முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » அன்றைக்கு முதல் - அன்னியக்குடி வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - அன்றைக்கு முதல் - அன்னியக்குடி வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| அன்னவூசல் | ஊஞ்சல்வகை . |
| அன்னவூர்தி | அன்னவாகனம் ; பிரமன் . |
| அன்னவூறல் | வடிகஞ்சி . |
| அன்னவட்டி | சோறு பரிமாறுவதற்குரிய கரண்டி . |
| அன்னன் | அப்படிப்பட்டவன் . |
| அன்னாசயம் | வயிறு . |
| அன்னாசி | பழச்செடிவகை . |
| அன்னாசு | பெருஞ்சீரகம் . |
| அன்னாதரம் | உணவில் விருப்பு . |
| அன்னாபிடேகம் | கடவுளுக்கு அன்னத்தால் செய்யும் திருமுழுக்கு . |
| அன்னாய் | ஓர் அசைநிலை . |
| அன்னார் | கல்நார் . |
| அன்னாலத்தி | ஆலத்திவகை ; தெய்வம் , மணமக்கள் இவர்களின் முன்பு சுழற்றும் மஞ்சள் , சோறு கலந்த ஆலத்தி ; சோற்றினால் அமைத்த விளக்கை ஏற்றித் தெய்வம் , மணமக்கள் இவர்களின் முன்பு சுற்றும் ஆலத்தி . |
| அன்னாலாத்தி | ஆலத்திவகை ; தெய்வம் , மணமக்கள் இவர்களின் முன்பு சுழற்றும் மஞ்சள் , சோறு கலந்த ஆலத்தி ; சோற்றினால் அமைத்த விளக்கை ஏற்றித் தெய்வம் , மணமக்கள் இவர்களின் முன்பு சுற்றும் ஆலத்தி . |
| அன்னான் | அன்னவன் ; அவன் . |
| அன்னியக்குடி | புறக்குடி . |
| அன்றைக்கு | அந்த நாள் . |
| அன்றைத்தினம் | அந்த நாள் . |
| அன்றைநாள் | அந்த நாள் . |
| அன்ன | அத்தன்மையானவை ; ஓர் அஃறிணைப்பன்மைக் குறிப்பு வினைமுற்று ; ஓர் உவம உருபு . |
| அன்னக்களை | பசி அல்லது மிக்க உணவால் வரும் சோர்வு . |
| அன்னக்காவடி | அன்னப்பிச்சை ஏந்தும் காவடி ; வறியவன் ; அன்னப்பிச்சை எடுத்துப் பிச்சைக்காரருக்குப் பங்கிடுபவருக்கு ஏற்பட்ட இனாம் . |
| அன்னக்கொடி | அன்னம் இடுவதைக் குறிக்கக் கட்டும் கொடி . |
| அன்னக்கொடியோன் | பிரமன் . |
| அன்னக்கொண்டி | அன்ன வடிவாகச் செய்த பாத்திரம் . |
| அன்னக்கொப்பு | அன்னப் பறவையின் வடிவம் செதுக்கிய மகளிர் காதணிவகை . |
| அன்னங்கோருதல் | அன்னம் பிடித்தல் ; நென்மணி உருவாதல் . |
| அன்னசத்திரம் | அறக்கூழ்ச்சாலை . |
| அன்னசாரம் | கஞ்சி . |
| அன்னசிராத்தம் | பாகம் பண்ணிய உணவு கொண்டு செய்யும் சிராத்தம் . |
| அன்னசுத்தி | நெய் ; அன்னத்தின்மீது சுத்திக்காகச் சிறிது நெய் இடுகை . |
| அன்னணம் | அவ்விதம் . |
| அன்னத்துரோகம் | உண்ட வீட்டுக்கு இரண்டகம் பண்ணுகை . |
| அன்னத்துவேடம் | உணவில் வெறுப்பு . |
| அன்னத்தூவி | அன்னப்புள்ளின் இறகு . |
| அன்னதாதா | உணவு கொடுத்து ஆதரிப்போன் . |
