முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » நிறைகுணம் முதல் - நினைப்பூட்டுதல் வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - நிறைகுணம் முதல் - நினைப்பூட்டுதல் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| நிறைகுணம் | பொறுமைக்குணம் . |
| நிறைகோல் | துலாக்கோல் . |
| நிறைசூல் | காண்க : நிறைகர்ப்பம் ; கருக் கொண்டுள்ள மேகம் ; மிகுதியாகப் பூக்கும் நிலை . |
| நிறைசெல்வம் | நிரம்பிய சம்பத்து . |
| நிறைசெல்வன் | நிறைந்த செல்வமுடைய குபேரன் . |
| நிறைத்தல் | நிரம்பச் செய்தல் ; பரவச்செய்தல் ; திணித்தல் . |
| நிறைதருதூறு | சீந்திற்கொடி . |
| நிறைதல் | நிரம்புதல் ; மிகுதல் ; பரவியிருத்தல் ; மனநிறைவாதல் ; அமைதியாதல் . |
| நிறைந்தகுணம் | திருப்தியுள்ள மனத்தன்மை ; மகிழ்ச்சியுள்ள சித்தம் . |
| நிறைந்தமனம் | திருப்தியுள்ள மனத்தன்மை ; மகிழ்ச்சியுள்ள சித்தம் . |
| நிறைந்தமனிதன் | உயர்குணமுடையோன் . |
| நிறைநரம்பு | ஏழு சுரமுள்ள பண் . |
| நிறைநாழி | மங்கல அறிகுறியாக நெல் நிரப்பி வைக்கப்பட்ட படி . |
| நிறைநாழிவைத்தல் | திருமணம் முதலியவற்றில் மங்கலக் குறியாகப் படியில் நெல்லை நிரம்பவைத்தல் . |
| நிறைநிலவு | முழுத்திங்கள் . |
| நிறைநீர்வேலி | பேய்த்தேர் ; உடைகுளம் . |
| நிறைபாரம் | கனத்த சுமை ; நிரம்ப உண்ணுகை ; அணி , அம்மை முதலியன உடல் முழுதும் நிரம்பியிருக்கை . |
| நிறைபூசல் | பேரொலி . |
| நிறைமணி | விநாயகருக்குச் செய்யப்படும் திருமஞ்சனம் . |
| நிறைமதி | முழுநிலா ; முழுஅறிவு . |
| நிறைமை | மனத்தைக் கற்புவழியில் நிறுத்துகை . |
| நிறைமொழி | பலிக்கும் வாக்கு ; மந்திரம் . |
| நிறைமொழியாளர் | முனிவர் ; புலவர் . |
| நிறைய | நிரம்ப . |
| நிறையவை | எல்லாப் பொருளையும் அறிந்து எதிர்வரும் மொழிகளை எடுத்துரைக்க வல்லவர் குழுமிய சபை . |
| நிறையழிதல் | கற்பழிதல் ; ஒழுக்கங்கெடுதல் ; யானை மதம்பிடித்தல் . |
| நிறையறிகருவி | கட்டளைக்கல் ; தராசு . |
| நிறையுரை | எடையும் மாற்றும் . |
| நிறையெடுத்தல் | நிறுத்தல் . |
| நிறைவு | முழுமை ; மிகுதி ; நிரப்புகை ; மன நிறைவு ; மகிழ்ச்சி ; மாட்சிமை ; வீடுபேறு . |
| நிறைவேற்றம் | முற்றுகை ; நடத்துகை . |
| நிறைவேற்றுதல் | முற்றச்செய்தல் ; நடத்துதல் . |
| நிறைவேறுதல் | முற்றுதல் ; நற்கதியடைதல் . |
| நின் | உனது . |
| நின்மலம் | மாசின்மை . |
| நின்மலன் | அழுக்கற்றவனான கடவுள் ; அருகன் . |
| நின்மலி | காண்க : வில்வம் . |
| நின்மாலியம் | பூசித்துக் கழித்த மலர் முதலிய பொருள் . |
| நின்மதி | உண்டாக்குகை ; தொடக்கம் . |
| நின்மூடன் | காண்க : நிர்மூடன் . |
| நின்றதிருக்கோலம் | திருமால் திருக்கோலம் மூன்றனுள் நின்றருளும் நிலை . |
| நின்றது | நிலைத்த பொருள் ; தாவரம் ; எஞ்சியது . |
| நின்றநிலை | பிடிவாதம் ; ஒரே நிலை ; நிற்கும் நிலை . |
| நின்றவடி | நின்ற இடம் ; காலடி . |
| நின்றாடல் | நின்றாடும் தெய்வக் கூத்துவகை . |
| நின்றாற்சிணுங்கி | காண்க : நின்றுசிணுங்கி . |
| நின்று | எப்பொழுதும் ; ஐந்தாம் வேற்றுமைப் பொருள்பட வரும் ஒர் இடைச்சொல் . |
| நின்றுசிணுங்கி | சிறியாநங்கைச்செடி . |
| நின்றுபயனின்மை | நூற்குற்றம் பத்தனுள் ஒன்று . |
| நின்றுபோதல் | வேலை முதலியன நடவாது போதல் . |
| நின்றுவற்றுதல் | சொல்லும் சொற்றொடரும் இருந்தும் பயனிலவாதல் . |
| நின்றேத்துவார் | நின்றுகொண்டு அரசனின் புகழ் பாடுவார் . |
| நின்றை | அசைநிலை ; திருநின்றவூர் . |
| நின்னாமன் | பெயரில்லாத அருகன் ; சிவன் . |
| நினதம் | காண்க : நினாதம் . |
| நினவ | உன்னுடையன . |
| நினாதம் | ஒலி . |
| நினைத்தல் | கருதுதல் ; ஞாபகத்திற்கொணர்தல் ; ஆராய்தல் ; தியானித்தல் ; அறிதல் ; நோக்கமாகக்கொள்ளுதல் ; பாவித்தல் ; மனனம் . |
| நினைதல் | கருதுதல் ; ஞாபகத்திற்கொணர்தல் ; ஆராய்தல் ; தியானித்தல் ; அறிதல் ; நோக்கமாகக்கொள்ளுதல் ; பாவித்தல் ; மனனம் . |
| நினைப்பணி | ஒரு பொருள் ஒப்புமையாற் பிறிதொன்றனை ஞாபகப்படுத்துவதாகக் கூறும் அணிவகை . |
| நினைப்பாயிருத்தல் | கவனமாயிருத்தல் ; மனத்தை ஒருமுகப்படுத்துதல் . |
| நினைப்பாளி | நினைவாற்றலுள்ளோன் . |
| நினைப்பிடுதல் | ஆணையிடுதல் . |
| நினைப்பு | எண்ணம் ; அறிவுரை ; நினைவு ; பாவனை ; நோக்கம் ; கவனம் ; தியானம் ; மனவுறுதி . |
| நினைப்பூட்டுதல் | ஞாபகப்படுத்துதல் ; அறிவுறுத்துதல் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 671 | 672 | 673 | 674 | 675 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நிறைகுணம் முதல் - நினைப்பூட்டுதல் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, நிலை, பொருள், ஆராய்தல், ஞாபகத்திற்கொணர்தல், கருதுதல், தியானித்தல், அறிதல், மனனம், பாவித்தல், நோக்கமாகக்கொள்ளுதல், நினாதம், நின்றுசிணுங்கி, நிரம்ப, சித்தம், மகிழ்ச்சியுள்ள, முதலியன, நிறைவு, திருப்தியுள்ள, அருகன், மனத்தன்மை

