தமிழ் - தமிழ் அகரமுதலி - நீர்ப்பயிர் முதல் - நீரழிவு வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| நீர்ப்பயிர் | நன்செய்ப்பயிர் . |
| நீர்ப்பரிசை | ஆமை . |
| நீர்ப்பறவை | நீரில் வாழும் பறவை . |
| நீர்ப்பனை | புல்லாமணக்கஞ்செடி . |
| நீர்ப்பாக்கு | ஊறற்பாக்கு . |
| நீர்ப்பாசி | தண்ணீரில் மிதக்கும் பாசிவகை . |
| நீர்ப்பாடு | நீரிழிவு ; நீர்க்குறைவு ; விடக்கிராணி ; குழந்தைநோய்வகை . |
| நீர்ப்பாம்பு | தண்ணீரில் வாழும் பாம்புவகை . |
| நீர்ப்பாய்ச்சல் | ஆறு , கால்வாய் முதலியவற்றின் மூலம் ஏற்படும் பாசனம் ; சீழ்வடிகை ; நீர்நிலைக்கு எதிராக வீட்டுவாயில் அமைந்திருக்கும் நிலை . |
| நீர்ப்பிடிப்பு | ஏரியில் நீர் பற்றுமிடம் ; நிலத்தில் நீர் வடியாது நிற்கும் நிலை ; நீரளவு ; காய்கனிகளில் உள்ள சாறு ; நீர்த்தட்டு . |
| நீர்ப்பீனசம் | சளிநோய்வகை . |
| நீர்ப்புள் | காண்க : நீர்ப்பறவை . |
| நீர்ப்புற்று | வெள்விழியிற் சதைவளரும் நோய் வகை . |
| நீர்ப்பூ | நால்வகைப் பூவில் நீரில் உண்டாவது . |
| நீர்ப்பெருக்கு | வெள்ளம் ; கடல்நீரேற்றம் ; நோய்வகை . |
| நீர்ப்போர் | நீரின்கண்ணே போலிப் போர்புரியும் விளையாட்டு . |
| நீர்பிரிதல் | சினத்தல் ; சிறுநீர் இறங்குகை . |
| நீர்பெய்கலன் | கமண்டலம் . |
| நீர்பெய்தல் | சிறுநீர்விடுதல் . |
| நீர்போகி | மதகு . |
| நீர்மட்டம் | சரிமட்டம் பார்க்கும் கருவி ; கடல் மட்டம் . |
| நீர்மறிப்பு | நீரைத் தடுத்துத் திருப்புகை ; காண்க : நீரடைப்பு . |
| நீர்மனிதன் | மக்கள் முகம்போல் முகமுடைய ஒரு கடல்வாழ் உயிரிவகை ; உலகானுபவம் இல்லாதவன் . |
| நீர்மாங்காய் | நீரில் ஊறவைத்த வடுமாங்காய் . |
| நீர்மாடம் | பள்ளியோடம் . |
| நீர்மாலை | பிணத்தைக் குளிப்பாட்ட நீர் கொண்டுவரும் சடங்கு . |
| நீர்மீட்டான் | காண்க : தண்ணீர்விட்டான் . |
| நீர்முகம் | நீர்த்துறை ; ஆறு கடலொடு கூடுமிடம் . |
| நீர்முட்டுதல் | நீர்நிரம்புதல் ; மூத்திரம் பெய்தல் . |
| நீர்முழுகி | நீரில் முழுகுவோன் ; நீரடைப்பை நீக்குவோன் . |
| நீர்முள்ளி | நீரில் வளரும் முள்ளுள்ள பூண்டு . |
| நீர்மேல்நெருப்பு | கல்லுருவிச்செடி . |
| நீர்மை | நீரின் தன்மை ; தன்மை ; சிறந்த குணம் ; எளிமை ; அழகு ; ஒளி ; நிலைமை ; ஒப்புரவு . |
| நீர்மோர் | மோருடன் அதிக நீர் சேர்த்துத் தரும் ஒரு குடிநீர்வகை . |
| நீர்யானை | நீரில் வாழும் விலங்குவகை . |
| நீர்வரத்து | நீர்ப்பெருக்கு . |
| நீர்வரைப்பு | கடலால் சூழப்பட்ட நிலவுலகம் . |
