முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » நிலாமண்டபம் முதல் - நிலைமடக்கு வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - நிலாமண்டபம் முதல் - நிலைமடக்கு வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| நிலாமண்டபம் | காண்க : நிலாமுற்றம் . |
| நிலாமண்டலம் | சந்திரமண்டலம் . |
| நிலாமணக்கு | பூண்டுவகை . |
| நிலாமணி | காண்க : சந்திரகாந்தக்கல் . |
| நிலாமாடம் | காண்க : நிலாமுற்றம் . |
| நிலாமுக்கி | நிலவின் கதிர்களை உண்டு வாழும் பறவைவகை ; சகோரப்புள் . |
| நிலாமுகி | நிலவின் கதிர்களை உண்டு வாழும் பறவைவகை ; சகோரப்புள் . |
| நிலாமுற்றம் | நிலாக்காலத்து உலவுவதற்காக வீட்டின்மேல் அமைத்த திறந்தவெளி முற்றம் . |
| நிலாவுதல் | நிலவுதல் ; நிலைத்திருத்தல் ; தியானித்தல் ; ஒப்பாதல் . |
| நிலுவை | தங்குகை ; வரவுபாக்கி . |
| நிலுவைக்காரன் | கடன்காரன் ; நிலுவை வசூலிப்பவன் . |
| நிலை | நிற்கை ; உறுதி ; தன்மை ; நிலைமை ; தொழில் ; இடம் ; தங்குமிடம் ; பூமி ; காண்க : நிலைத்திணை ; தேர்த்தட்டு ; கதவுநிலை ; தூண் ; விளக்குத்தண்டு ; நெறி ; வழக்கு ; ஆசிரமம் ; குலம் ; மரபுரிமை ; இசைப்பாட்டு வகை ; பொழுது ; முகூர்த்தம் ; ஒரு நிலவளவு வகை ; ஒருவன் நிற்கக்கூடிய நீராழம் ; பசு ஒரு தடவை கழிக்குஞ் சாணி ; அணிகலத் தொங்கல் . |
| நிலைக்கட்டுதல் | நிலைக்கச்செய்தல் . |
| நிலைக்கடகம் | பெருங்கூடை . |
| நிலைக்கண்ணாடி | ஓரிடத்தில் நாட்டப்பட்ட முகம்பார்க்கும் பெரிய கண்ணாடி . |
| நிலைக்கதவம் | நிலையிலமைந்த கதவு . |
| நிலைக்கல் | ஆட்டுக்கோரோசனை ; நிலைப்படியின் கீழுள்ள கல் . |
| நிலைக்களப்போலி | ஓர் எழுத்து நின்றவிடத்தில் அதற்கு ஈடாய் வந்துநிற்கும் எழுத்து . |
| நிலைக்களம் | தங்குமிடம் . |
| நிலைக்கால் | கட்டில் முதலியவற்றின் கால் . |
| நிலைக்கிடை | நாட்டியத்தில் உட்காரும் நிலை . |
| நிலைக்குடி | பழங்குடி ; நிலக்கிழாரின் நிலைத்த குடிகள் . |
| நிலைக்குத்துதல் | இறக்கும்போது விழி முதலியன அசைவின்றியிருத்தல் . |
| நிலைகலங்குதல் | காண்க : நிலைகுலைதல் . |
| நிலைகுலைத்தல் | நிலைமையழித்தல் ; கற்பழித்தல் ; ஒழுக்கங்கெடுத்தல் ; சிதறவடித்தல் ; தயங்கச்செய்தல் . |
| நிலைகுலைதல் | நிலைமை தவறுதல் ; நெறி பிறழ்தல் ; தயங்குதல் ; சிதறுண்ணுதல் . |
| நிலைகெடுதல் | தடுமாறல் . |
| நிலைகேடு | கெட்டுப்போன நிலைமை . |
| நிலைகொள்ளுதல் | உறுதியாதல் ; தன்னிலையடைதல் ; நிற்குமளவு ஆழமாதல் . |
| நிலைகோலுதல் | அணிவகுத்தல் ; இடந்தேடுதல் . |
| நிலைச்செண்டு | நிலத்தில் நின்று எறிந்து விளையாடும் பந்து . |
