தமிழ் - தமிழ் அகரமுதலி - நீராகாரம் முதல் - நீலமணிவோன் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| நீராகாரம் | பழஞ்சோற்றில் கலந்துள்ள நீர் . |
| நீராசனம் | காண்க : நீராரத்தி . |
| நீராஞ்சனம் | காண்க : நீராரத்தி . |
| நீராட்டணி | காண்க : நீரணி . |
| நீராட்டம் | நீரில் முழுகுகை . |
| நீராட்டு | நீரில் முழுகுகை . |
| நீராட்டுதல் | முழுக்காட்டுதல் ; மஞ்சனஞ் செய்வித்தல் . |
| நீராடல் | காண்க : நீராடுதல் . |
| நீராடற்காய் | முற்றின தேங்காய் . |
| நீராடுதல் | குளித்தல் ; நீர் விளையாட்டு . |
| நீராணிக்கம் | நீர்நிறைவு ; நேர்வாளமரம் ; ஈரம் ; நீர் பாய்ச்சுவோனுக்குக் குடிகள் தரும் உரிமை . |
| நீராணிக்கன் | கொங்குநாட்டு ஏரிமதகின் காவற்காரன் ; நீர்க்கண்டி . |
| நீராத்திரை | நீர் விழாவுக்குச் செல்லும் பயணம் . |
| நீராரத்தி | மஞ்சள் நீர் ஆரத்தி . |
| நீராரம்பம் | நீர்ப்பாசன வசதியுள்ள நிலம் . |
| நீராவி | தண்ணீர் வெப்பத்தினால் மாறிய ஆவி ; தடாகம் . |
| நீராவிக்கப்பல் | நீராவியாற் செல்லுங் கப்பல் . |
| நீராவிமண்டபம் | ஆறு , தடாகங்களின் நடுவே அமைந்த மண்டபம் . |
| நீராவியந்திரம் | நீராவியினால் செலுத்தப்படும் பொறி . |
| நீராழி | கடல் ; மாட்டுநோய்வகை . |
| நீராழிமண்டபம் | காண்க : நீராவிமண்டபம் . |
| நீராளம் | நீர்த்தன்மை ; நீர்மிகுதி ; நீருடன் கலந்த உணவு ; மயக்கம் இல்லாத இனிப்புக்கள் . |
| நீராளமாய்விடுதல் | உணவில் குழம்பு முதலியவற்றை அதிகமாகப் பரிமாறுதல் . |
| நீரிலாநிலம் | பாலைநிலம் . |
| நீரிழிச்சல் | சிறுநீர் சருக்கரைத் தன்மை கலந்து மிதமிஞ்சி இறங்கும் நோய்வகை . |
| நீரிழிவு | சிறுநீர் சருக்கரைத் தன்மை கலந்து மிதமிஞ்சி இறங்கும் நோய்வகை . |
| நீரிறங்குதல் | சிறுநீர் இறங்குகை ; உடம்பில் கெட்டநீர் தங்குகை . |
| நீரிறைவன் | வருணன் . |
| நீருருள் | சகடமாகப் பண்ணித் தண்ணீர் ஏற்றி உருட்டுங் கருவி . |
| நீருள்ளி | வெங்காயம் . |
| நீரூபம் | வானம் ; காற்று . |
| நீரூர்பாதை | நிறைபுனல் . |
| நீரூற்று | ஊற்று ; கசிவு . |
| நீரூறி | காண்க : கீழாநெல்லி . |
| நீரெட்டி | காண்க : பேயாமணக்கு ; மரவட்டைமரம் . |
| நீரெட்டிமுத்து | காண்க : பேயாமணக்கு ; மரவட்டைமரம் . |
| நீரேற்றம் | நீர்ப்பெருக்கு ; நீர்க்கோவை ; கெட்ட நீரால் உடம்புவீங்கும் நோய் . |
| நீரோசை | மகிழ்ச்சி ; கொண்டாட்டம் . |
| நீரோட்டம் | ஓடும் நீர் ; மணியின் உள்ளொளி ; நீர் செல்லுங் கால் . |
