முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » நீர்க்கட்டுதல் முதல் - நீர்ப்பண்டமாதல் வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - நீர்க்கட்டுதல் முதல் - நீர்ப்பண்டமாதல் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| நீர்க்கட்டுதல் | புண் சீழ்பிடித்தல் . |
| நீர்க்கடம்பு | கடப்பமரவகை . |
| நீர்க்கடவுள் | வருணன் . |
| நீர்க்கடன் | தென்புலத்தார்பொருட்டுச் செய்யும் தர்ப்பணம் ; எள்ளும் தண்ணீரும் இறைத்தல் ; காண்க : சந்தியாவந்தனம் . |
| நீர்க்கடுப்பு | எரிச்சலோடு துளித்துளியாய்ச் சிறுநீர் இறங்கும் நோய்வகை . |
| நீர்க்கண்டி | பாசன வேலையைக் கவனிக்கும் ஊர்ப்பணியாளன் . |
| நீர்க்கணம் | செய்யுளின் முதலில் மங்கலமாக அமைக்கத்தக்கதும் நேர்நிரைநிரை என வருவதுமாகிய செய்யுட்கணம் ; குழந்தைகளுக்கு வரும் கணைநோய்வகை . |
| நீர்க்கமல்லி | அல்லிக்கொடி . |
| நீர்க்கரை | ஆறு , குளம் முதலியவற்றின் கரை . |
| நீர்க்கழலை | ஓர் இமைக்கட்டிவகை . |
| நீர்க்கழிவு | காண்க : நீரிழிவு . |
| நீர்க்காக்கை | காக்கைவகை . |
| நீர்க்கால் | வாய்க்கால் . |
| நீர்க்காவி | ஆடையில் பற்றும் இளஞ்செந்நிறம் ; கருங்குவளை மலர் . |
| நீர்க்கிழவன் | வருணன் . |
| நீர்க்கீரி | நீரில் வாழும் விலங்குவகை . |
| நீர்க்குடம் | நீர் நிரம்பிய இடம் ; எண்வகை மங்கலத்துள் ஒன்றாகிய நிறைகுடம் , பூரணகும்பம் . |
| நீர்க்குண்டி | வெண்ணொச்சிச்செடி . |
| நீர்க்குமிழி | நீரில் எழும் கொப்புளம் . |
| நீர்க்குவை | கடைக்கண்ணில் வளரும் வேண்டாத தசை . |
| நீர்க்குளரி | செடிவகை ; சிறு செடிவகை . |
| நீர்க்குறிஞ்சா | கழுதைப்பாலைச்செடி . |
| நீர்க்கைக்கதவு | மதகு . |
| நீர்க்கொழுந்து | நீரோட்டம் . |
| நீர்க்கொள்ளுதல் | நீர்க்கோவை , சளிபிடித்தல் ; சீழ்பிடித்தல் . |
| நீர்க்கோத்தை | ஒரு தண்ணீர்ப்பாம்புவகை . |
| நீர்க்கோப்பு | நீர்க்கோவை . |
| நீர்க்கோலம் | தண்ணீரால் இடப்படும் தீக்குறியான கோலம் ; நீர் விளையாட்டுக் காலத்தில் அணியும் சிறப்புடை ; நீரில் எழுதப்படும் எழுத்து . |
| நீர்க்கோலி | தண்ணீர்ப்பாம்பு . |
| நீர்க்கோவை | நீர் தங்கி நிற்கக்கூடிய நிலப்பகுதி ; நீர்ப்பிடிப்பு ; நீர்க்கொள்ளுதல் ; நீரால் உண்டாகும் உடம்புவீக்கம் ; கபவாதநோய் . |
| நீர்க்கோழி | நீர்வாழ் பறவை . |
| நீர்க்கோன் | காண்க : நீர்க்கிழவன் . |
| நீர்கட்டல் | மூத்திரம் அடைபட்டிருக்கும் நோய் . |
| நீர்ச்சாய்வு | நீர்க்கசிவுள்ள பகுதி . |
| நீர்ச்சால் | தண்ணீர்மிடா ; நீர் இறைக்கும் சால் . |
| நீர்ச்சாவி | மிகுநீரால் வரும் பதர் ; வெள்ளக் கெடுதியால் உண்டாகும் நெற்பதர் . |
| நீர்ச்சிக்கு | காண்க : நீர்க்கடுப்பு . |