| நிலைச்செரு | இடையறாப் போர் . |
| நிலைசெல்லுதல் | காண்க : நிலைகொள்ளுதல் . |
| நிலைத்தல் | நிலைபெறுதல் ; தாமதித்தல் ; நீர் ஆள் அளவுக்கு இருத்தல் . |
| நிலைத்தானம் | கோயில் . |
| நிலைத்திணை | அசையாப்பொருள் . |
| நிலைத்துறை | வழக்கமாய் இறங்கும் நிலையாழமுள்ள நீர்த்துறை . |
| நிலைத்தேர் | அலங்காரம் செய்து ஓரிடத்தில் நிலையாக நிறுத்தப்பட்டிருக்குந் தேர் . |
| நிலைதடுமாறுதல் | காண்க : நிலைகுலைதல் . |
| நிலைதல் | நிலைத்துநிற்றல் . |
| நிலைதளம்புதல் | நிலையற்றிருத்தல் ; கலக்கமுற்றிருத்தல் ; நிலைமை தவறுதல் ; நெறி வழுவுதல் ; காவாது கிடத்தல் . |
| நிலைதிரிதல் | முறைமை கெடுதல் . |
| நிலைநாட்டுதல் | நிலைத்திருக்கச்செய்தல் ; தொடங்குதல் . |
| நிலைநிற்றல் | கொள்கையை உறுதியாய்க் கடைப்பிடித்தல் ; நிலையாய் தங்குதல் |
| நிலைநிறுத்துதல் | தொடங்குதல் ; முடிவாய் மெய்ப்பித்தல் . |
| நிலைநீர் | ஓட்டமற்ற நீர் ; கடல் . |
| நிலைநீர்ப்பாட்டம் | ஏரிப் பாய்ச்சல் வரி . |
| நிலைப்படி | கதவுநிலையின் அடிப்படி . |
| நிலைப்படுத்துதல் | காண்க : நிலைநிறுத்துதல் ; உறுதியாக்குதல் . |
| நிலைப்படுதல் | நிலைநிற்றல் ; உறுதியாதல் . |
| நிலைப்படை | காவலுக்குத் தலைநகரிலேயே நிறுத்திவைக்கப்பட்ட சேனை . |
| நிலைப்பதம் | காண்க : நிலைமொழி . |
| நிலைப்பாடு | நிலைமை ; உறுதிப்பாடு . |
| நிலைப்பு | நிலை ; உறுதி ; விடாமுயற்சி . |
| நிலைப்பூட்டு | கதவில் தைக்கப்பட்ட பூட்டு வகை . |
| நிலைபிடித்தல் | தொழில் முதலியன பெற்று நிலையாயிருத்தல் ; குறிக்கோளை அடைதல் . |
| நிலைபெறுத்தல் | காண்க : நிலைநிறுத்துதல் ; காத்தல் . |
| நிலைபெறுதல் | நிலையாய்த் தங்குதல் ; துன்பமற்ற நிலைமையை அடைதல் ; நீடித்தல் ; ஒன்று நிற்கக்கூடியவளவு ஆழமுடைத்தாதல் . |
| நிலைபேறு | நிலைப்பிடம் ; உறுதி ; தூண் ; மானம் ; வீடுபேறு . |
| நிலைபோடுதல் | தொடங்குதல் . |
| நிலைமடக்கு | அணிவகை . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 668 | 669 | 670 | 671 | 672 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நிலாமண்டபம் முதல் - நிலைமடக்கு வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, நிலைமை, நிலை, உறுதி, நிலாமுற்றம், தொடங்குதல், நிலைநிறுத்துதல், நிலைகுலைதல், நெறி, நிலைகொள்ளுதல், தவறுதல், உறுதியாதல், நிலைபெறுதல், அடைதல், தங்குதல், நிலைநிற்றல், நீர், முதலியன, தூண், வாழும், பறவைவகை, உண்டு, கதிர்களை, நிலவின், சகோரப்புள், நிலுவை, ஓரிடத்தில், நிலைத்திணை, தங்குமிடம், தொழில், எழுத்து

