிபிம்பம் | எதிருருவம் , கண்ணாடி முதலியவற்றில் தோன்றும் போலியுரு . |
| பிரதிபேதம் | பாடவேறுபாடு . |
| பிரதிபை | புதிதுபுதிதாய்ப் பொருளை ஆராய்ந்து காணும் அறிவு . |
| பிரதிமண்டலம் | சுற்றளவு ; கோணவட்டம் . |
| பிரதிமாலை | ஈற்றெழுத்துக் கவி . |
| பிரதிமானம் | யானைக்கொம்புகளுக்கு நடுவிலுள்ள முகப்பகுதி . |
| பிரதிமுகம் | நாடகச்சந்தி ஐந்தனுள் முளைத்து இலைதோன்றி நாற்றாய் முடிவதுபோல நாடகப்பொருள் நிற்பது . |
| பிரதிமை | உருவம் ; ஒத்த வடிவம் ; உருவச்சிலை . |
| பிரதிவாதி | எதிர்வழக்காடி ; வாதத்தில் எதிராளி . |
| பிரதீகம் | உறுப்பு . |
| பிரதீசி | மேற்கு . |
| பிரதீபம் | எதிர்நிலை ;காண்க : எதிர்நிலையணி . |
| பிரதேசம் | நாட்டுப் பகுதி ; இடம் ; நாடு ; வேற்று நாடு . |
| பிரப்பு | குறுணிவீதம் கொள்கலங்களில் பரப்பி வைக்கும் படையற்பொருள் ; குறுணி அளவைக் கொள்ளும் பாண்டம் . |
| பிரபஞ்சம் | உலகம் ; உலகவாழ்வு ; உலகியல் . |
| பிரபஞ்சமாயை | உலகமாயை ; மூலப்பகுதி , பிரகிருதி ; உலகப் பொருள்களின் போலித் தோற்றம் . |
| பிரபஞ்சமூலம் | மூலப்பிரகிருதி . |
| பிரபஞ்சவாசனை | உலகத்தின் இன்பதுன்ப நுகர்வு . |
| பிரபஞ்சவாழ்வு | உலகவாழ்க்கை . |
| பிரபஞ்சவியாபாரம் | உலகியற் செயல் |
| பிரபஞ்சவிருத்தி | உலகச் செய்கை ; மாயாகாரியம் . |
| பிரபஞ்சவைராக்கியம் | உலக வாழ்க்கையில் உண்டாகும் வெறுப்பு . |
| பிரபஞ்சனன் | காற்று . |
| பிரபத்தி | அடைக்கலம் அடைகை . |
| பிரபந்தம் | சிறுநூல் ; தொடர்பு ; பாமாலை ; தொண்ணூற்றாறு வகைப்பட்ட நூல் ; இசையுரு ; கட்டுரை . |
| பிரபல்லியம் | புகழ் ; வல்லமை ; வலிவுள்ளது . |
| பிரபலம் | புகழ் ; வல்லமை ; வலிவுள்ளது . |
| பிரபலன் | புகழ்பெற்றவன் . |
| பிரபவ | அறுபதாண்டுக் கணக்கில் முதலாம் ஆண்டு . |
| பிரபாகரன் | சூரியன் ; அக்கினிதேவன் ; சந்திரன் ; மீமாம்சா மதவகையைப் பரப்பிய ஆசிரியன் . |
| பிரபாகீடம் | மின்மினி . |
| பிரபாதம் | செங்குத்து ; மலைவீழருவி ; விடியற்காலை ; கரை ; தெரு . |
| பிரபாதிகம் | மயில் . |
| பிரபாவம் | ஒளி ; புகழ் ; மேன்மை ; வலிமை . |
| பிரபிதாமகன் | கொள்ளுப்பாட்டன் . |
| பிரபிதாமகி | கொள்ளுப்பாட்டி . |
| பிரபு | பெருமையிற் சிறந்தவன் ; அதிகாரி ; கொடையாளி ; செல்வன் ; பாதரசம் . |
| பிரபுத்தன் | விழிப்புடனிருப்பவன் ; இளைஞன் . |
| பிரபுத்துவம் | பிரபுவின் தன்மை ; ஆட்சி . |
| பிரபை | ஒளி ; தண்ணீர்ப்பந்தல் ; திருவாசி ; துர்க்கை . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 762 | 763 | 764 | 765 | 766 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பிரதிக்கினை முதல் - பிரபை வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, எடுத்து, புகழ், பிரதிபிம்பம், பொருள், விளக்குகை, நாடு, வல்லமை, வலிவுள்ளது, உருவம், பிரதிபலன், தீமை, பிரதிட்டாகலை, பிரதிக்கினை, கைம்மாறு, கைகூடாமை

