முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » நிலைமண்டிலம் முதல் - நிழலாட்டம் வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - நிலைமண்டிலம் முதல் - நிழலாட்டம் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| நிலைமண்டிலம் | சீர்கள் தம்முள் அளவொத்த அடிகளை உடைய அகவற்பாவகை . |
| நிலைமண்டிலவாசிரியப்பா | சீர்கள் தம்முள் அளவொத்த அடிகளை உடைய அகவற்பாவகை . |
| நிலைமண்டுதல் | அயலூரில் நீடித்துத் தங்குதல் ; ஒரிடத்தைப் பற்றிக்கொள்ளுதல் . |
| நிலைமாறுதல் | இடமாறுதல் ; சொல்லில் எழுத்துக்கள் இடம்பிறழ்தல் . |
| நிலைமை | இயல்பு ; வாழ்க்கைநிலை ; நிலை ; நிலவரம் திண்மை ; உறுதி ; உண்மை ; புகழ் ; வீடுபேறு ; நிலவுடைமை . |
| நிலைமைக்காரன் | நிலக்கிழான் ; நேர்மையுள்ளவன் . |
| நிலைமொழி | பதப்புணர்சிக்கண் முதலில் நிற்கும் சொல் . |
| நிலையகம் | மனை . |
| நிலையங்கி | முகம்மதியர் அணியும் நீண்ட சட்டை ; தெய்வத்திருமேனிக்குச் சாத்தும் கவசம் ; தெய்வத்திருமேனிக்குச் செய்யும் முழு அலங்காரம் . |
| நிலையம் | இலக்கு ; தங்குமிடம் ; கோயில் ; மருத நிலத்தூர் ; படி ; கூத்து . |
| நிலையல் | நிற்கை . |
| நிலையழிதல் | காண்க : நிலைகுலைதல் . |
| நிலையற்றவன் | உறுதியில்லாதவன் ; தகுதி இல்லாதவன் . |
| நிலையறிதல் | எண்ணமறிதல் . |
| நிலையாடி | நெய்வார் கருவியுள் ஒன்று ; காண்க : நிலைக்கண்ணாடி . |
| நிலையாமை | நிலைத்துநில்லாமை ; உறுதியின்மை , உறுதியற்ற தன்மை ; அழிந்துபடும் தன்மை . |
| நிலையாறுதல் | அமைதியுறுதல் . |
| நிலையிடுதல் | காண்க : நிலைநிறுத்துதல் ; அளந்தறிதல் . |
| நிலையியற்பொருள் | காண்க : நிலைத்திணை . |
| நிலையுடைக்கட்டை | முளையாணி . |
| நிலையுதல் | நிலைபெறுகை . |
| நிலையுமல் | தொம்பை , மூங்கிலாலான நெற்குதிர் ; கூடை . |
| நிலையுரல் | நிலத்திற் புதைத்துவைக்கும் பெரிய உரல் . |
| நிலையூன்றுதல் | மரம் முதலியன வேரூன்றல் ; உறுதிப்படுதல் . |
| நிலையெடுத்தல் | பெருமைபெற்று விளங்குதல் . |
| நிலைவரம் | நிலைபேறு ; உறுதி ; நிலைமை . |
| நிலைவரி | இசைப்பாட்டுவகை . |
| நிலைவிடுதல் | மனைக்கு வாயில்நிலை அமைத்தல் . |
| நிலைவிளக்கு | குத்துவிளக்கு ; மணவிழாவில் ஏற்றும் விளக்கு ; நிலைச்சட்டத்தில் உள்ள விளக்கு . |
| நிவகம் | கூட்டம் . |
| நிவசதி | வீடு . |
| நிவசனம் | ஆடை . |
| நிவத்தல் | உயர்தல் ; படர்தல் ; வளர்தல் ; மேலாதல் ; மேல்வழிதல் ; தோன்றதல் . |
| நிவந்தக்காரர் | கோயிற்றொண்டு செய்வோர் . |
| நிவந்தம் | கோயிற்றொண்டு ; கோயிற்செலவு ; நிபந்தனை ; வேலைத்திட்டம் ; கடவுளை வழிபடும் இடம் ; சங்கிரகநூல் . |
| நிவப்பு | உயரம் . |
| நிவப்புத்தூக்கு | ஐஞ்சீருள்ள இசைப்பாட்டு . |
| நிவம் | தோளின் மேலிடம் . |
| நிவர்த்தனம் | திரும்புதல் ; போக்குதல் . |
| நிவர்த்தி | காண்க : நிவிர்த்தி |
| நிவர்தல் | ஓங்குதல் . |
| நிவறுதல் | பொடியாதல் ; மொய்த்தல் . |
| நிவாசம் | தெய்வம் அல்லது பெரியார் வாழிடம் . |
| நிவாதகவசர் | காற்றுப்புகாத கவசத்தை உடையவர் . |
| நிவாதம் | காற்றின்மை . |
| நிவாரணம் | தடுக்கை ; தடை ; ஒழிப்பு ; அறுவகைப்பட்ட துன்பநீக்கம் . |
| நிவாரம் | தடை . |
| நிவி | மாமரம் . |
| நிவிர்த்தன் | துறவி . |
| நிவிர்த்தி | விடுதலை ; காண்க : நிவிர்த்திகலை ; துறவு ; ஒழிப்பு ; போக்கு . |
| நிவிர்த்திகலை | ஐந்துவகைக் கலையுள் ஆன்மாக்களைத் தளையினின்று விடுவிப்பதாகிய கலை . |
| நிவேசம் | வீடு . |
| நிவேசனம் | இடம் ; வீடு ; ஊர் ; 2400 சதர அடி கொண்ட மனையளவு ; |
| நிவேத்தியம் | தெய்வப் படையல் . |
| நிவேதனம் | கடவுளுக்குப் படைக்கும் அமுது ; ஒப்புவிக்கை . |
| நிவேதித்தல் | நைவேத்தியஞ் செய்தல் . |
| நிழத்துதல் | முன்னுள்ள நிலையினின்றும் நுணுகுதல் ; தின்றழித்தல் ; இல்லையாக்குதல் . |
| நிழல் | சாயை ; எதிரொளி ; அச்சு ; குளிர்ச்சி ; அருள் ; ஒளி ; நீதி ; புகலிடம் ; கொடை ; செல்வம் ; மரக்கொம்பு ; நோய் ; பேய் . |
| நிழல்காண்மண்டிலம் | நிழலை உமிழும் கண்ணாடி . |
| நிழல்விழுதல் | நிழல்வீசுதல் ; நிழல்படிதல் . |
| நிழலல் | காண்க : நிழலுதல் . |
| நிழலாட்டம் | ஓவியத்தில் மங்கின பக்கம் ; மாதிரி ; மெய்ம்மையற்றது ; தோற்பாவையாட்டம் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 669 | 670 | 671 | 672 | 673 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நிலைமண்டிலம் முதல் - நிழலாட்டம் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, வீடு, விளக்கு, தன்மை, கோயிற்றொண்டு, இடம், நிவிர்த்திகலை, ஒழிப்பு, நிவிர்த்தி, தெய்வத்திருமேனிக்குச், அளவொத்த, தம்முள், சீர்கள், அடிகளை, உடைய, உறுதி, நிலைமை, அகவற்பாவகை, சொல்

