தமிழ் - தமிழ் அகரமுதலி - நிழலாடுதல் முதல் - நிறைகுடம் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| நிழலாடுதல் | எதிரொளித்தல் ; எதிருருத் தோன்றுமாறு இருத்தல் ; ஆள் நடமாடுவதால் ஏற்படும் நிழலின் அசைவு ; நிழல்மாத்திரம் தெரியும்படி பார்வை குன்றுதல் . |
| நிழலி | ஒளி ; நீதி ; காற்று ; நோய் . |
| நிழலிடுதல் | நிழலைக் கொடுத்தல் ; எதிரொளி ; ஒளிவிடுதல் . |
| நிழலுதல் | நிழல்செய்தல் ; காப்பமைதல் ; ஒளி செய்தல் ; எதிரொளித்தல் . |
| நிழலுலர்த்தல் | நிழலில் மருந்து முதலியவற்றைக் காயவைத்தல் . |
| நிழலொதுக்கு | இளைப்பாறுதற்குரிய நிழலிடம் . |
| நிழற்சரிவு | நிழலின் சாய்வு ; சாயங்காலம் . |
| நிழற்சாய்வு | காண்க : நிழலொதுக்கு . |
| நிழற்செய்தல் | நிழல்தருதல் . |
| நிழற்பாடு | நிழல்படுகை . |
| நிழற்பாவை | திரைச்சீலைக்குள் வைத்து ஆட்டும் பாவை . |
| நிழற்றல் | நிரம்பா மென்சொல் . |
| நிழற்றாங்கல் | பந்தல் . |
| நிழற்றுதல் | ஒளிவிடுதல் ; நிழல்செய்தல் ; மணி முதலியன அடித்தல் ; அடங்குதல் ; காத்து அளித்தல் . |
| நிழறுதல் | ஒளிவிடுதல் . |
| நிளுதனம் | அழிக்கை . |
| நிற்காரம் | இகழ்ச்சி . |
| நிற்பத்தி | இடம் . |
| நிற்பது | நிலைத்திணைப்பொருள் , தாவரம் . |
| நிற்பாக்கியம் | ஏதுமின்மை ; நற்பேறின்மை . |
| நிற்பாட்டுதல் | நிறுத்துதல் ; நடுதல் . |
| நிற்புதம் | பதினாயிரங்கோடி . |
| நிற்றல் | நிற்கை . |
| நிற்றலும் | எந்நாளும் . |
| நிறக்கேடு | புகழ்க்குறைவு . |
| நிறங்குணம் | இயல்பு . |
| நிறங்கொடுத்தல் | நிறமூட்டுதல் ; மேனியாதல் ; நிறமுடைத்தாதல் ; ஒளிரச்செய்தல் . |
| நிறத்தல் | நிறம்பிடித்தல் ; நிறம்முற்றுதல் ; ஒளிர்தல் ; பயனளித்தல் . |
| நிறம் | வண்ணம் ; சாயம் ; இயல்பு ; ஒளி ; புகழ் ; இசை ; மார்பு ; நடுவிடம் ; உயர்நிலை ; உடல் ; தோல் . |
| நிறம்பெயர்தல் | நன்னிறமாதல் ; நிறம் வேறுபடுதல் . |
| நிறவாளத்தி | இசையின் ஆலாபனவகை . |
| நிறுத்தசொல் | காண்க : நிலைமொழி . |
| நிறுத்தம் | நிறுத்துகை ; செங்குத்தாக நிறுத்தல் . |
| நிறுத்தல் | நிலைநிறுத்துதல் ; எடைபார்த்தல் ; தீர்மானித்தல் ; படைத்தல் ; வைத்தல் ; தடை செய்தல் . |
| நிறுத்தலளவை | நிறையளவு ; நிறுத்தல் வாய்பாடு . |
| நிறுத்தளத்தல் | நிறையளவு ; நிறுத்தல் வாய்பாடு . |
| நிறுத்திக்கொள்ளுதல் | காண்க : நிறுத்தல் ; நிறைவேற்றுதல் ; எதிர்பார்த்தல் . |
| நிறுத்திச்சொல்லுதல் | விரைவின்றித் தெளிவாய்ச் சொல்லுதல் . |
