முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » அன்னியகுணசகனம் முதல் - அனந்தவாசி வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - அன்னியகுணசகனம் முதல் - அனந்தவாசி வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| அனத்தியயனம் | வேதம் முதலியன ஓதாது நிறுத்துகை ; வேதம் முதலியன ஓதத் தகாத காலம் . |
| அனதிகாரி | உரிமை பெறாதவன் . |
| அனந்தசத்தி | வரம்பிலா ஆற்றல் . |
| அனந்தசதுட்டயம் | ஆன்மாவின் முத்திக்குரிய நான்கு சாதனங்கள் ; அவை : அனந்த ஞானம் , அனந்த தரிசனம் , அனந்த வீரியம் , அனந்த சுகம் . |
| அனந்தசதுர்த்தசி | திருமாலைப் பூசித்தற்குரிய சாந்திர பாத்திரபதம் எனப்படும் புரட்டாசி மாத வளர்பிறை பதினான்காம் நாள் . |
| அனந்தசயனம் | ஆதிசேடனாகிய திருமால் படுக்கை ; பாம்புப் படுக்கை ; திருவனந்தபுரம் . |
| அனந்தசயனன் | அனந்தன் என்னும் பாம்பின் மேல் பள்ளிகொண்டவன் . |
| அனந்தசாயி | அனந்தன் என்னும் பாம்பின் மேல் பள்ளிகொண்டவன் . |
| அனந்தபீதம் | மருக்கொழுந்து . |
| அனந்தம் | அளவின்மை ; அளவற்றது ; அழிவின்மை ; வானம் ; ஒரு பேரெண் ; பொன் ; மயிற்சிகை ; அறுகு ; குப்பைமேனி ; சிறுகாஞ்சொறி ; நன்னாரி ; வேலிப்பருத்தி ; கோளகபாடாணம் . |
| அனந்தமுடிச்சு | காதணிவகை . |
| அனந்தர் | உறக்கம் ; மயக்கம் ; பருத்தி ; அனந்தல் ; உணர்ச்சி ; மனத்தடுமாற்றம் ; தீர்த்தங்கரருள் ஒருவர் ; உருத்திரருள் ஒருவர் . |
| அனந்தரத்திலவன் | அடுத்த வழித்தோன்றல் . |
| அனந்தரம் | பின்பு ; வேலிப்பருத்தி ; சிலாவி என்னும் கட்டட உறுப்பு . |
| அனந்தரவன் | மருமக்கள்தாயக் குடும்பத்தில் காரணவனுக்கு இளையவன் . |
| அனந்தரவாரிசு | அடுத்த உரிமை உள்ளவன் . |
| அனந்தல் | தூக்கம் ; மயக்கம் ; மந்தவொலி . |
| அனந்தலோசனன் | கணக்கற்ற கண்களையுடைய புத்தன் . |
| அனந்தவாசி | ' பல ' என்னும் பொருளைக் குறிக்கும் சொல் . |
| அன்னியகுணசகனம் | பிறர் குணத்தை அழுக்காறின்றிப் பொறுக்கையும் , பிறர் குற்றம் பொறுக்கையும் , |
| அன்னியதரம் | இரண்டிலொன்று . |
| அன்னியதா | வேறாக . |
| அன்னியதாக்கியாதி | புகழ் ஐந்தினுள் ஒன்று . |
| அன்னிதாஞானம் | மாறுபட்ட அறிவு ; விபரீத ஞானம் . |
| அன்னியநாமகரணம் | இரவல் பேர் . |
| அன்னியபரம் | வேறொன்றைப் பற்றியது . |
| அன்னியபரன் | வேறோர் இடத்து மனம் பற்றியவன் . |
| அன்னியபாவம் | வேறாயிருக்கை . |
| அன்னியபிருதம் | குயில் . |
| அன்னியபுட்டம் | குயில் . |
| அன்னியம் | வேறாகை ; வேறானது ; அயல்நாட்டுள்ளது ; அயல் ; குயில் . |
| அன்னியமுட்டுதல் | சந்ததியற்றுப் போதல் , மரபற்றுப் போதல் . |
| அன்னியன் | புறம்பேயுள்ளவன் ; பிறன் ; அயலான் ; பிறநாட்டான் . |
| அன்னியாபதேசம் | வெளிப்படையான பொருள் . |
| அன்னியாயக்காரன் | வாதி , வழக்குத் தொடுப்போன் . |
| அன்னியாயம் | அநியாயம் ; பிராது . |
| அன்னியோன்னியபாவம் | ஒன்று மற்றொன்று ஆகாமை . |
| அன்னியோன்னியம் | ஒற்றுமை . |
| அன்னியோன்னியாச்சிரயம் | ஒன்றையொன்று பற்றுதல் என்னும் குற்றம் . |
| அன்னியோன்னியாலங்காரம் | ஒன்றற்கொன்று உதவியணி . |
| அன்னுவயம் | சம்பந்தம் ; காரணகாரியங்களின் நியதசம்பந்தம் ; சாதன சாத்தியங்களின் உடனிகழ்ச்சி ; கொண்டுகூட்டு ; குலம் . |
| அன்னுவயம்பண்ணுதல் | பொருத்தமுறச் சொற்களைக் கொண்டுகூட்டுதல் . |
| அன்னுவயித்தல் | பின்பற்றுதல் ; செய்யுளில் தொடரைப் பொருட் பொருத்தமுற ஒழுங்குபடுத்துதல் . |
| அன்னுழி | அப்பொழுது . |
| அன்னுழை | அவ்விடம் . |
| அன்னை | தாய் ; தமக்கை ; தோழி ; பார்வதி . |
| அன்னோ | ஓர் இரக்கக் குறிப்பு ; ஒரு வியப்புக் குறிப்பு . |
| அன்னோன் | அத்தன்மையன் . |
| அன்னோன்றி | வலியற்றவன் . |
| அனகம் | பாவமற்றது ; புண்ணியம் ; அழுக்கில்லாதது ; அழகு ; சாந்தம் ; புல்லுருவி . |
| அனகன் | பாவமில்லாதவன் ; குற்றமில்லாதவன் ; அழகுள்ளவன் ; கடவுள் . |
| அனகை | பாவமற்றவள் . |
| அனங்கத்தானம் | காமன்கோட்டம் . |
| அனங்கம் | உடலில்லாதது ; மல்லிகை ; இருவாட்சி ; வானம் ; உள்ளம் . |
| அனங்கன் | மன்மதன் . |
| அனங்கு | மன்மதன் . |
| அனங்காகமம் | காமநூல் . |
| அனசனம் | சமணரின் உண்ணாநோன்பு . |
| அனசனவிரதம் | சமணரின் உண்ணாநோன்பு . |
| அனசூயம் | பொறாமையின்மை . |
| அனத்தம் | பயன்றறது ; பொல்லாங்கு . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 64 | 65 | 66 | 67 | 68 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அன்னியகுணசகனம் முதல் - அனந்தவாசி வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், என்னும், அனந்த, குயில், பொறுக்கையும், குற்றம், பிறர், அடுத்த, ஒருவர், ஒன்று, உண்ணாநோன்பு, சமணரின், குறிப்பு, போதல், அனந்தல், மன்மதன், வேலிப்பருத்தி, ஞானம், படுக்கை, உரிமை, முதலியன, வேதம், அனந்தன், பாம்பின், சொல், வானம், பள்ளிகொண்டவன், மேல், மயக்கம்

