தமிழ் - தமிழ் அகரமுதலி - நேர் முதல் - நேர்வு வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| நேர் | உடன்பாடு ; உவமை ; செவ்வை ; நீதி ; நல்லொழுக்கம் ; திருந்திய தன்மை ; மாறுபாடு ; நீளம் ; வரிசை ; பாதி ; நுணுக்கம் ; கொடை ; கதி ; காண்க : நேர்விடை ; தனிமை ; மிகுதி ; ஊர்த்துவநிலை ; நிலைப்பாடு ; காண்க : நேரசை ; வலிமை ; முன் ; பிராகாரம் . |
| நேர்கட்டி | ஒரு மணச்சரக்குவகை . |
| நேர்கட்டுதல் | சரிக்கட்டுதல் . |
| நேர்கடன் | முயற்சி ; நேர்ந்த பொருள் , வேண்டுதல் ; வேண்டுதலுக்காக வைத்த பண்டம் . |
| நேர்காட்டுதல் | எதிர்த்தல் ; ஒரு திசைநோக்கிச் செலுத்துதல் ; கொல்லுதல் ; விழுங்குதல் ; வரிசையாக வைத்தல் ; முன் காட்டுதல் ; முன் ஏர் நடத்துதல் ; சரியாகப் பிளத்தற்கு வெட்டிக்காட்டுதல் ; நீர்க்கால் மாட்டுதல் ; சாவுகிடையாகக் கிடத்துதல் . |
| நேர்காணல் | ஒருவரை நேரில் சந்தித்துப் பேசுகை , பேட்டி . |
| நேர்காற்று | உதவுங்காற்று . |
| நேர்கூறு | சரிபாகம் . |
| நேர்கொடுநேரே | வெளிப்படையாக . |
| நேர்ச்சி | போக்கு ; தகுதி ; இணக்கம் ; சூள் ; நட்பு ; சிறப்பு . |
| நேர்சீர் | ஒழுங்கு ; மனவொற்றுமை ; தகுதிக்கேற்ப நடக்கை . |
| நேர்சொல்லுதல் | உண்மை கூறுதல் . |
| நேர்சோழகம் | நேர்தென்றல் . |
| நேர்ஞ்சங்கிலி | கழுத்திலணியப்படும் வேலைப்பாடு வாய்ந்த ஒரு சங்கிலிவகை . |
| நேர்த்தரவு | குற்றம் பொறுத்தோமென்று நேரிற் கூறும் ஆணை . |
| நேர்த்தல் | ஒத்தல் ; எதிர்த்தல் . |
| நேர்த்தி | சிறப்பு ; திருத்தமுள்ளது ; காண்க : நேர்த்திக் கடன் : முயற்சி ; நேர்ந்த பொருள் , வேண்டுதல் . |
| நேர்த்திக்கடன் | வேண்டுதல் ; வேண்டுதலுக்காக வைத்த பண்டம் . |
| நேர்த்திக்குறிப்பு | தவறாமை . |
| நேர்தப்புதல் | நேர்மைதவறுதல் . |
| நேர்தல் | பொருந்துதல் ; நிரம்புதல் ; நிகழ்தல் ; எதிர்ப்படுதல் ; இளைத்துப்போதல் ; மென்மையாதல் ; எதிர்தல் ; நெருங்குதல் ; தீண்டுதல் ; பெறுதல் ; கொடுத்தல் ; உடன்படுதல் ; ஒத்தல் ; உறுதிசெய்தல் ; அமர்த்தல் ; நியமித்தல் ; தண்டனைக்கு உட்படுத்தல் ; வேண்டுதல் ; செல்லுதல் ; வேண்டிக்கொள்ளல் ; எதிர்த்தல் ; அறுத்தல் . |
| நேர்ந்தபடி | முறையின்றி ; விருப்பப்படி ; முன்யோசனையின்றி . |
| நேர்ந்தபோக்கு | முருட்டுப்பிடிவாதம் . |
| நேர்ந்தார் | நண்பர் . |
| நேர்ந்துகொள்ளுதல் | வேண்டிக்கொள்ளுதல் . |
| நேர்ந்துபோதல் | நிகழ்தல் ; மெலிதல் . |
| நேர்ந்துவிடுதல் | வேண்டுதலுக்காக விலங்கு முதலியவற்றைக் கோயிலுக்கு விடுதல் ; மெலிதல் . |