| நிறுத்திப்பிடித்தல் | கண்டிப்பாதல் ; சிறு குற்றங்களைக் கவனித்தல் ; தூக்கிப்பிடித்தல் . |
| நிறுத்தியெழுதுதல் | எழுத்துச் செவ்வையாயிருக்கும்படி மெல்ல எழுதல் ; இடம்விட்டெழுதல் ; எழுத்துகள் சாய்வின்றி நிமிர்ந்துநிற்கும்படி எழுதுதல் . |
| நிறுத்து | இசைப்பாட்டின் சிறுபகுதி . |
| நிறுத்துக்கட்டுதல் | அளவிடுதல் . |
| நிறுத்துதல் | நேராக நிற்கச்செய்தல் ; நிலைநாட்டுதல் ; தீர்மானித்தல் ; மனத்தை ஒரு நிலையில் இருத்துதல் ; அமர்த்துதல் ; ஆதரித்தல் ; சீர்திருத்துதல் ; தழுவிக்கொள்ளுதல் ; ஒப்புவித்தல் ; மேற்செல்லாதிருக்கச்செய்தல் ; தள்ளிவைத்தல் ; படிக்கும்போதும் பாடும்போதும் உரியவிடங்களில் நிறுத்துதல் ; செய்யாதொழித்தல் ; அவித்தல் . |
| நிறுத்துப்பார்த்தல் | எடைபோட்டுப் பார்த்தல் ; ஆராய்தல் ; ஒப்பிடுதல் . |
| நிறுதிட்டம் | நேரே நிற்கை ; விறைப்பு . |
| நிறுப்பான் | துலா ; துலாராசி . |
| நிறுபூசல் | பேரொலி ; மும்முரம் . |
| நிறுவுதல் | காண்க : நிறுத்துதல் . |
| நிறை | பூர்த்தி ; எண்வகைப் பாடற் பயன்களுள் ஒன்று ; அடுத்தடுத்து வரும் சுரம் ; இரண்டு தாக்குடைய தாளவகை ; நிறுக்கை ; தராசு ; துலாராசி ; எடை ; நூறு பலம்கொணட அளவு ; வரையறை ; நிறுத்துகை ; வைத்து அமைக்கை ; கற்புவழி நிற்றல் ; ஆடூஉக் குணம் நான்கனுள் காப்பன காத்துக் கடிவன கடியும் திண்மை ; மனவடக்கம் ; கற்பு ; சூளுரை ; வலி ; அறிவு ; மறைபிறரறியாமை ; அழிவின்மை ; மாட்சிமை ; நீதி ; மிகுதி ; கவனம் ; நீர்ச்சால் . |
| நிறைகட்டுதல் | தடைகட்டுதல் ; மதிப்புக்குத் தக்கவாறு பண்டமாற்றுச்செய்தல் . |
| நிறைகர்ப்பம் | நிறைசூல் ; பூரணகருப்பம் . |
| நிறைகர்ப்பிணி | நிறைசூலி ; பூரணகருப்பமுடையவள் . |
| நிறைகல் | படிக்கல் . |
| நிறைகலை | முழுக்கூறு ; தெய்வத்திருமேனியின் முகத்திற் காணும் முழு அழகு ; முழுநிலா ; தெய்வ ஆவேசம் ; முழுவெறி ; முழுப்பிறப்பு . |
| நிறைகுடம் | பூரணகும்பம் ; கல்வி , செல்வம் முதலியன நிறையப் பெறறும் பெருமிதங் காட்டாதவன் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 670 | 671 | 672 | 673 | 674 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நிழலாடுதல் முதல் - நிறைகுடம் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், நிறுத்தல், காண்க, நிறுத்துதல், ஒளிவிடுதல், நிறுத்துகை, நிறம், நிழலின், தீர்மானித்தல், துலாராசி, வாய்பாடு, நிறையளவு, இயல்பு, நிற்றல், நிழலொதுக்கு, செய்தல், நிழல்செய்தல், நீதி, வைத்து, எதிரொளித்தல், முதலியன, நிற்கை

