தமிழ் - தமிழ் அகரமுதலி - நிலக்குழி முதல் - நிலாத்திரி வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| நிலக்குழி | உரக்குழி ; எழுத்துக்குழி . |
| நிலக்கூந்தல் | எலிச்செவிப்பூடு . |
| நிலக்கொடி | காண்க : நிலமகள் |
| நிலக்கொதி | சூரிய வெப்பத்தால் பூமியினின்று எழும் வெப்பம் . |
| நிலக்கொதிப்பு | சூரிய வெப்பத்தால் பூமியினின்று எழும் வெப்பம் . |
| நிலச்சாந்து | சுண்ணாக்காரை ; மண்ணைக்கொண்டு குழந்தை நெற்றியில் இடும் பொட்டு . |
| நிலச்சார்பு | பூமியின் தன்மை ; நிலவளம் . |
| நிலத்தழல் | காண்க : நிலக்கொதிப்பு |
| நிலத்தாமரை | ரோசாமலர் . |
| நிலத்தி | நுளம்பு . |
| நிலத்துளக்கு | நிலநடுக்கம் ; பூகம்பம் . |
| நிலத்துளசி | துளசிவகை . |
| நிலத்தெய்வம் | நிலமகள் ; ஐந்திணைக்குரிய தெய்வங்கள் . |
| நிலந்தட்டி | நிலத்தைச் சமணாக்கும் பலகை ; கடல் மீன் வகை . |
| நிலந்தரஞ்செய்தல் | முற்றும் அழித்தல் . |
| நிலந்தெளிதல் | பொழுதுவிடிகை . |
| நிலநடுக்கம் | பூமி அதிர்வு ; பூகம்பம் . |
| நிலப்பரப்பு | ஒரு நிலஅளவைவகை ; நிலத்தின் அளவு ; பூமியின் மொத்த நீள அகலம் . |
| நிலப்பலா | வேர்ப்பலா . |
| நிலப்பனை | மருந்துச்செடிவகை . |
| நிலப்பாகல் | பாகல்வகை . |
| நிலப்பாலை | சிறுமரவகை . |
| நிலப்பாவாடை | காண்க : நடைபாவாடை . |
| நிலப்பிரயோசனம் | நிலவிளைவு . |
| நிலப்பிளப்பு | கமர் ; வெடிப்பு . |
| நிலப்பூ | புற்புதர்களிலுண்டாகும் பூ . |
| நிலப்பூச்சி | பூச்சிவகை . |
| நிலப்பெயர் | நிலம்பற்றி ஒருவனுக்கிடும் பெயர் . |
| நிலப்பெயர்ச்சி | இடம் மாறுகை . |
| நிலப்பொட்டு | மண்ணைத் தேய்த்து இடுந் திலகம் ; ஒரு காளான்வகை . |
| நிலப்போங்கு | நிலத்தன்மை . |
| நிலபுலம் | நன்செய் புன்செய் ; விளைநிலமும் தோப்புகளும் ; பல்வகை நிலம் . |
| நிலம் | தரை ; மண் ; பூமி ; இடம் ; வயல் ; பதவி ; நிலத்திலுள்ளார் ; எழுத்து அசை சீர்களாகிய இசைப்பாட்டின் தானம் ; விடயம் ; மேன்மாடம் ; கள்ளிவகை . |
| நிலம்பி | கொசு . |
| நிலம்புலம் | காண்க : நிலபுலம் |
| நிலமகள் | பூமிதேவி . |
| நிலமகன் | பூமிதேவியின் மகனான செவ்வாய் . |
| நிலமங்கை | காண்க : நிலமகள் |
| நிலமங்கைநாச்சியார் | காண்க : நிலமகள் |
| நிலமட்டம் | தரைமட்டம் ; நீர்மட்டம் . |
| நிலமடந்தை | காண்க : நிலமகள் |
| நிலமண் | மனைத்தளத்தை நிரப்பும் மண் . |
| நிலமயக்கம் | காண்க : திணைமயக்கம் . |
