தமிழ் - தமிழ் அகரமுதலி - நெறிசெய்தல் முதல் - நேயன் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| நெறிசெய்தல் | ஆளுதல் ; நல்வழிப்படுத்துதல் . |
| நெறித்தல் | புறவிதழ் ஒடித்தல் ; சினத்தால் புருவத்தை வளைத்தல் ; நிமிர்த்தல் ; கையாற்பிடித்துவிடுதல் ; முறுக்காயிருத்தல் ; மயிர் குழலுதல் ; நோக்குதல் . |
| நெறிதல் | மயிர் குழற்சியாதல் . |
| நெறிநீர் | கடல் . |
| நெறிப்படுதல் | ஒழுங்குபடுதல் ; நல்லொழுக்கத்தில் நிலைபெறுதல் ; ஒன்றன் வழிப்படுதல் ; உள்ளடங்குதல் . |
| நெறிப்பு | புருவத்தை வளைத்தல் ; நிமிர்ந்திருத்தல் ; அகங்கரித்தல் . |
| நெறிபொறி | மும்முரம் . |
| நெறிமருப்பு | எருமை , மான் முதலியவற்றின் முடங்கின கொம்பு . |
| நெறிமாறுதல் | வழிதப்புதல் . |
| நெறிமான் | நீதிமான் . |
| நெறிமுறைமை | நியாயவழி . |
| நெறிமை | விதி ; நன்னெறி ; வழக்கு . |
| நெறியிலார் | கீழ்மக்கள் . |
| நெறியிலி | தீயோன் . |
| நெறியோன் | பெரியோன் . |
| நெறு | ஓசை . |
| நெறுக்கெனல் | ஒடிதல் , முரிதல் முதலியவற்றால் உண்டாம் ஒலிக்குறிப்பு . |
| நெறுநெறுத்தல் | பல்லைக் கடித்தல் ; ஒலிபடப் பிளவுறுதல் ; உறுமுதல் ; நெரிந்தொலித்தல் . |
| நெறுநெறெனல் | ஓர் ஒலிக்குறிப்பு ; முரிதற்குறிப்பு ; பல்லைக் கடிக்கும் ஒலிக்குறிப்பு . |
| நென்பு | மர ஆப்பு ; ஏணிப்பழு . |
| நென்மா | அரிசிமா . |
| நென்னல் | முன்னாள் . |
| நென்னேற்று | முன்னாள் . |
| நே | ஓர் உயிர்மெய்யெழுத்து (ந்+ஏ) ; அன்பு ; ஈரம் . |
| நேக | மிகப் பொடியாக . |
| நேசகன் | வண்ணான் . |
| நேசம் | அன்பு ; ஆர்வம் ; தகுதி . |
| நேசன் | நண்பன் ; அடியான் , பக்தன் . |
| நேசானுசாரி | உண்மையாய் நடப்பவன் . |
| நேசி | அன்புடையவள் . |
| நேசித்தல் | அன்புவைத்தல் . |
| நேட்டம் | தேட்டம் ; சம்பாதித்த பொருள் . |
| நேடுதல் | தேடுதல் ; எண்ணுதல் ; விரும்புதல் ; சம்பாதித்தல் ; இலக்காகக் கொள்ளுதல் . |
| நேத்திரநரம்பு | கண்நரம்பு . |
| நேத்திரப்படலம் | ஒரு கண்ணோய்வகை . |
| நேத்திரபரியந்தம் | கடைக்கண் . |
| நேத்திரபிண்டம் | கண்விழி ; பூனை . |
| நேத்திரம் | கண் ; மயிற்பீலிக்கண் ; பட்டாடை . |
| நேத்திரயோனி | இந்திரன் ; சந்திரன் . |
| நேத்திரரோகம் | கண்ணோய் . |
| நேத்திரவீட்சணம் | அருளுடன் பார்த்தல் . |
| நேத்திராம்பு | கண்ணீர் . |
| நேத்திரோற்சவம் | கண்ணுக்கு விருப்பமானது . |
| நேதா | தலைவன் . |
| நேதி | முறை . |
| நேதித்தல் | இதுவன்றெனக் கூறுதல் . |
| நேதியதுசெய்தல் | இதுவன்றெனக் கூறுதல் . |
| நேபத்தியம் | அலங்காரம் ; வேடம் ; நாடக அரங்கில் வேடம்பூணும் மறைவிடம் ; நாடகமேடை . |
| நேபம் | நீர் . |
| நேம்புதல் | கொழித்தல் . |
| நேமகம் | நியமிக்கை ; ஏற்பாடு ; தீர்மானம் ; மணவாக்குறுதி ; தெய்வத்துக்குப் படைத்தல் ; ஒழுங்கு ; இருப்பிடம் . |
| நேமநிட்டை | நோன்புகளை உறுதியோடு செய்கை ; நித்தியானுட்டானம் . |
| நேமம் | நியமனம் ; விதிமுறை ; ஊழ் ; நேரம் ; சாயங்காலம் ; பங்கு ; பிளப்பு ; வேர் ; மேலிடம் ; வேலி ; ஏமாற்றுகை . |
| நேமன் | சீரிய ஒழுக்கமுள்ளவன் . |
| நேமனம் | காண்க : நியமனம் ; அமர்த்தம் . |
| நேமி | வட்டம் ; தேருருளை ; சக்கரப்படை ; ஆணைச்சக்கரம் ; கடல் ; பூமி ; மோதிரம் ; சக்கரவாகப்புள் ; சக்கரப்படையுடையவனான திருமால் ; தீர்த்தங்கரர் இருபத்து நால்வருள் ஒருவர் . |
| நேமித்தல் | காண்க : நியமித்தல் ; அமர்த்துதல் ; சிந்தித்தல் . |
| நேமிநாதன் | அருகக்கடவுள் ; கடவுள் . |
| நேமிப்புள் | சக்கரவாகப்புள் . |
| நேமியஞ்செல்வன் | பேரரசன் . |
| நேமியான் | சக்கரப்படை உடையவனான திருமால் . |
| நேமியோன் | சக்கரப்படை உடையவனான திருமால் . |
| நேமிவலயம் | பூமண்டலம் . |
| நேமிவலவன் | திருமால் ; கடவுள் . |
| நேயம் | அன்பு ; பக்தி ; நன்மை ; நெய் ; நிலப் பனைக்கிழங்கு . |
| நேயவை | இடுதிரை . |
| நேயன் | நண்பன் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 688 | 689 | 690 | 691 | 692 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நெறிசெய்தல் முதல் - நேயன் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், திருமால், சக்கரப்படை, அன்பு, ஒலிக்குறிப்பு, காண்க, நியமனம், உடையவனான, கடவுள், சக்கரவாகப்புள், கூறுதல், நண்பன், மயிர், வளைத்தல், கடல், பல்லைக், புருவத்தை, முன்னாள், இதுவன்றெனக்

