முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » பிரசவம் முதல் - பிரதிக்கிரகம் வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - பிரசவம் முதல் - பிரதிக்கிரகம் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| பிரசவம் | மகப்பேறு . |
| பிரசவமாதல் | மகப்பெறுதல் . |
| பிரசவவலி | காண்க : பிரசவவேதனை ; பிரசவசன்னி . |
| பிரசவவேதனை | மகப்பேறு நிகழ்வதற்கு உண்டாகும் நோவு . |
| பிரசவித்தல் | பிள்ளைபெறுதல் , ஈனுதல் . |
| பிரசன்னம் | தெளிவு ; கடவுள் , பெரியோர் முதலியோரின் காட்சி ; மகிழ்ச்சி . |
| பிரசன்னமுகம் | மலர்ந்த முகம் . |
| பிரசன்னன் | காட்சியருளுபவன் . |
| பிரசாதப்படுதல் | உண்ணுதல் ; திருவாணை ஏற்றல் . |
| பிரசாதம் | தெளிவு ; திருவருள் ; கடவுளுக்குப் படைக்கப்படும் உணவு ; சோறு . |
| பிரசாதித்தல் | திருவருள் புரிந்து உதவுதல் . |
| பிரசாதிபத்தியம் | மக்களாட்சி . |
| பிரசாபத்தியம் | எண்வகை மணத்துள் ஒன்று , மகள் கொள்ளுதற்குரிய குலத்தார் கொடுத்த பரிசத்து இரட்டித் தம் மகட்கு ஈந்து கொடுக்கும் மணவகை ; மக்களாட்சி . |
| பிரசாபதி | பிரமன் ; துணைப்பிரமன் ; அரசன் ; ஆண்குறி ; காண்க : பிரசோற்பத்தி . |
| பிரசாரம் | பரவுகை ; பரவச்செய்கை ; வேங்கை மரம் . |
| பிரசித்தம் | அறிவிப்பு ; வெளிப்படை ; புகழ் ; நன்கு அறியப்பட்ட நிலை . |
| பிரசித்தி | புகழ் . |
| பிரசினம் | கேள்வி ; சிக்கல் ; உபநிடதத்துள் ஒன்று . |
| பிரசினை | கேள்வி ; சிக்கல் ; உபநிடதத்துள் ஒன்று . |
| பிரசுரம் | அறிவிப்பு ; நூற்பதிப்பு ; மிகுதி . |
| பிரசுரன் | மிக்கவன் ; சுக்கிரன் . |
| பிரசூதம் | காண்க ; பிரசவமாதல் . |
| பிரசூதவாயு | கருப்பவாயு . |
| பிரசூனம் | பூ . |
| பிரசை | குடி ; சந்ததி ; வெருகன்கிழங்கு . |
| பிரசோற்பத்தி | அறுபதாண்டுக்கணக்கில் ஐந்தாம் ஆண்டு ; மக்கட்பெருக்கம் . |
| பிரஞ்ஞன் | அறிஞன் . |
| பிரஞ்ஞாபங்கம் | அறிவுக்கேடு . |
| பிரஞ்ஞானம் | அறிவு . |
| பிரஞ்ஞை | அறிவு ; நிறையறிவு ; முன் நிகழ்ந்ததை அறியும் அறிவு . |
| பிரட்சாளனம் | நீரால் கழுவுதல் . |
| பிரட்டம் | முதன்மையானது ; தள்ளுண்டது ; பொரித்தது . |
| பிரட்டன் | நன்னெறியினின்று தவறியவன் ; வஞ்சகன் . |
| பிரட்டு | காண்க : புரட்டு . |
| பிரடை | யாழ் முதலியவற்றின் முறுக்காணி ; முறுக்காணி வில்லை . |
| பிரண்டை | ஒரு கொடிவகை . |
| பிரணயகலகம் | ஊடல் . |
| பிரணயம் | அன்பு . |
| பிரணவம் | ஓங்கார மந்திரம் . |
| பிரணாமம் | கடவுள் அல்லது பெரியோர்முன் செய்யும் வணக்கம் . |
| பிரத்தம் | பத்துப் பதார்த்தங்கொண்ட ஒரு நிறை ; அளவுநாழி ; பிரமாதம் . |
| பிரத்தல் | எழுத்திலா ஒலி . |
| பிரத்தியக்கம் | காண்க : பிரத்தியட்சம் . |
| பிரத்தியக்கவிருத்தம் | காட்சிக்கு மாறுபட்டது . |
| பிரத்தியக்கு | மேற்கு . |
| பிரத்தியட்சம் | காட்சி ; அளவை ஆறனுள் காட்சியளவை . |
| பிரத்தியம் | காட்சி ; அளவை ஆறனுள் காட்சியளவை . |
| பிரத்தியயம் | விகுதி முதலிய இடைச்சொல் . |
| பிரத்தியருத்தம் | எதிருரை , மறுமொழி . |
| பிரத்தியால¦டம் | வில்லோர் நிலை நான்கனுள் இடக்கால் முந்துற வலக்கால் பின்னுற வைக்கும் நிலை . |
| பிரத்தியேகம் | தனிமை ; சிறப்பியல்பு . |
| பிரதக்கணம் | வலம்வருதல் . |
| பிரதட்சிணம் | வலம்வருதல் . |
| பிரதமகாலம் | விடியற்காலம் . |
| பிரதமம் | முதன்மை ; தொடக்கம் . |
| பிரதமர் | தலைமை அமைச்சர் . |
| பிரதமவிசாரணை | தொடக்கத்திற் செய்யும் விசாரணை . |
| பிரதமை | முதல் திதி ; கடுக்காய் . |
| பிரதரம் | பெரும்பாடு . |
| பிரதனம் | படையிலொரு தொகை . |
| பிரதனை | படையிலொரு தொகை . |
| பிரதாபம் | வீரம் ; பெருமை ; புகழ் ; ஒளி . |
| பிரதானகோயில் | முதன்மைத் தெய்வம் உள்ள கோயில் ; கிறித்தவர்களின் தலைமைக் கோயில் . |
| பிரதானம் | பிரகிருதி தத்துவம் ; தலைமைப் பொருள் ; முக்கியம் ; கொடுப்பது . |
| பிரதானமடித்தல் | தற்பெருமை கொண்டாடுதல் . |
| பிரதானன் | தலைமையானவன் ; அரசியல் செயல்கள் அனைத்தையும் நடத்துபவன் . |
| பிரதானி | அமைச்சர் . |
| பிரதானிக்கம் | கருவூலத் தலைமை ; அமைச்சகம் . |
| பிரதானை | பார்வதி . |
| பிரதி | ஒத்த தன்மை ; பதில் ; விடை ; படி ; நகல் ; நூற்படி ; மாறு ; போட்டி ; பிரதிவாதி ; ஒவ்வொரு . |
| பிரதிக்கிரகம் | கொடைபெறுதல் ; சேனையின் பின்பகுதி . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 761 | 762 | 763 | 764 | 765 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பிரசவம் முதல் - பிரதிக்கிரகம் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, நிலை, புகழ், ஒன்று, காட்சி, அறிவு, பிரத்தியட்சம், செய்யும், ஆறனுள், அளவை, வலம்வருதல், தொகை, கோயில், படையிலொரு, அமைச்சர், முறுக்காணி, தலைமை, காட்சியளவை, கேள்வி, கடவுள், தெளிவு, பிரசவவேதனை, பிரசவமாதல், திருவருள், மக்களாட்சி, சிக்கல், மகப்பேறு, அறிவிப்பு, பிரசோற்பத்தி, உபநிடதத்துள்