| நீர்ச்சிரங்கு | சேற்றுப்புண் . |
| நீர்ச்சீலை | கோவணம் . |
| நீர்ச்சுண்டி | நீர்ப்பூண்டுவகை . |
| நீர்ச்சுரப்பு | நீரால் உண்டாகும் உடல்வீக்கம் ; காண்க : நீரிழிவு . |
| நீர்ச்சுழல் | நீரிலுண்டாகுஞ் சுழி ; மாட்டு சுழிவகை . |
| நீர்ச்சுழி | நீரிலுண்டாகுஞ் சுழி ; மாட்டு சுழிவகை . |
| நீர்ச்சுனை | மலைமீதுள்ள நீர்நிலை . |
| நீர்ச்சூலை | அண்டவாயு ; அண்டவீக்கம் . |
| நீர்ச்செறுப்பு | காண்க : நீர்கட்டல் . |
| நீர்ச்சோபை | உடல்வீக்கம் . |
| நீர்ச்சோறு | நீர் கலந்த பழஞ்சோறு . |
| நீர்செய்காந்தமணி | காண்க : சந்திரகாந்தக்கல் . |
| நீர்த்தல் | நீராதல் ; ஈரமாதல் . |
| நீர்த்தலை | மூளையில் இரத்தம் குறைவாகும் நோய் . |
| நீர்த்தாக்கு | நீர் அதிகமாகத் தேங்கி நிற்குமிடம் . |
| நீர்த்தாரை | நீரோட்டம் ; ஆண்குறி ; மூத்திரப்பையிலிருந்து சிறுநீரைக் கொணரும் குழாய் ; மழைத்தாரை . |
| நீர்த்தாரையடைப்பு | நீர்க்கடுப்பு . |
| நீர்த்தாழ்வு | காண்க : நீர்நிலை . |
| நீர்த்தானம் | பிறந்த இலக்கினத்திலிருந்து நாலாமிடம் . |
| நீர்த்தித்திப்பு | மூத்திரம் சருக்கரைத் தன்மை கலந்து மிதமிஞ்சி இறங்கும் நோய்வகை . |
| நீர்த்துப்போதல் | நீரின் தன்மையடைதல் . |
| நீர்த்துறை | நீர்நிலையின் இறங்குமிடம் . |
| நீர்த்தூம்பு | மதகு . |
| நீர்த்தெளியான் | தரைக்கு நீர்தெளித்துத் துப்புரவு செய்யும் வேலைக்காரன் . |
| நீர்தலைப்படுதல் | சந்திசெய்தல் . |
| நீர்நாடு | நீர்வளமுள்ள சோழநாடு . |
| நீர்நாய் | நீரில் வாழும் விலங்குவகை . |
| நீர்நாள் | பூராடநாள் . |
| நீர்காற்று | நீர்பாய்ச்சிய நிலத்தில் உண்டாகும் நாற்று . |
| நீர்நிலம் | நன்செய் . |
| நீர்நிலை | ஏரி குளம் முதலிய நீருள்ளவிடம் ; சதுப்புநிலம் ; ஆழம் ; முத்துக்குற்றம் . |
| நீர்நிறக்காக்கை | காண்க : நீர்க்காக்கை . |
| நீர்ப்பஞ்சு | கடற்காளான் . |
| நீர்ப்படலம் | கண்நோய்வகை . |
| நீர்ப்படை | நடுகல்லிற்கு நீராட்டித் தூய்மை செய்தலைக் கூறும் புறத்துறை . |
| நீர்ப்பண்டமாதல் | உருகுதல் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 674 | 675 | 676 | 677 | 678 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நீர்க்கட்டுதல் முதல் - நீர்ப்பண்டமாதல் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, நீர், நீரில், உண்டாகும், நீர்க்கோவை, நீர்க்கடுப்பு, நீர்நிலை, நீர்கட்டல், நீரால், மூத்திரம், நீர்க்கொள்ளுதல், உடல்வீக்கம், மாட்டு, சுழிவகை, சுழி, நீரிலுண்டாகுஞ், நீரோட்டம், நோய், செடிவகை, வரும், குளம், நோய்வகை, இறங்கும், வருணன், நீரிழிவு, நீர்க்காக்கை, சீழ்பிடித்தல், செய்யும், விலங்குவகை, வாழும், நீர்க்கிழவன், மதகு