| அன்னதாழை | காண்க : அன்னாசி . |
| அன்னதானக்குறுவை | மூன்று திங்களில் விளையும் ஒருவகை நெல் . |
| அன்னதானச்சம்பா | சம்பா நெல்வகை . |
| அன்னதானம் | சோறு வழங்குகை ; காண்க : அன்னதானக்குறுவை . |
| அன்னதீபம் | அன்னவடிவான கோயில் விளக்கு வகை . |
| அன்னநீர் | நீருணவு . |
| அன்னப்பால் | அரிசி கொதிக்கும் பொழுது எடுக்கும் கஞ்சி ; நோயாளிக்காகக் காய்ச்சும் கஞ்சி . |
| அன்னப்பால்வைத்தல் | கஞ்சி காய்ச்சுதல் . |
| அன்னப்பிராசனம் | காண்க : சோறூட்டல் . |
| அன்னப்பூ | மகளிர் தலையிலணியும் அன்னம் போன்ற அணிவகை . |
| அன்னபக்கம் | அபிநயக் கைகளுள் ஒன்று . |
| அன்னபம் | ஆலமரம் . |
| அன்னபானம் | சோறும் நீரும் . |
| அன்னபிட்சை | அன்னமாக வாங்கும் பிச்சை . |
| அன்னபூரணி | துர்க்கையின் திருக்கோலங்களுள் ஒன்று . |
| அன்னபேதி | மருந்துச் சரக்குவகை . |
| அன்னவேதி | மருந்துச் சரக்குவகை . |
| அன்னபோதம் | பாதரசம் . |
| அன்னம் | சோறு ; புள்வகை ; கவரிமா ; நீர் ; உணவு அருந்திய இடம் ; பூமி ; ஒருவகை அணி ; தங்கம் ; மலம் . |
| அன்னம்பாறுதல் | புலம்புதல் . |
| அன்னம்பிடித்தல் | நென்மணி பால் பற்றுதல் . |
| அன்னமயகோசம் | பூதவுடலாகிய உறை ; ஐந்து உறையுள் ஒன்று . |
| அன்னமழகியரி | அரிசிவகை . |
| அன்னமழகியரிசி | அரிசிவகை . |
| அன்னமுயர்த்தோன் | காண்க : அன்னக்கொடியோன் . |
| அன்னயம் | ஆலமரம் . |
| அன்னரசம் | அன்னசத்து . |
| அன்னல் | காண்க : அனல் ; புகை . |
| அன்னவசம் | வயிறார உண்டதால் வரும் உறக்கம் . |
| அன்னவத்திரம் | உணவு உடைகள் . |
| அன்னவம் | கடல் . |
| அன்னவன் | அத்தன்மையன் ; ஒத்தவன் . |
| அன்னவாகி | தொண்டை அடியினின்று இரைப்பைக்குச் செல்லும் குழல் . |
| அன்னவாய்க்கை | அபிநயக் கைவகை . |
| அன்னவில்லை | தலையணிவகை . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 63 | 64 | 65 | 66 | 67 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அன்றைக்கு முதல் - அன்னியக்குடி வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, சோறு, முன்பு, இவர்களின், அன்னம், மணமக்கள், கஞ்சி, தெய்வம், உணவு, ஆலத்தி, நாள், ஒன்று, அந்த, உணவில், அன்னதானக்குறுவை, நெய், செய்யும், நென்மணி, ஆலத்திவகை, ஒருவகை, அபிநயக், சரக்குவகை, அரிசிவகை, மருந்துச், ஆலமரம், அன்னாசி, மகளிர், அன்னக்கொடியோன், ஏற்றித், சுற்றும், விளக்கை, அமைத்த, சோற்றினால், அன்னவன், பிரமன், அன்னப்பிச்சை, சுழற்றும், வரும், அன்ன, மஞ்சள், கலந்த

