முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » நீட்டுமுடக்கு முதல் - நீர்க்கட்டு வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - நீட்டுமுடக்கு முதல் - நீர்க்கட்டு வரை
சொல் | அருஞ்சொற்பொருள் |
நீட்டுமுடக்கு | கொடுக்கல்வாங்கல் ; உதவுங்குணம் ; தெம்பு , ஆற்றல் . |
நீட்டோலை | திருமுகவோலை . |
நீட்பம் | நீளம் . |
நீடசம் | குருவி . |
நீடம் | பறவைக்கூடு ; இருப்பிடம் . |
நீடாணம் | காண்க : நீட்டாணம் . |
நீடி | எங்கும் பரவியிருக்கும் தன்மை . |
நீடித்தல் | நீளுதல் ; நிலைநிற்றல் . |
நீடு | நெடுங்காலம் ; நிலைத்திருக்கை . |
நீடுதல் | நீளுதல் ; பரத்தல் ; செழித்தல் ; மேம்படுதல் ; நிலைத்தல் ; இருத்தல் ; தாமதித்தல் ; கெடுதல் ; தாண்டுதல் ; பொழுதுகடத்துதல் ; தேடுதல் ; பெருகுதல் . |
நீடுநினைந்திரங்கல் | கூட்டம் பெறாமல் காலம் நீட்டிக்கவே தலைவியை மிக நினைந்து தலைவன் இரங்கல் . |
நீடுநீர் | தீர்த்தநீர் . |
நீடூழி | நெடுநாள் ; நெடுங்காலம் . |
நீடூழிகாலம் | நெடுநாள் ; நெடுங்காலம் . |
நீடோடநடத்தல் | நெடுங்காலம் நிகழ்தல் . |
நீண்டவன் | வாமனாவதாரம் எடுத்து வளர்ந்த திருமால் . |
நீண்டாயம் | நீளம் . |
நீண்முடி | நண்டமுடிதரித்தவனான அரசன் . |
நீண்மை | பழைமை . |
நீண்மொழி | சூளுரை ; வீரனொருவன் செய்த வஞ்சினம் கூறும் புறத்துறை . |
நீணாளம் | நீண்ட புகைக்குழாய் . |
நீணிதி | பெருஞ்செல்வம் . |
நீணிலை | ஆழம் ; நீர்மடு . |
நீணுதல் | நெடுந்தொலைவு செல்லுதல் ; |
நீணெறி | நீண்ட வழி ; இடைவிடா இன்பத்துக்குரிய நெறி . |
நீத்தம் | வெள்ளம் ; ஆழம் ; கடல் ; மிகுதி ; தண்ணீர்விட்டான்செடி . |
நீத்தல் | பிரிதல் ; துறத்தல் ; தள்ளுதல் ; இழித்தல் ; வெறுத்தல் ; விடுதல் ; நீங்குதல் . |
நீத்தவன் | அருகன் ; துறவி . |
நீத்தார் | முனிவர் ; துறவியர் . |
நீத்திடுதல் | பெருக்கிடுதல் ; மிகுத்திடுதல் ; விட்டுவிடுதல் ; துறந்துவிடுதல் . |
நீத்து | நீந்துதல் ; நீந்தக்கூடிய ஆழமுடைய நீர் ; வெள்ளம் . |
நீதக்கேடு | காண்க : நீதிக்கேடு . |
நீதம் | தகுதியானது ; நீதி ; தானியம் ; நற்பேறு . |
நீதம்பாதம் | நீதி . |
நீதவான் | நியாயநெறி நிற்போன் ; நீதிபதி . |
நீதன் | காண்க : நீதிமான் ; இகழ்ந்தோன் . |
நீதி | நியாயம் ; முறைமை ; மெய் ; உலகத்தோடு பொருந்துகை ; அறநூல் ; இயல்பு ; ஒழுக்கநெறி ; நடத்துவது ; வழிவகை ; பார்வதி . |
நீதிக்கேடு | நியாயத்தவறு ; ஒழுக்கத்தவறு . |
நீதிகெட்டவன் | நியாயந் தவறியவன் . |
நீதிகேட்டல் | வழக்கு விசாரித்தல் . |
நீதிச்செல்வம் | குழந்தைகளுக்கு முடிவாங்கும் சடங்கு செய்தல் . |
நீதித்தலம் | நீதிமன்றம் , வழக்கு விசாரிக்கும் சபை . |
நீதிநியாயம் | நீதிமுறை ; சட்டதிட்டங்கள் ; நீதிமன்ற ஒழுங்கு . |
நீதிநூல் | அறம் பொருள்களைப்பற்றிக் கூறும் நூல் ; சட்டக்கலை . |
நீதிநெறி | நல்லொழுக்கம் . |
நீதிபரன் | நீதியினின்றுந் தவறாதவன் ; கடவுள் . |
நீதிமான் | நியாயநெறி நிற்போன் . |
நீதியதிபதி | நீதிபதி . |
நீதியறிந்தோன் | நியாயம் தெரிந்தவன் ; அமைச்சன் . |
நீதியொழுங்கு | காண்க : நீதிநெறி . |
நீதிவான் | காண்க : நீதிமான் ; நீதிபதி . |
நீதினி | நியாயந் தவறாதவள் . |
நீந்து | கடல் . |
நீந்துதல் | நீரில் மிதந்து செல்லுதல் ; கடத்தல் ; பெருகுதல் ; வெல்லுதல் ; கழித்தல் . |
நீந்துபுனல் | ஆழமுள்ள நீர் . |
நீப்பு | துறவு ; பிரிவு . |
நீப்புரவு | நீங்குகை . |
நீபம் | வெண்கடம்பு ; செங்கடம்பு ; உத்திரட்டாதிநாள் ; காண்க : நீர்க்கடம்பு ; காரணம் ; மரவகை . |
நீம் | முன்னிலைப் பன்மைப் பெயர் . |
நீம்பல் | பிளப்பு ; வெடியுப்பு . |
நீமம் | ஒளி . |
நீயல் | நீங்கல் ; விடுதல் . |
நீயான் | காண்க : நீகான் . |
நீயிர் | நீவிர் , முன்னிலைப் பன்மைப் பெயர் . |
நீர் | தண்ணீர் ; கடல் ; இரசம் ; பனிநீர் ; உடல் இரத்தம் ; பித்தநீர் முதலிய நீர்மப் பொருள் ; பூராடநாள் ; பூரட்டாதிநாள் ; ஈரம் ; மணியின் ஒளி ; குணம் ; நிலை . |
நீர்க்கட்டி | பாசனவேலையைக் கவனிக்கும் ஊர்ப்பணியாளன் ; ஆலங்கட்டி ; சீழ்பிடித்த புண்கட்டி . |
நீர்க்கட்டு | சிறுநீர் தடைபட்டிருக்கும் நோய் ; நீரினால் உண்டாகும் வீக்கம் ; நீர்க்கோவை ; நீர்நோய்வகை ; ஏரி முதலியவற்றில் நீர் தேங்கும் அளவு . |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 673 | 674 | 675 | 676 | 677 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நீட்டுமுடக்கு முதல் - நீர்க்கட்டு வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, நெடுங்காலம், நீர், நீதிபதி, கடல், நீதிமான், நீதி, நிற்போன், நியாயநெறி, வழக்கு, பன்மைப், பெயர், முன்னிலைப், நீதிநெறி, நியாயந், நியாயம், நீந்துதல், கூறும், நெடுநாள், பெருகுதல், நீளுதல், நீண்ட, ஆழம், நீளம், விடுதல், வெள்ளம், செல்லுதல், நீதிக்கேடு