| நேர்நிரத்தல் | சமமாய் நிற்றல் . |
| நேர்நிலைவஞ்சி | காண்க : சமநிலைவஞ்சி . |
| நேர்நிற்றல் | எதிர்நிற்றல் ; ஒழுங்காய் நிற்றல் . |
| நேர்நிறை | கற்பு ; சரிபாரம் ; நீதி . |
| நேர்ப்பம் | இறப்பு ; திறமை . |
| நேர்பசை | குற்றுகரமுற்றுகரங்களோடு இயைந்து வரும் நேரசை . |
| நேர்படுத்துதல் | காண்க : நேர்பிடித்தல் ; நேர்பண்ணுதல் ; நலப்படுத்துதல் . |
| நேர்படுதல் | சந்தித்தல் ; நன்கு பயிலுதல் ; நிகழ்தல் ; ஏற்புடையதாதல் ; வாய்த்தல் ; காணப்படுதல் ; எதிர்ப்படுதல் ; உடன்படுதல் ; நட்புக் கொள்ளுதல் ; ஒழுங்குபடுதல் . |
| நேர்பண்ணுதல் | சமனாக்குதல் ; ஒழுங்குப்படுத்துதல் ; ஒன்றுபடுத்துதல் ; ஆணையிடுதல் . |
| நேர்பாடு | தற்செயலான நிகழ்ச்சி ; உபாயம் ; நீதி ; நீளம் ; உடன்பாடு ; காண்க : நேர்த்திக்கடன் . |
| நேர்பிடித்தல் | நேர்வழி செலுத்துதல் ; முடிவுக்குக் கொண்டுவருதல் ; சரிப்படுத்துதல் ; சமாதானப்படுத்துதல் ; நலமாதல் . |
| நேர்பு | நேரசை ; நீளம் ; எழுச்சி ; சந்திப்பு ; நிகழ்ச்சி ; போக்கு . |
| நேர்போதல் | இணங்குதல் ; குணமாதல் ; சரியாய்ப்போதல் . |
| நேர்ம்புணை | இலேசான தெப்பம் . |
| நேர்முகம் | எதிர்முகம் . |
| நேர்மை | செம்மை ; உண்மை ; நீதி ; நுண்மை ; அறம் ; திருத்தம் ; சமம் ; இசைவு ; நன்னிலை ; நிகழ்ச்சி . |
| நேர்மையம் | சரிநடு ; |
| நேர்வருதல் | ஒத்திருத்தல் . |
| நேர்வழி | நேர்பாதை ; நல்லொழுக்கம் . |
| நேர்வளம் | செவ்வழியாழ்த்திறம் ; பாலையாழ்த்திறம் . |
| நேர்வாய்க்கட்டளை | மாடத்தின்கண் சாளரம் . |
| நேர்வாளம் | மருந்துமரவகை . |
| நேர்வான் | சித்திரைநாள் . |
| நேர்விடை | உடன்பாட்டை நேரே குறிக்கும் விடை ; நேராகச் சொல்லும் விடை . |
| நேர்வு | நிகழ்ச்சி ; உடன்பாடு ; கொடுத்தல் ; வேண்டுகை ; எதிர்தல் ; பொருதல் ; சரிந்து விழுகை . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 689 | 690 | 691 | 692 | 693 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நேர் முதல் - நேர்வு வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, நிகழ்ச்சி, நீதி, வேண்டுதல், நிகழ்தல், வேண்டுதலுக்காக, உடன்பாடு, முன், நீளம், எதிர்த்தல், நேரசை, எதிர்ப்படுதல், உடன்படுதல், எதிர்தல், கொடுத்தல், நேர்பிடித்தல், விடை, நேர்வழி, நேர்பண்ணுதல், நிற்றல், மெலிதல், செலுத்துதல், நேர்ந்த, பொருள், முயற்சி, நேர்விடை, நல்லொழுக்கம், வைத்த, பண்டம், ஒத்தல், உண்மை, சிறப்பு, போக்கு, நேர்த்திக்கடன்