| நீரோடி | மதகு ; கூரைக் கூடல்வாய் ; நீரோடும் உள்வாய் . |
| நீரோடுகால் | கால்வாய் ; ஊரில் நீர் வடிந்து செல்லுந் தாழ்ந்த நிலம் . |
| நீரோடை | கால்வாய் ; நீர்நிலை . |
| நீரோருகம் | தாமரை . |
| நீல் | நீலம் ; கறுப்பு ; அவுரி ; காண்க : கருங்குவளை ; காற்று ; வாதநோய் . |
| நீலக்கட்டி | அவுரிச்சாயக்கட்டி . |
| நீலக்கல் | நீலமணி . |
| நீலக்காரம் | துரிசு . |
| நீலக்காலி | காண்க : அவுரி ; நண்டுவகை . |
| நீலக்கோலன் | மன்மதன் . |
| நீலகண்டம் | சிவனது நஞ்சு தங்கிய கழுத்து ; மயில் . |
| நீலகண்டன் | நீலநிறம் கொண்ட கழுத்தையுடைய சிவன் ; திருநீலகண்ட நாயனார் ; துரிசு ; பூரபாடாணம் ; முருங்கைமரம் . |
| நீலகண்டி | துர்க்கை ; பொல்லாதவள் ; பாம்பின் நச்சுப்பல்லில் ஒன்று . |
| நீலகந்தி | மாணிக்கவகை . |
| நீலகமலம் | காண்க : கருங்குவளை . |
| நீலகாசம் | கண்ணோயுள் ஒன்று . |
| நீலகிரி | நீலமலை ; ஒரு மலைத்தொடர் . |
| நீலங்கட்டுதல் | நீலச்சாயந் தோய்த்தல் ; பொய் கற்பித்தல் . |
| நீலச்சுறா | சுறாமீன்வகை . |
| நீலந்தன் | பாணன் . |
| நீலந்தீர்தல் | நீலநிறம் போடுதல் . |
| நீலநாகம் | கருநாகம் . |
| நீலநெல் | கார்நெல் . |
| நீலப்பறவை | நீலநிறமுள்ள மயில் . |
| நீலப்பைங்குடம் | பச்சைக்குப்பி . |
| நீலம் | நீலநிறம் ; நீலச்சாயம் ; மாணிக்கவகை ; ஒன்பான் மணியினுள் ஒன்று ; நீலக்கட்டி ; குபேரனது நிதியுள் ஒன்று ; கறுப்பு ; இருள் ; காண்க : கருங்குவளை ; நீல ஆடை ; நஞ்சு ; துரிசு ; கண்ணிலிடும் மை ; ஒரு மலைத் தொடர் ; பனைமரம் . |
| நீலம்பற்றவைத்தல் | ஆடைக்கு நீலமேற்றுதல் ; கதைகட்டுதல் . |
| நீலம்பாரித்தல் | நச்சுக் கடியால் உடம்பு நீலநிறமாதல் ; இருளடைதல் . |
| நீலமணி | நீலரத்தினம் ; கண்ணில் உள்ள கருமணி ; தென்னை . |
| நீலமணிவோன் | முருகக்கடவுள் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 676 | 677 | 678 | 679 | 680 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நீராகாரம் முதல் - நீலமணிவோன் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, நீர், ஒன்று, கருங்குவளை, சிறுநீர், துரிசு, நீலநிறம், நீராரத்தி, கறுப்பு, கால்வாய், நீலம், அவுரி, நீலக்கட்டி, நஞ்சு, மரவட்டைமரம், நீலமணி, மயில், மாணிக்கவகை, நோய்வகை, தண்ணீர், செல்லுங், நிலம், நீராடுதல், நீரில், முழுகுகை, நீராவிமண்டபம், சருக்கரைத், இறங்கும், காற்று, மிதமிஞ்சி, கலந்து, தன்மை, பேயாமணக்கு

