முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » நினைவு முதல் - நீட்டுப்போக்கு வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - நினைவு முதல் - நீட்டுப்போக்கு வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| நினைவு | எண்ணம் ; ஆலோசனை ; ஞாபகம் ; பாவனை ; நோக்கம் ; கவனம் ; தியானம் ; வருத்தம் ; ஞாபகக் குறிப்பு ; அரசர் கட்டளை . |
| நினைவுகூர்தல் | ஞாபகங்கொள்ளுதல் . |
| நினைவுகேடு | காண்க : நினைவுத்தப்பு . |
| நினைவுத்தடுமாற்றம் | காண்க : நினைவுத்தப்பு ; மயக்கம் ; பைத்தியம் . |
| நினைவுத்தப்பு | ஞாபகத்தவறு ; அறிவு அழிந்து போகை . |
| நினைவுவைத்தல் | மனம்வைத்தல் ; நினைத்தல் ; நன்றியின்பொருட்டேனும் அன்பினாலேனும் ஞாபகம்வைத்தல் ; விரும்புதல் . |
| நினைவோடுதல் | ஞாபகம் வருதல் . |
| நீ | ஒர் உயிர்மெய்யெழுத்து (ந்+ ஈ) ; முன்னிலை ஒருமைப் பெயர் . |
| நீக்கம் | நீங்குகை ; பிளப்பு ; நீளம் ; முடிவு ; தறுவாய் ; இடைப்பட்ட இடம் . |
| நீக்கல் | நீக்குதல் ; அழிக்கை ; மாறுபாடு ; தையல் இணைப்பு ; துளை . |
| நீக்கு | விலக்கு ; கழிவு ; பிளப்பு ; மீதி ; காண்க : நீக்கம் . |
| நீக்குதல் | ஒழித்தல் ; விடுவித்தல் ; கழித்தல் ; ஒதுக்குதல் ; அழித்தல் ; அகற்றுதல் ; பிரித்தல் ; திறத்தல் ; மாற்றுதல் ; கைவிடுதல் . |
| நீக்குப்போக்கு | இணக்கம் ; மரியாதை ; உதவி ; சாக்குப்போக்கு ; வழிவகை ; இடைவெளி ; இளைப்பாறுகை ; செயல்முறைமை . |
| நீகம் | தவளை ; மேகம் . |
| நீகாசம் | ஒப்பு ; உண்மை ; உறுதி . |
| நீகாமன் | காண்க : நீகான் . |
| நீகாரம் | பனி ; காண்க : ஆணவமலம் ; அவமதிப்பு |
| நீகான் | மாலுமி . |
| நீங்கல் | விலகுகை ; பிளப்பு ; புறம்பு . |
| நீங்கள் | முன்னிலைப் பன்மைப்பெயர் . |
| நீங்குதல் | பிரிதல் ; ஒழித்தல் ; கடத்தல் ; மாறுதல் ; விடுதலையாதல் ; தள்ளுண்ணுதல் ; நடத்தல் ; ஒழிதல் ; நீந்துதல் ; பிளவுபடுதல் ; விரிந்து அகலுதல் ; சிதறுதல் . |
| நீச்சல் | நீந்துகை ; வெள்ளம் ; கோவணம் . |
| நீச்சு | நீந்துதல் ; நீந்தக்கூடிய ஆழம் ; வெள்ளம் ; மீன்நாற்றம் . |
| நீச்சுத்தண்ணீர் | நீந்தக்கூடிய ஆழமுள்ள நீர் . |
| நீசக்கிரகம் | இராகுகேதுக்கள் ; நீசத்தானத்தில் இருக்கும் கோள் . |
| நீசகம் | நீர் . |
| நீசசாதி | இழிந்த குலம் . |
| நீசத்தானம் | ஒரு கோளின் உச்சத்திற்கு ஏழாமிடம் . |
| நீசப்படுதல் | ஈனப்படுதல் ; நீசத்தானமுறுதல் . |