| நீர்வல்லி | வெற்றிலை ; தண்ணீர்விட்டான் கிழங்கு . |
| நீர்வலயம் | காண்க : நீர்வரைப்பு . |
| நீர்வலி | மகப்பேறு காலத்தில் சிறுநீர் பெய்ய முடியாமல் ஏற்படும் வலி . |
| நீர்வளம் | நீர்ச்சிறப்பு ; நீர் நிறைவு ; நேர்வாளமரம் . |
| நீர்வற்றம் | நீர் இறக்கம் . |
| நீர்வற்றல் | ஈரம் சுண்டுதல் ; வற்றல் . |
| நீர்வற்றற்றேங்காய் | கொப்பரைத்தேங்காய் . |
| நீர்வார்த்தல் | தாரைவார்த்துக் கொடுத்தல் . |
| நீர்வாரம் | ஆற்றில் வளரும் கொடிவகை . |
| நீர்வாரி | யானைக்காலிற் கட்டும் சங்கிலி . |
| நீர்வாழ்சாதி | நீரில் வாழும் உயிரிகள் ; நெய்தல் நில மக்கள் . |
| நீர்வாழை | தண்ணீர் உதவும் வாழைவகை . |
| நீர்வாழைக்காய் | மீன் . |
| நீர்விட்டுப்போதல் | காண்க : நீர்த்துப்போதல் ; பதனழிந்து சுவை கெடுதல் ; மிகுதியாய் வியர்த்தல் . |
| நீர்விதை | நன்செய்ச் சாகுபடி . |
| நீர்வியாதி | காண்க : நீரிழிவு ; நீர்ச்சுரப்பு . |
| நீர்விலை | நீர்வரி . |
| நீர்விழவு | ஆடவரும் மகளிரும் தண்ணீரில் இறங்கி நின்று புரியும் விளையாட்டு . |
| நீர்விளையாட்டு | ஆடவரும் மகளிரும் தண்ணீரில் இறங்கி நின்று புரியும் விளையாட்டு . |
| நீர்வீழ்ச்சி | மலையருவி . |
| நீரகம் | கடல் சூழ்ந்த பூமி ; காஞ்சியில் உள்ள திருமால் கோயில்களுள் ஒன்று . |
| நீரசம் | சுவையற்றது ; மாதுளை ; தாமரை ; சலவாயு . |
| நீரட்டுதல் | காண்க : நீர்வார்த்தல் . |
| நீரடைப்பு | மூத்திரத்தடைநோய்வகை . |
| நீரணி | மகளிர் நீர் விளையாட்டில் கொள்ளும் கோலவகை . |
| நீரணிமாடம் | காண்க : நீர்மாடம் . |
| நீரத்தி | ஒரு மரவகை . |
| நீரதம் | நீரைக் கொடுக்கும் மேகம் ; நீரற்றது . |
| நீரதி | கடல் ; சாறு . |
| நீரநிதி | கடல் . |
| நீரம் | தண்ணீர் . |
| நீரரண் | நான்கரணுள் நீர் நிறைந்துள்ள அகழி . |
| நீரரமகள் | நீரில் வாழும் தெய்வப்பெண் . |
| நீரவன் | அறிவுடையவன் . |
| நீரழிவு | காண்க : நீரிழிவு . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 675 | 676 | 677 | 678 | 679 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நீர்ப்பயிர் முதல் - நீரழிவு வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, நீரில், நீர், வாழும், கடல், தண்ணீரில், நீரிழிவு, விளையாட்டு, தண்ணீர், நீர்வரைப்பு, தன்மை, ஆடவரும், நீர்வார்த்தல், மகளிரும், புரியும், நின்று, இறங்கி, வளரும், மக்கள், நீர்ப்பெருக்கு, சாறு, உள்ள, நிலை, சிறுநீர், நீர்ப்பறவை, நீர்மாடம், ஏற்படும், நீரடைப்பு, தண்ணீர்விட்டான்

