தமிழ் - தமிழ் அகரமுதலி - நிருபாதி முதல் - நிலக்குமிழ் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| நிருபாதி | துன்பமின்மை ; காரணமின்மை ; தடையின்மை . |
| நிருபாதிகம் | தடையற்றது ; காரணமற்றது . |
| நிருமதம் | யானை ; மதமொழிந்த யானை . |
| நிருமலதானம் | ஞானிகட்கு உதவுங் கொடை . |
| நிருமலம் | மாசின்மை . |
| நிருமலன் | குற்றமற்றவன் ; கடவுள் . |
| நிருமலி | பார்வதி . |
| நிருமாலியம் | பூசித்துக் கழித்த பொருள் ; வில்வம் ; பெரிய மாவிலங்கமரம் . |
| நிருமித்தல் | படைத்தல் ; தீர்மானித்தல் ; ஆராய்தல் ; ஏற்படுத்துதல் ; பொய்யாகக் கற்பித்தல் . |
| நிருமிதம் | உண்டாக்கப்பட்டது ; பொய்யாகக் கற்பித்தது . |
| நிருமிதி | படைப்பு . |
| நிருமூடம் | முழுதும் அறிவின்மை . |
| நிருவகித்தல் | காண்க : நிர்வகித்தல் . |
| நிருவாகசபை | செயல்களைச் செய்துமுடிக்கும் சங்கம் . |
| நிருவாகம் | ஆளுகை ; பொறுப்பு ; மேற்பார்வை ; ஓம்புகை ; நடப்பித்தல் ; பொறுக்கை ; பொருள் கொள்ளும் முறை ; முடிவு ; உறுதி ; நிலைமை . |
| நிருவாணதீட்சை | சிவதீட்சையில் மூன்றாவது . |
| நிருவிகற்பசமாதி | தான் வேறு கடவுள் வேறென்ற விகற்ப உணர்வற்ற யோகநிலை . |
| நிருவிடயானந்தம் | உணர்ச்சிக்கு எட்டாத இன்பம் . |
| நிரூபணம் | ஆராய்ச்சி ; மெய்ப்பித்தல் . |
| நிரூபம் | உருவமின்மை . |
| நிரூபன் | உருவமற்ற கடவுள் . |
| நிரூபித்தல் | மெய்ப்பித்தல் ; ஆராய்தல் . |
| நிரூபிதம் | நிச்சயிக்கப்பட்டது ; தீர்மானிக்கப் பட்டது . |
| நிரேதுகம் | ஏதுவற்றது . |
| நிரை | வரிசை ; ஒழுங்கு ; கொடிப்படை ; படை வகுப்பு ; காண்க : கிரமம் ; கோபுரம் ; கூட்டம் ; பசுக்கூட்டம் ; பசு ; நிரையசை ; ஒரு விளையாட்டுவகை . |
| நிரைக்கழு | மதிற் கதவுகட்குக் காவலாக அமைக்கப்படும் முட்கழு . |
| நிரைகவர்தல் | பகைவர்களின் பசுக்கூட்டங்களைப் பிடித்தல் . |
| நிரைகிளம்பி | சினையாடு . |
| நிரைகோட்பறை | நிரை கவரும்போது அடிக்கும் பாலைப்பறைவகை . |
| நிரைகோடல் | போர்த் தொடக்கமாகப் பகைவரின் ஆநிரையைக் கவர்கை . |
| நிரைகோள் | போர்த் தொடக்கமாகப் பகைவரின் ஆநிரையைக் கவர்கை . |
| நிரைச்சம் | காண்க : நிரைசல் ; இரவல் . |
| நிரைச்சல் | காண்க : நிரைசல் ; இரவல் ; சூது விளையாட்டுவகை ; படைவகுப்பு . |
| நிரைசல் | ஓலை முதலியவற்றால் இடும் அடைப்பு . |
| நிரைத்தல் | ஒழுங்காய் நிறுத்தல் ; நிரப்புதல் ; பரப்புதல் ; கோத்தல் ; நிறைவேற்றுதல் ; தனித்தனியாய்ச் சொல்லுதல் ; திரளுதல் ; சபை கூட்டுதல் ; தொடர்ந்துவருதல் . |