| நீசம் | இழிவு ; பள்ளம் ; தாழ்ச்சி ; கோளின் உச்சத்திற்கு ஏழாமிடம் ; கொடுமை ; பொருத்தமில்லாத ஆண்பெண்களின் புணர்ச்சி ; மஞ்சள் . |
| நீசவாகனம் | கழுதை . |
| நீசன் | இழிந்தோன் ; நீசத்தானத்தில் இருக்கும் கோள் ; அறிவில்லாதவன் . |
| நீசாரம் | கம்பளிப்புடைவை ; திரைச்சீலை . |
| நீஞ்சுதல் | காண்க : நீந்துதல் ; பெருஞ்செயல்களை முடிக்கப் பெருமுயற்சிசெய்தல் ; மிகுதியாகக் குடித்தல் . |
| நீட்சி | நீளம் ; ஓசையின் நீட்சி ; நீட்டுகை ; தாமதம் . |
| நீட்சிமை | நீளம் ; ஓசையின் நீட்சி ; நீட்டுகை ; தாமதம் . |
| நீட்டம் | நீளம் ; ஓசையின் நீட்சி ; நீட்டுகை ; தாமதம் . |
| நீட்டல் | நீட்டுதல் ; குற்றுயிரை நெட்டுயிராக இசைக்கும் செய்யுள் விகாரவகை ; காண்க : நீட்டலளவு(வை) ; சடையை நீட்டி வளர்த்தல் ; பெருங்கொடை . |
| நீட்டலளவு | அளவை நான்களுள் நீட்டியளக்கும் முழம் காதம் போன்ற அளவு . |
| நீட்டலளவை | அளவை நான்களுள் நீட்டியளக்கும் முழம் காதம் போன்ற அளவு . |
| நீட்டாணம் | குழம்பு . |
| நீட்டாள் | நெடியவன் ; வேலையாள் . |
| நீட்டித்தல் | நீளச்செய்தல் ; காண்க : நீட்டிப்பேசுதல் ; காலந்தாழ்த்துதல் ; முடித்தல் ; நெடுங்காலம் நிலைத்தல் . |
| நீட்டிநடத்தல் | எட்டி நடத்தல் ; மெல்ல நடத்தல் . |
| நீட்டிப்பேசுதல் | விரித்துச் சொல்லுதல் ; சொற்களை நீட்டி உச்சரித்துப் பேசுதல் . |
| நீட்டிப்போடுதல் | காலை எட்டிவைத்தல் ; காலந் தாழ்த்துதல் . |
| நீட்டியளத்தல் | ஓரிடத்தையேனும் பொருளையேனும் கோல் முதலிய கருவிகொண்டு அளக்கை . |
| நீட்டு | நீளம் ; தூரம் ; திருமுக ஓலை . |
| நீட்டுதல் | நீளச்செய்தல் ; முடக்காது நேர் நிறுத்தல் ; நைவேத்தியம் முதலியவை அளித்தல் ; கொடுத்தல் ; செருகுதல் ; நீளப்பேசுதல் ; இசை முதலியவற்றில் காலம் நீட்டித்தல் ; தாமதித்தல் . |
| நீட்டுப்போக்கு | நீளவாட்டு ; திறமை ; உயரம் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 672 | 673 | 674 | 675 | 676 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நினைவு முதல் - நீட்டுப்போக்கு வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, நீளம், நீட்சி, நீட்டுகை, ஓசையின், தாமதம், நடத்தல், நீந்துதல், நினைவுத்தப்பு, பிளப்பு, நீட்டி, நீட்டலளவு, நீட்டுதல், அளவை, நீட்டிப்பேசுதல், நான்களுள், நீளச்செய்தல், நீட்டித்தல், காதம், முழம், நீட்டியளக்கும், அளவு, கோளின், நீகான், வெள்ளம், ஒழித்தல், நீக்குதல், நீக்கம், நீந்தக்கூடிய, நீர், ஞாபகம், உச்சத்திற்கு, கோள், இருக்கும், நீசத்தானத்தில், ஏழாமிடம்

