தமிழ் - தமிழ் அகரமுதலி - நேர முதல் - நையல் வரை
சொல் | அருஞ்சொற்பொருள் |
நேர | ஓர் உவமஉருபு . |
நேரகாலம் | ஏற்ற காலம் ; கெடுதியான காலம் ; விதித்த காலம் ; தற்காலம் . |
நேரங்கடத்துதல் | பொழுதுபோக்குதல் ; வேலையில் மந்தமாயிருத்தல் . |
நேரங்கெட்டநேரம் | ஒவ்வாத சமயம் ; தகுதியற்ற காலம் . |
நேரசை | குறிலோ நெடிலோ தனித்தேனும் ஒற்றடுத்தேனும் வரும் அசைவகை . |
நேரஞ்சாய்தல் | பொழுதுபோதல் . |
நேரஞ்செல்லுதல் | அதிககாலம் பிடித்தல் ; தாமதமாதல் . |
நேரடி | நாற்சீரான் வரும் அளவடி ; நேரில் . |
நேரந்தப்புதல் | காலந்தவறுதல் . |
நேரபாரமறிதல் | அடக்கவொழுக்கமறிதல் ; காலமறிதல் . |
நேரம் | காலம் ; தருணம் ; பகலிற் பாதியாகிய இரு யாமகால அளவு ; குற்றம் ; அபராதம் ; ஒறுப்புப்பணம் . |
நேரல் | காண்க : நேர்வு . |
நேரல்லார் | கீழோர் ; பகைவர் . |
நேரலன் | பகைவன் ; நேர்மையானவன் ; நிறுதிட்டமானது . |
நேராக்குதல் | இணக்குதல் ; முடிவுபடுத்துதல் ; அழித்தல் . |
நேராக | தானாக ; காட்சியாக ; உண்மையாய் ; முழுமையும் . |
நேராதல் | இணங்குதல் ; சரியாதல் . |
நேராதார் | பகைவர் . |
நேரார் | பகைவர் . |
நேராளி | நேர்மையுள்ளவன் . |
நேரிசம் | எறிபடை ; அம்புவகை . |
நேரிசை | காண்க : நேரிசைவெண்பா ; பண்வகை . |
நேரிசைவெண்பா | இரண்டாமடியின் ஈற்றில் தனிச்சொல் பெற்றுவரும் வெண்பாவகை . |
நேரிடுதல் | நிகழ்தல் ; எதிர்ப்படுதல் ; கைகூடுதல் . |
நேரியது | நேரானது ; ஒரு நல்லாடைவகை . |
நேரியன் | நேரிமலைக்கு உரியவனான சோழன் ; நுண்ணுணர்வுடையவன் ; அணுவுக்கு அணுவாய் இருப்பவன் . |
நேரிறை | சோழன் ; உடன்பாட்டை நேரே குறிக்கும் விடை . |
நேருக்குநேராய்நிற்றல் | சரிநேராதல் ; நேர்எதிராயிருத்தல் ; பிறர்போலத் தானும் நடத்தல் . |
நேருக்குவருதல் | இணங்கிவருதல் . |
நேரேடம் | நாவல்மரம் . |
நேரேடு | நாவல்மரம் . |
நேரொத்தல் | இணையாயிருத்தல் ; மாறுபாடின்றி இருத்தல் ; மிகப் பொருந்தி இருத்தல் . |
நேரோடல் | குதிரையின் நேரோட்டம் . |
நேளி | காண்க : தாமரை . |
நேற்று | முன்நாள் ; சற்று முன்காலத்தில் . |
நேற்றையதினம் | நேற்று . |
நேனம் | பைத்தியம் . |
நை | ஓர் உயிர்மெய்யெழுத்து (ந்+ஐ) ; ஓர் இகழ்ச்சிக்குறிப்பு . |
நைக்காட்டுதல் | கேலிகாட்டுதல் . |
நைகரம் | துன்பம் ; குறைவு . |
நைச்சி | காக்கை ; பாம்பு . |
நைச்சிகம் | தாழ்வு ; இழிதன்மை ; தன்வயப்படுத்துகை . |
நைச்சியம் | தாழ்வு ; இழிதன்மை ; தன்வயப்படுத்துகை . |
நைசர்க்கிகம் | இயற்கையாகத் தோன்றியது . |
நைசிகம் | காண்க : நையம் . |
நைசியம் | காண்க : நையம் . |
நைட்டிகப்பிரமசாரி | திருமணஞ் செய்யாமல் சாகும்வரை மாணவம் பூண்டிருப்பவன் . |
நைட்டிகம் | ஆயுள் முழுதும் மாணவம் பூண்டொழுகும் நிலை . |
நைட்டிகன் | காண்க : நைட்டிகப்பிரமசாரி . |
நைத்தல் | நசுக்குதல் ; எரித்தல் ; அழித்தல் . |
நைத்திகம் | நித்தியத்துவம் , என்றும் உளவாயிருக்கை . |
நைத்தியம் | நித்தியத்துவம் , என்றும் உளவாயிருக்கை . |
நைதல் | இரங்குதல் ; நிலைகெடுதல் ; கெடுதல் ; தளர்தல் ; நசுங்குதல் ; சுருங்குதல் ; மாத்திரையிற் குறைதல் ; வாடுதல் ; மனம்வருந்தல் ; தன்வயப்படாமை . |
நைதிகை | காண்க : ஊசிமல்லிகை . |
நைதெனல் | இரக்கக்குறிப்பு ; மெலிதற் குறிப்பு ; மனநோதற்குறிப்பு . |
நைநையெனல் | இகழ்ச்சிக்குறிப்பு ; குழந்தை விடாது அழுதற்குறிப்பு . |
நைபடுதல் | நசுக்கப்படுதல் . |
நைபத்தியம் | நடிப்பவன் கொள்ளும் வேடம் . |
நைபாலி | அடுக்குமல்லிகை . |
நைபாலிகம் | செம்பு ; பித்தளை . |
நைமிசம் | நைமிசம் என்னும் காடு ; திருமால் திருப்பதி . |
நைமித்திகம் | சிறப்பு வழிபாடு . |
நைமித்தியம் | சிறப்பு வழிபாடு . |
நையநருக்குதல் | பொடியாக்குதல் ; நையப்புடைத்தல் . |
நையப்புடைத்தல் | நன்றாக அடித்தல் . |
நையம் | மூக்கிலிடும் மருந்து ; காக்கை . |
நையல் | மெலியச்செய்யும் நோய் ; அம்மை நோய் . |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 690 | 691 | 692 | 693 | 694 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நேர முதல் - நையல் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, காலம், நையம், பகைவர், நித்தியத்துவம், நைட்டிகப்பிரமசாரி, மாணவம், என்றும், சிறப்பு, நோய், நையப்புடைத்தல், வழிபாடு, நைமிசம், உளவாயிருக்கை, தாழ்வு, சோழன், நேரிசைவெண்பா, அழித்தல், வரும், நாவல்மரம், இருத்தல், இழிதன்மை, காக்கை, இகழ்ச்சிக்குறிப்பு, நேற்று, தன்வயப்படுத்துகை