தமிழ் - தமிழ் அகரமுதலி - நொதுக்கல் முதல் - நோக்க வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| நொதுக்கல் | இளக்கமுள்ளது . |
| நொதுத்தல் | அழித்தல் ; தளர்தல் . |
| நொதுநொதுத்தல் | குழைதல் ; சீழ்கட்டுதல் ; ஈரமாதல் ; நுரைத்தல் . |
| நொதுநொதெனல் | புளித்த மா முதலியன பொங்குதற்குறிப்பு ; நெகிழ்தற்குறிப்பு . |
| நொதுமல் | அயல் ; புறக்கணிப்பு ; மென்மை ; அன்பிலார் கூற்று . |
| நொதுமலர் | அயலார் . |
| நொதுமலாளர் | அயலார் ; புறங்கூறுவோர் . |
| நொதுமெனல் | விறைவுக்குறிப்பு . |
| நொந்தகைமை | வறுமை . |
| நொந்தலை | வலுவின்மை ; வருமை . |
| நொந்தலைமை | வலுவின்மை ; வருமை . |
| நொந்தன்னம் | நீர்விடாமையாற் பதனழிந்த சோறு . |
| நொந்தார் | பகைவர் . |
| நொந்துதல் | அழிதல் ; தூண்டுதல் . |
| நொப்பம் | திறமை . |
| நொப்பு | தடைசெய்கை ; குட்டி பால் குடியாமலிருக்க ஆட்டின் முலையிற் சுற்றும் ஓலை ; வெள்ளப்பெருக்கில் மிதந்துவரும் செத்தை முதலியன . |
| நொம்பலம் | துன்பம் ; நோவு . |
| நொய் | குறுநொய் ; இலேசு ; மென்மை ; நுண்மை . |
| நொய்தல் | நுண்மை . |
| நொய்து | மெல்லியது ; இழிவானது ; விரைவு . |
| நொய்தெனல் | விரைவுக்குறிப்பு . |
| நொய்ப்பம் | திறமை ; இலேசு . |
| நொய்ம்மை | கனமின்மை ; மென்மை ; நேர்த்தி ; உறுதியின்மை ; குற்றம் ; நுண்மை ; தளர்ச்சி ; மனத்திடமின்மை ; மன உருக்கம் ; இழிவு . |
| நொய்ய | அற்பமான ; வலியற்ற ; நுட்பமான ; மென்மையான ; கடுமையாக . |
| நொய்யசொல் | வசைச்சொல் . |
| நொய்யரிசி | குறுநொய் . |
| நொய்யவன் | வறியவன் ; இழிஞன் ; எளியவன் ; வலுவில்லான் . |
| நொய்யெனல் | நுண்மைக்குறிப்பு . |
| நொய்வு | காண்க : நொய்ம்மை ; மனவருத்தம் . |
| நொரு | பயிரினடியில் முளைப்பது ; காய்ப்பு மாறினபின் அரும்பும் பிஞ்சு . |
| நொருக்குதல் | காண்க : நொறுக்குதல் . |
| நொருகை | சிற்றுண்டி . |
| நொருங்குதல் | காண்க : நொறுங்குதல் . |
| நொலை | பூரிகை என்னும் அப்பவருக்கம் . |
| நொலையல் | பூரிகை என்னும் அப்பவருக்கம் . |
| நொவ்வல் | வருத்தம் . |
| நொவ்விதாக | விரைவாக . |
| நொவ்வு | மெலிவு ; உடையுந்தன்மை ; வாட்டம் ; வருத்தம் ; விரைவு . |
| நொவ்வுதல் | வருந்துதல் ; மெலிதல் . |
| நொழுந்துதல் | நுழைத்தல் . |
| நொள்குதல் | சுருங்குதல் ; முகத்தல் ; இளைத்தல் . |
| நொள்கெனல் | அச்சக்குறிப்பு . |
| நொள்ளல் | பார்வையற்றுக் கண்குழிந்த நிலை ; காண்க : நுளம்பு . |
| நொள்ளாப்பு | காண்க : நொவ்வல் . |
| நொள்ளுதல் | முகத்தல் ; விழுங்குதல் . |
| நொள்ளை | குருடு ; காண்க : நாகரவண்டு ; விலங்குவகை ; கைக்குழந்தை . |
| நொள்ளைக்கண் | பார்வை மாறிய கண் . |
| நொள்ளைப்பயல் | இழிஞன் , புல்லன் . |
| நொளநொளத்தல் | குழைதல் ; வழுவழுப்பாதல் . |
| நொளில் | காண்க : நொதி . |
| நொளுக்கல் | முற்றாத நிலை ; இளம்பாக்கு . |
| நொளுநொளெனல் | குழைதற்குறிப்பு . |
| நொளுவல் | காண்க : நொளுக்கல் . |
| நொற்பம் | காண்க : நுட்பம் ; எளிமை . |
| நொறில் | விரைவு ; நுடக்கம் ; ஒடுக்கம் ; அருவருக்கத்தக்க சேறு . |
| நொறு | தின்பண்டம் . |
| நொறுக்கரிசி | நொருங்கிய அரிசி ; பாதி வெந்த சோறு . |
| நொறுக்கித்தள்ளுதல் | நன்றாயடித்தல் ; மிகத்திட்டுதல் ; திறமைகாட்டுதல் . |
| நொறுக்கு | பொடியாக்குகை ; மெல்லுகை ; நன்றாயடிக்கை . |
| நொறுக்குதல் | பொடியாக்கல் ; நையப்புடைத்தல் ; இரத்தக்காயம் பண்ணுதல் ; மிகுதியாய் உண்ணுதல் . |
| நொறுங்கு | நொய் ; தூள் ; நுண்மை . |
| நொறுங்குதல் | பொடியாதல் ; பின்னிரங்குதல் . |
| நொறுநாட்டியம் | சிறுகுற்றங்கள் காணுந்தன்மை . |
| நொறுவை | காண்க : நொறுவைப்பண்டம் . |
| நொறுவைக்கள்ளன் | வீண்செலவு செய்வோன் . |
| நொறுவைக்கள்ளி | வீண்செலவு செய்பவள் . |
| நொறுவைப்பண்டம் | சிற்றுண்டி . |
| நொன்றி | காண்க : நௌவி . |
| நொன்னை | நையாண்டி ; பரிகாசம் . |
| நோ | ஓர் உயிர்மெய்யெழுத்து (ந்+ஓ) ; வலி ; துன்பம் ; நோய் ; சிதைவு ; வலுவின்மை . |
| நோக்க | ஓர் உவமவுருபு . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 692 | 693 | 694 | 695 | 696 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நொதுக்கல் முதல் - நோக்க வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, நுண்மை, விரைவு, வலுவின்மை, மென்மை, என்னும், நொறுங்குதல், பூரிகை, அப்பவருக்கம், வருத்தம், நொறுவைப்பண்டம், வீண்செலவு, நொளுக்கல், நிலை, சிற்றுண்டி, முகத்தல், நொவ்வல், நொய்ம்மை, சோறு, திறமை, வருமை, அயலார், முதலியன, துன்பம், நொய், இழிஞன், குழைதல், இலேசு, குறுநொய், நொறுக்குதல்

