தமிழ் - தமிழ் அகரமுதலி - நையாண்டி முதல் - நொதித்தல் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| நையாண்டி | கேலிப்பேச்சு ; சிரிப்புப்பேச்சு ; நாடோடிப் பாட்டுவகை . |
| நையாயிகன் | அறநூல் கற்றோன் . |
| நைராக்கியம் | எள்ளிநகையாடல் , பரிகாரம் . |
| நைராசியம் | நம்பிக்கையின்மை . |
| நைருதி | தென்மேற்றிசை . |
| நைலம் | கடற்பாசி மருந்து . |
| நைவருதல் | வருந்துதல் ; இரங்குதல் . |
| நைவளம் | பாலைப் பண்வகை ; குறிஞ்சியாழ்த்திறம் . |
| நைவனம் | நடனம் ; வீரன் . |
| நைவு | வாடினது ; மிகப் பழுக்கை ; வருந்துகை ; நோய் . |
| நைவேத்தியம் | கடவுளுக்குப் படைக்கும் உணவு . |
| நைவேதனம் | படைத்தல் ; காண்க : நைவேத்தியம் . |
| நைவேதித்தல் | கடவுளுக்கு உணவு முதலியன படைத்தல் . |
| நொ | ஒர் உயிர்மெய்யெழுத்து (ந்+ஒ) ; துன்பம் ; நோய் ; மென்மை . |
| நொக்கு | வெடிப்பு . |
| நொக்குதல் | உண்டு குறைத்தல் ; அடித்தல் ; மிகுதியாகத் திட்டுதல் . |
| நொக்கென | உடனே . |
| நொங்கு | நுங்கு . |
| நொங்குதல் | விழுங்குதல் ; மெலிதல் . |
| நொச்சி | கருநொச்சி ; வெண்ணொச்சி ; காண்க : நொச்சித்திணை : ஒரு புறத்துறை ; எயில் காத்தல் ; மதில் ; சிற்றூர் . |
| நொச்சித்திணை | நொச்சிமாலை சூடி வீரர் எயில் காத்தலைக் கூறும் புறத்திணை . |
| நொசி | வருத்தம் ; நுண்மை . |
| நொசித்தல் | வருத்துதல் . |
| நொசிதல் | நுண்மையாதல் ; அருமையாதல் ; வருந்தல் ; வளைதல் ; நைதல் ; குறைவுறுதல் . |
| நொசிப்பு | மனத்தை ஒருவழிச் செலுத்துதலாகிய சமாதி . |
| நொசிவு | நுண்மை ; வருத்தம் ; வளைந்த நிலை . |
| நொட்டாங்கை | இடக்கை . |
| நொட்டு | புணர்ச்சி . |
| நொட்டுதல் | புணர்தல் ; ஏமாற்றுதல் . |
| நொட்டை | சுவைமிகுதியால் அண்ணத்தில் நாவைச் சேர்த்துக் கொட்டுதல் . |
| நொட்டைச்சொல் | குறைச்சொல் . |
| நொடி | கைந்நொடிப்பொழுது ; சொல் ; முதுமொழி ; செய்யுள் ; ஓசை ; வண்டிப்பாதைகளில் ஏற்படும் பள்ளம் ; புதிர் ; நோய்த்துன்பம் . |
| நொடிக்கதை | விடுகதை ; மிகச் சுருக்கமாக அமையும் கதை . |
| நொடிசொல்லுதல் | புதுச்செய்தி கூறுதல் ; விடுகதை சொல்லுதல் ; எள்ளிநகையாடல் . |
| நொடித்தல் | சொல்லுதல் : சொடக்குதல் ; இங்கிதத்தாலழைத்தல் ; கோள்சொல்லுதல் ; பழித்தல் ; அழித்தல் ; காண்க : நொடிசொல்லுதல் : கட்டுக்குலைதல் ; நடக்கும்போது கால் சிறிது வளைதல் ; ஒடித்தல் ; உறுப்பாட்டுதல் ; பால் முதலியன சுரத்தல் ; இழப்படைதல் . |
| நொடித்தான்மலை | அழிப்புத் தலைவனான சிவனின் கைலாயமலை . |
| நொடித்துப்போதல் | நிலைகுன்றுதல் ; வறுமையடைதல் . |
| நொடிதல் | சொல்லுதல் ; ஒடிதல் . |
| நொடிப்பு | கையால் நொடித்தல் நேரம் , கணப்பொழுது . |
| நொடிபயிற்றுதல் | பேச்சுக் கற்பித்தல் . |
| நொடிபோக்குதல் | தாளத்திற்கியையக் கையை நொடித்தல் . |
| நொடிவரை | விரைவில் . |
| நொடிவிழுதல் | பாதையில் குழிப்பள்ளம் விழுதல் ; கோணலாதல் . |
| நொடுக்குநொடுக்கெனல் | ஒலிக்குறிப்பு ; பாதக்குறட்டினொலி ; படபடத்தற்குறிப்பு . |
| நொடுத்தல் | விற்றல் . |
| நொடுநொடுத்தல் | துடித்தல் ; துடுக்காயிருத்தல் . |
| நொடுநொடெனல் | படபடத்தற்குறிப்பு ; துடுக்காயிருத்தற்குறிப்பு . |
| நொடை | விலை ; விற்கை ; பலபண்டம் . |
| நொடைமை | விலை . |
| நொண்டல் | நொண்டுதல் ; நுகர்தல் ; முகத்தல் . |
| நொண்டி | முடமான ஆள் அல்லது விலங்கு ; முடம் ; காண்க : நொண்டிநாடகம் . பொய்க்காலால் நடப்போன் . |
| நொண்டிக்கால் | முடக்கால் ; பொய்க்கால் . |
| நொண்டிநாடகம் | கள்வனொருவன் படையிலுள்ள குதிரையொன்றைத் திருட முயன்றபோது கால்தறியுண்டு பின் நல்வழிபெற்ற செய்தியைச் சிந்துச்செய்யுளால் புனைந்து கூறும் நாடகநூல் . |
| நொண்டுதல் | காலை ஊன்றாமல் கிந்தி நடத்தல் . |
| நொதல் | துன்புறுத்தல் . |
| நொதி | அருவருக்கத்தக்க சேறு . |
| நொதித்தல் | கொப்புளித்தல் ; புளித்த மா முதலியன பொங்குதல் ; ஈரமாதல் ; நீர் முதலியவற்றில் ஊறிப்போதல் ; நுரைத்தல் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 691 | 692 | 693 | 694 | 695 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நையாண்டி முதல் - நொதித்தல் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, முதலியன, சொல்லுதல், நொடித்தல், நொடிசொல்லுதல், விடுகதை, வளைதல், நொண்டிநாடகம், நொண்டுதல், நுண்மை, விலை, படபடத்தற்குறிப்பு, கூறும், நைவேத்தியம், நோய், எள்ளிநகையாடல், உணவு, படைத்தல், சொல், எயில், நொச்சித்திணை, வருத்தம்