| நிரைத்தாலி | ஒரு தாலிவகை . |
| நிரைதல் | நிரப்புதல் ; ஒழுங்காக்குதல் ; முடைதல் ; ஓலை முதலியவற்றை வரிசையாக வைத்து மறைத்தல் ; வரிசையாதல் ; முறைப்படுதல் ; திரளாதல் . |
| நிரைந்துகாட்டுதல் | விரித்தல் ; விளக்குதல் . |
| நிரைபு | முற்றியலுகரத்தாலேனும் குற்றியலுகரத்தாலேனும் தொடரப்படும் நிரையசை . |
| நிரைபெயர்த்தல் | எதிரிகள் கைக்கொண்ட பசுக் கூட்டங்களைத் திரும்பக் கைப்பற்றல் . |
| நிரைமீட்சி | பகைவர் கவர்ந்த ஆநிரையை மீட்கை . |
| நிரைமீட்டல் | பகைவர் கவர்ந்த ஆநிரையை மீட்கை . |
| நிரையம் | நரகம் . |
| நிரையொன்றாசிரியத்தளை | ஆசிரியப்பாவில் நிரையீற்று இயற்சீர்முன் நிரைமுதல் இயற்சீர் வந்து ஒன்றுந் தளை . |
| நிரோசாதம் | காண்க : நிரோதி . |
| நிரோட்டகம் | இதழியைந்து பிறவாத எழுத்துக்களால் ஆகிய செய்யுள் . |
| நிரோட்டம் | இதழியைந்து பிறவாத எழுத்துக்களால் ஆகிய செய்யுள் . |
| நிரோட்டியம் | இதழியைந்து பிறவாத எழுத்துக்களால் ஆகிய செய்யுள் . |
| நிரோட்டியவோட்டியம் | செய்யுளின் முற்பாதி நிரோட்டியமும் பிற்பாதி ஒட்டியமுமாகப் பாடும் கவி . |
| நிரோதம் | தடை ; அடக்கம் . |
| நிரோதனை | புலனடக்கம் . |
| நிரோதி | பதினாறு கலைகயுள் ஒன்று . |
| நிரோதினி | பதினாறு கலைகயுள் ஒன்று . |
| நில்லாமை | நிலைத்திராமை ; அழிவது ; உறுதிப்படாமை . |
| நிலக்கடம்பு | ஒரு பூண்டுவகை . |
| நிலக்கடலை | வேர்க்கடலை ; மணிலாக்கொட்டை . |
| நிலக்கணம் | மூன்று நிரையசையடுத்து வருவதும் செய்யுளின் தொடக்கத்திருப்பின் நன்மை எனப்படுவதுமான சொல் . |
| நிலக்கரி | பூமியிலிருந்து எடுக்கப்படும் ஒரு கரிவகை . |
| நிலக்கன்று | சிறுபயிர் . |
| நிலக்காரை | ஒரு முட்செடிவகை . |
| நிலக்கிழார் | நிலத்துக்கு உரியவர் . |
| நிலக்குமிழ் | ஒரு செடிவகை . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 666 | 667 | 668 | 669 | 670 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நிருபாதி முதல் - நிலக்குமிழ் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, இதழியைந்து, பிறவாத, ஆகிய, செய்யுள், எழுத்துக்களால், நிரைசல், கடவுள், பொய்யாகக், ஆராய்தல், நிரோதி, மீட்கை, ஆநிரையை, பொருள், கவர்ந்த, கலைகயுள், பதினாறு, செய்யுளின், யானை, ஒன்று, பகைவர், போர்த், தொடக்கமாகப், விளையாட்டுவகை, நிரையசை, நிரை, பகைவரின், ஆநிரையைக், நிரப்புதல், இரவல், சொல், கவர்கை, மெய்ப்பித்தல்

