முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » அனந்தவிபவை முதல் - அனாதிசித்தன் வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - அனந்தவிபவை முதல் - அனாதிசித்தன் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| அனலாடி | சிவன் . |
| அனலி | நெருப்பு ; சூரியன் . |
| அனலிமுகம் | சூரியபுடம் . |
| அனலேறு | இடி . |
| அனவத்தை | முடிவுபெறாமைக்குற்றம் . |
| அனவரததானன் | நெல் முதலியன அளக்கும் மரக்கால்வகை |
| அனவரதம் | எப்பொழுதும் . |
| அனற்கல் | சிக்கிமுக்கிக்கல் . |
| அனற்குவை | நெருப்பிடு கலம் . |
| அனற்சுக்கிரன் | கண்ணோய் வகை . |
| அனற்பொறி | தீப்பொறி . |
| அனற்றுதல் | எரித்தல் ; தகித்தல் ; சினத்தல் ; வீணே உதவுதல் ; வயிறுளைதல் ; முணங்குதல் . |
| அனன்னியம் | வேறன்மை ; பிரிப்பற்ற தன்மை . |
| அனன்னியன் | தான் கொண்ட புகலிடத்தைத் தவிர வேறு கதியைத் தேடாதவன் . |
| அனன்னுவயம் | சாதனை சாத்தியம் தம்மில் கூட்ட மாத்திரம் சொல்லாதே இரண்டன் உண்மையைக் காட்டும் திருட்டாந்த ஆபாசம் . |
| அனன்னுவயாலங்காரம் | இயைபின்மையணி . |
| அனனிலம் | அனல்நிலம் ; பாலைநிலம் . |
| அனனுபாடணம் | தோல்வித் தானங்களுள் ஒன்று . |
| அனாகதநாதம் | பராசக்தி . |
| அனாகதம் | காண்க : அனாகதவெடுப்பு ; ஆறு ஆதாரங்களுள் ஒன்று ; நிகழாத செய்தி ; எதிர்காலம் ; புதிய சீலை . |
| அனாகதவெடுப்பு | தாளம் முன்னும் பாட்டுப் பின்னுமாக வரும் எடுப்புவகை . |
| அனாகுலன் | கவலையற்றவன் . |
| அனாசக்தன் | பற்றில்லாதவன் . |
| அனாசக்தி | பறறின்மை . |
| அனாசாரம் | ஒழுக்கமின்மை . |
| அனாசி | அன்னாசி . |
| அனாசிரயம் | பற்றுக்கோடு அற்றது . |
| அனாசிருதன் | பிறரைச் சார்ந்திராதவன் ; சிவபேதம் . |
| அனாசிருதை | பதினாறு கலையுள் ஒன்றான யோகத்தானம் ; அனாசிருதனின் சக்தி . |
| அனாதரம் | புறக்கணிப்பு . |
| அனாதரவு | உதவியின்மை . |
| அனாதரித்தல் | புறக்கணித்தல் ; ஏற்றுக் கொள்ளாது தள்ளுதல் . |
| அனாதன் | திக்கற்றவன் . |
| அனாதி | தொடக்கமில்லாதது ; தொடக்கம் தெரியாதது ; கடவுள் ; சிவபிரான் ; பார்வதி ; அனாதித்திட்டு . |
| அனாதிக்கரம்பு | காண்க : அனாதித்தரிசு . |
| அனாதிகாரணம் | மூலகாரணம் . |
| அனாதிசித்தன் | அனாதியே சித்தனாயிருப்பவன் . |
| அனந்தவிபவை | பார்வதி . |
| அனந்தவிரதம் | பாத்திரபதம் எனப்படும் புரட்டாசி மாத வளர்பிறை பதினான்காம் நாளில் திருமாலை வணங்கி நோற்கும் ஒரு நோன்பு . |
| அனந்தவீரியம் | கடையிலா ஆற்றல் . |
| அனந்தற்பத்தி | கொடிபடர்ந்த பந்தல் . |
| அனந்தன் | ஆதிசேடன் ; கடவுள் ; அருகன் ; சிவன் ; திருமால் ; பிரமன் ; வாசுகி என்னும் நாகம் ; பலராமன் ; வெடியுப்பு ; பதஞ்சலி ; சோரபாடாணம் . |
| அனந்தன்சம்பா | பொங்கற்சம்பா என்னும் நெல்வகை . |
| அனந்தாழ்வான் | ஆதிசேடன் ; இராமாநுசரின் சீடரான ஒரு வைணவ ஆசாரியர் ; ஒரு பழைய நாணயம் . |
| அனந்தை | பூமி ; திருவனந்தபுரம் ; சிவசக்திகளுள் ஒன்று ; பதினாறு கலையுள் ஒன்றான யோகத்தானம் ; கொற்றான் ; கடுமரம் ; செங்காந்தள் ; சிறுகாஞ்சொறி ; நன்னாறி ; குப்பைமேனி ; சீந்தில் ; அறுகு . |
| அனயகம் | இருவாட்சி ; மல்லிகை . |
| அனயம் | தீவினை ; கேடு ; நன்மையின்மை ; துன்பம் . |
| அனர்த்தப்படுதல் | துன்பப்படுதல் ; குழப்பமாய் இருத்தல் . |
| அனர்த்தபரம்பரை | துன்பத்தொடரச்சி . |
| அனர்த்தம் | பொருளல்லாதது ; பயனற்றது ; துன்பம் ; கேடு . |
| அனர்வன் | காண்க : அனரவன் . |
| அனரசம் | பண்ணியவகை . |
| அனரவன் | காந்தள் . |
| அனல் | தீ ; வெப்பம் ; இடி ; கொடிவேலி . |
| அனல்காலி | காண்க : சூரியகாந்தக்கல் . |
| அனல்தல் | அழலுதல் . |
| அனலுதல் | அழலுதல் . |
| அனல்வீசுதல் | வெக்கையடித்தல் . |
| அனல்வென்றி | தங்கம் . |
| அனலகம் | பேய்க்கொம்மட்டி . |
| அனலடுப்பு | கூண்டடுப்பு . |
| அனலநட்சத்திரம் | செவ்வாய் நின்ற நாளுக்கு ஏழு , பதினான்கு , பதினாறு , இருபத்தைந்தாம் நாள்கள் . |
| அனலம் | நெருப்பு ; காண்க : அனலநட்சத்திரம் ; கொடிவேலி . |
| அனலன் | அக்கினிதேவன் ; எட்டு வசுக்களுள் ஒருவன் . |
| அனலாச்சியம் | நரகவகை . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 65 | 66 | 67 | 68 | 69 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அனந்தவிபவை முதல் - அனாதிசித்தன் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, ஒன்று, பதினாறு, துன்பம், கேடு, என்னும், அனரவன், கொடிவேலி, அழலுதல், ஆதிசேடன், அனலநட்சத்திரம், கடவுள், அனாகதவெடுப்பு, நெருப்பு, கலையுள், ஒன்றான, சிவன், யோகத்தானம், பார்வதி

