தமிழ் - தமிழ் அகரமுதலி - அனுகன் முதல் - அனுபாலனம் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| அனுசாரணை | வீணையின் பக்க நரம்பு . |
| அனுசாரம் | கோள் பின்னோக்கிச் செல்லும் கதி ; ஒத்தபடி . |
| அனுசாரி | பின்பற்றுவோன் ; சீடன் . |
| அனுசிதம் | தகாதது ; வாயிலெடுத்தல் ; பொய் ; கெடுதி . |
| அனுசுருதி | ஒத்த சுருதி . |
| அனுசூதம் | இடைவிடாதது . |
| அனுசூதன் | விடாது தொடர்ந்திருப்பவன் . |
| அனுசை | தங்கை . |
| அனுசைவர் | சிவதீட்சை பெற்ற சத்திரியர் ; வைசியர் . |
| அனுஞ்ஞாலங்காரம் | வேண்டலணி . |
| அனுஞ்ஞை | அனுமதி . |
| அனுட்டணம் | வெப்பமின்மை ; சோம்பல் . |
| அனுட்டயம் | அனுட்டிக்கப்படுவது . |
| அனுட்டாதா | அனுட்டிக்கிறவன் ; தொழில் முயன்று செய்வோன் . |
| அனுட்டானம் | ஒழுக்கம் ; வழக்கம் ; சந்தியாவந்தனம் . |
| அனுட்டானித்தல் | ஒழுகுதல் ; ஆசரித்தல் ; கைக்கொள்ளுதல் ; பின்பற்றுதல் . |
| அனுட்டித்தல் | ஒழுகுதல் ; ஆசரித்தல் ; கைக்கொள்ளுதல் ; பின்பற்றுதல் . |
| அனுட்டுப்பு | ஒரு வடமொழிச் சந்தம் . |
| அனுடம் | பதினேழாம் நாள்மீன் . |
| அனுத்தமம் | தனக்குமேல் இல்லாதது . |
| அனுத்துருதபஞ்சமம் | குறிஞ்சியாழ்த் திறவகை . |
| அனுதபித்தல் | கழிந்ததற்கு இரங்குதல் ; பிறர் இன்ப துன்பங்களில் அவரோடு ஒன்றுகை . |
| அனுதாத்தம் | படுத்தலோசை . |
| அனுதாபம் | இரக்கம் ; கழிவிரக்கம் ; பிறர் இன்ப துன்பங்களில் அவரோடு ஒன்றுகை . |
| அனுதாரம் | காப்பு . |
| அனுதானம் | தாளவகை . |
| அனுதினம் | நாள்தோறும் . |
| அனுதினாதினம் | நாள்தோறும் . |
| அனுநாசிகம் | மெல்லெழுத்து . |
| அனுநாதம் | எதிரொலி . |
| அனுப்படி | கையிருப்பு ; காரியங்கள் ; கடந்த ஆண்டுவருவாய் . |
| அனுப்படிபாக்கி | கையிருப்பு . |
| அனுப்படியிறக்குதல் | பழைய பாக்கியைக் புதுக்கணக்கிற்குக் கொண்டுவருதல் . |
| அனுப்பிரவேசம் | தொடர்ந்து புகுகை . |
| அனுப்பிராசம் | வழியெதுகை . |
| அனுப்புதல் | போகச்செய்தல் ; வழிவிடுதல் . |
| அனுபந்தசதுட்டயம் | இலக்கியத்தின் இன்றியமையா நாற்கூறுகள் ; அவை : பொருள் , தொடர்பு , பயன் , அதிகாரி . |
| அனுபந்தம் | உறவின்முறை ; நூலின்பின் சேர்க்கப்படும் துணைச்செய்தி ; பிற்சேர்க்கை ; தடை ; உதவி . |
| அனுபந்தன் | தீமைக்கு உடன்படுபவன் . |
| அனுபத்தி | பொருத்தமின்மை . |
| அனுபந்தி | விக்கல் ; தாகம் . |
| அனுபமம் | நிகரில்லாதது ; மிகச் சிறந்தது . |
| அனுபமன் | ஒப்பில்லாதவன் . |
| அனுபமை | ஒப்பில்லாதது ; தென்மேற்றிசைப் பெண்யானை ; மிகச் சிறந்தது . |
| அனுபல்லவி | கீர்த்தனத்தில் பல்லவியை அடுத்து வரும் இரண்டாம் உறுப்பு . |
| அனுபவக்காட்சி | நேராகக் கண்டறியும் அறிவு . |
| அனுபவசாலி | பட்டறிவு மிக்கவன் . |
| அனுபவம் | நுகர்ச்சி ; பட்டறிவு . |
| அனுபவி | இன்பமாய் வாழ்பவன் ; ஆன்மஞானி . |
| அனுபவித்தல் | துய்த்தல் ; உரிமையாகக் கையாளுதல் , இன்ப நுகர்தல் ; அனுபவபூர்வமாய் அறிதல் . |
| அனுபவை | பார்வதி . |
| அனுபாடணம் | கூறியது கூறல் . |
| அனுபாதம் | சரணங்களில் ஒன்று ; கணக்குவகை . |
| அனுபாலனம் | பாதுகாப்பு . |
| அனுகன் | கணவன் ; பின்தொடர்வோன் ; வேலைக்காரன் ; காமுகன் . |
| அனுகாரம் | ஒன்றைப்போலச் செய்கை . |
| அனுகுணம் | ஏற்ப உள்ளது . |
| அனுகுணாலங்காரம் | தன்குணமிகையணி . |
| அனுகூலசத்துரு | அடுத்துக் கெடுக்கும் பகை . |
| அனுகூலம் | உதவி ; காரியசித்தி ; நன்மை . |
| அனுகூலன் | இதமாக நடப்பவன் ; உதவுவோன் . |
| அனுகூலி | அனுகூலமாயிருப்பவன் (ள்) . |
| அனுகூலித்தல் | பயன்படுதல் ; குணமாதல் ; உதவிசெய்தல் . |
| அனுச்சை | அனுமதி . |
| அனுசங்கம் | சம்பந்தம் . |
| அனுசந்தானம் | சிந்திக்கை ; இடையறாது ஓதுகை . |
| அனுசந்தித்தல் | சிந்தித்தல் ; சொல்லுதல் . |
| அனுசயம் | பெரும்பகை ; வழக்காடுகை ; கழிவிரக்கம் ; அனுபந்தம் . |
| அனுசரணம் | சார்ந்தொழுகுதல் . |
| அனுசரணை | சார்ந்தொழுகுகை ; உதவி . |
| அனுசரித்தல் | பின்பற்றுதல் ; ஆமோதித்தல் ; வழிபடுதல் ; கொண்டாடுதல் . |
| அனுசரிப்பு | பின்பற்றுகை ; இணக்கம் . |
| அனுசன் | தம்பி . |
| அனுசாகை | கிளைக்குள் கிளை . |
| அனுசாசனம் | அறவுரை ; அறிவுரை . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 67 | 68 | 69 | 70 | 71 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அனுகன் முதல் - அனுபாலனம் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், இன்ப, உதவி, பின்பற்றுதல், கையிருப்பு, நாள்தோறும், அனுபந்தம், பட்டறிவு, கழிவிரக்கம், சிறந்தது, மிகச், அவரோடு, ஆசரித்தல், ஒழுகுதல், கைக்கொள்ளுதல், பிறர், அனுமதி, துன்பங்களில், ஒன்றுகை