| நிலமளந்தோன் | உலகை அளந்த திருமால் . |
| நிலமாளிகை | நிலவறை . |
| நிலமிதி | ஒரு பகுதியில் சேருகை ; இடத்தின் தன்மை ; நடைவசதி . |
| நிலயம் | தங்குமிடம் ; கோயில் ; மருதநிலத்தூர் ; இலக்கு ; படி ; கூத்து . |
| நிலயம்பிடித்தல் | இடங்காணுதல் ; நிலைப்படுதல் ; மருந்து முதலியவற்றின் அளவை நிதானித்தல் . |
| நிலவடலி | சிறுபனைமரம் . |
| நிலவடி | கையினால் எடுத்தடிக்கும் கதிரடிப்பு ; களத்தில் கையால் அடித்த தானியம் . |
| நிலவடுப்பு | நிலத்தில் அமைக்கும் அடுப்புவகை . |
| நிலவர் | நீரின் நிலையை மூழ்கியறிபவர் ; நிலத்துள்ளவர் . |
| நிலவரண் | நீரும் நிழலுமற்ற மருதநில அரண் . |
| நிலவரம் | நிலைபேறு ; நிலைமை ; அன்றாட வேலை . |
| நிலவரி | அரசாங்கத்திற்குச் செலுத்தும் பூமி வரி . |
| நிலவருந்தி | சகோரப்புள் . |
| நிலவலயம் | பூமண்டலம் . |
| நிலவறை | பூமிக்குள் அமைக்கப்படும் அறை . |
| நிலவாகை | ஒரு மருந்துச்சரக்கு ; பாகல்வகை . |
| நிலவாசி | நிலத்தன்மை . |
| நிலவாரம் | விளைவிலிருந்து பயிரிடுவோன் நிலக்கிழாருக்குக் கொடுக்கும் தானியத்தின் ஒரு பகுதி . |
| நிலவிழுது | காண்க : நிலப்பனை . |
| நிலவீரியம் | பூநீறு . |
| நிலவு | ஒளி ; சந்திரன் ; நிலவொளி . |
| நிலவுகாய்தல் | நிலவெறித்தல் . |
| நிலவுதல் | நிலைத்திருத்தல் ; தாங்குதல் ; வழங்குதல் ; பரவுதல் ; ஒளிவிடுதல் . |
| நிலவுலகம் | பூமி . |
| நிலவூறல் | பூமிக்கசிவு . |
| நிலவெக்கை | வெயில் காய்ந்ததால் நிலத்தில் உண்டாகும் வெப்பம் . |
| நிலவெடுப்பு | முதலுழவு . |
| நிலவெறித்தல் | நிலவொளி வீசுதல் . |
| நிலவேம்பு | செடிவகை . |
| நிலவேர் | பூநாகம் ; மண்புழு . |
| நிலன் | நிலம் . |
| நிலா | காண்க : நிலவு . |
| நிலாக்கல் | காண்க : சந்திரகாந்தக்கல் . |
| நிலாக்காலுதல் | நிலவு வீசுதல் . |
| நிலாக்கொழுந்து | இளம்பிறை . |
| நிலாத்திரி | மத்தாப்பு . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 667 | 668 | 669 | 670 | 671 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நிலக்குழி முதல் - நிலாத்திரி வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, நிலமகள், பூமி, நிலம், வெப்பம், நிலவு, வீசுதல், நிலபுலம், நிலத்தன்மை, நிலவறை, நிலத்தில், நிலவொளி, இடம், நிலவெறித்தல், நிலப்பனை, பூமியின், நிலக்கொதிப்பு, எழும், பூமியினின்று, தன்மை, நிலநடுக்கம், வெப்பத்தால், சூரிய, பூகம்பம், பாகல்வகை

