தமிழ் - தமிழ் அகரமுதலி - அறாக்கட்டை முதல் - அறிவை வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| அறிவர்சிறப்பு | இறைவர் பூசனை . |
| அறிவரன் | அறிவில் சிறந்தவன் ; அருகன் . |
| அறிவழி | கள் ; பேய் . |
| அறிவறிவாக | விளக்கமாக தெரிந்துகொள்ளும்படி . |
| அறிவறைபோதல் | அறிவு கீழற்றுப் போதல் . |
| அறிவன் | அறிவுடையவன் ; அருகன் ; புத்தன் ; கணி ; கம்மாளன் ; செவ்வாய் ; புதன் ; உத்தரட்டாதி . |
| அறிவனாள் | உத்தரட்டாதி . |
| அறிவாகரன் | அறிவிற்கு இருப்பிடமாக உள்ளவன் . |
| அறிவாளி | புத்திசாலி . |
| அறிவிக்கை | விளம்பரம் . |
| அறிவித்தல் | தெரிவித்தல் ; வெளிப்படுத்துதல் . |
| அறிவிப்பு | காண்க : அறிவிக்கை . |
| அறிவியல் | விஞ்ஞானம் . |
| அறிவிலி | மூடன் . |
| அறிவினா | அறிந்து கேட்கும் கேள்வி . |
| அறிவீனம் | மடமை . |
| அறிவீனன் | அறிவுக்குறையுடையோன் ; மூடன் . |
| அறிவு | ஞானம் ; புத்தி ; பொறியுணர்வு ; அறிய வேண்டியவை ; கல்வி ; ஆன்மா . |
| அறிவுகேடன் | ஞானமற்றவன் . |
| அறிவுகொளுத்துதல் | புத்தி புகட்டுதல் . |
| அறிவுடைமை | உண்மை அறிவுடையவனாதல் . |
| அறிவுநூல் | ஞான சாத்திரம் |
| அறிவுபிறத்தல் | ஞானம் உண்டாதல் ; மூர்ச்சை தெளிதல் . |
| அறிவுபுகட்டுதல் | அறிவூட்டுதல் . |
| அறவுமடம்படுதல் | அறிந்தும் அறியான்போன்று இருத்தல் . |
| அறிவுமயங்குதல் | நினைவு தவறுதல் ; திகைத்தல் . |
| அறிவுவரம்பிகந்தோன் | மிகுந்த அறிவினையுடையவன் , அருகன் . |
| அறிவுறால் | அறிவுறுத்துகை . |
| அறிவுறுத்துதல் | தெரிவித்தல் ; அறிவுபுகட்டுதல் . |
| அறிவுறுதல் | அறிதல் ; துயில் எழுதல் . |
| அறிவை | ஞானம் . |
| அறாக்கட்டை | மூடன் ; கஞ்சன் . |
| அறாட்டுப்பறாட்டு | காண்க : அராட்டுப்பிராட்டு ; போதியதும் போதாததுமானது . |
| அறாம்பை | காண்க : அறாமை . |
| அறாமி | கொடுமை இயல்பு உள்ளது ; இடக்குப் பண்ணுகிற குதிரை . |
| அறாமை | கவிழ்தும்பைப் பூண்டு . |
| அறாயிரம் | ஆறாயிரம் . |
| அறாவட்டி | அதிக வட்டி ; கடுவட்டி . |
| அறாவிலை | அளவுக்கு மேற்பட்ட விலை . |
| அறாவுதல் | அடித்தல் . |
| அறி | அறிவு . |
| அறிக்கை | அறிவிப்பு ; குற்றத்தை ஒப்புக்கொள்கை ; பயிற்றுகை . |
| அறிக்கைப்பத்திரம் | எழுத்து மூலமான விளம்பரம் ; வரலாறு குறிக்கும் பத்திரிகை . |
| அறிக்கைபண்ணுதல் | விளம்பரப்படுத்துதல் ; குற்றத்தை ஒப்புக் கொள்ளுதல் . |
| அறிக்கையிடுதல் | விளம்பரப்படுத்துதல் ; குற்றத்தை ஒப்புக் கொள்ளுதல் . |
| அறிக்கைவாசித்தல் | திருமண விளம்பரம் செய்தல் ; பள்ளி நிறுவனம் , சங்கம் போன்ற அமைப்புகளின் நடவடிக்கையைக் கூட்டத்தில் படித்தல் |
| அறிகண்ணி | எருக்கங்கிழங்கு . |
| அறிகரி | நேர்சாட்சி . |
| அறிகருவி | உணர்வுப்பொறி . |
| அறிகுறி | அடையாளம் . |
| அறிசலம் | நெஞ்சறிந்த குற்றம் . |
| அறிசா | ஒருவகை மீன் . |
| அறிஞன் | அறிவுடையோன் ; புலவன் , முனிவன் ; புத்தன் ; புதன் . |
| அறிதல் | உணர்தல் ; நினைத்தல் ; மதித்தல் ; பயிலுதல் ; அனுபவித்தல் ; உறுதிசெய்தல் ; புதிதாய்க் கண்டுபிடித்தல் . |
| அறிதுயில் | யோகநித்திரை ; தூங்காமல் தூங்கும் நிலை . |
| அறிதுயிலமர்ந்தோன் | திருமால் . |
| அறிநன் | அறிபவன் . |
| அறிப்பலம் | காண்க : திப்பிலி . |
| அறிப்பு | உணர்கை |
| அறிபொருள்வினா | அறியப்பட்ட பொருளை ஒரு பயன்நோக்கிக் கேட்கும் கேள்வி . |
| அறிமடம் | அறிந்தும் அறியாது போன்று இருக்கை ; விளையாடும் பருவத்து நிகழும் அறியாமை ; நினைவின்மை ; அறிந்தபடி நடக்க இயலாமை . |
| அறிமுகம் | தெரிந்த முகம் ; பழக்கம் . |
| அறியக்கொடுத்தல் | தெரிவித்தல் ; குற்றமேற்றுதல் . |
| அறியல் | மூங்கில் . |
| அறியலுறவு | அறிதற்கண் விருப்பம் . |
| அறியாக்கரி | பொய்ச்சாட்சி . |
| அறியாமை | அறியாத்தன்மை ; மடமை . |
| அறியாவினா | தெரியாதது ஒன்றைத் தெரிந்து கொள்வதற்குக் கேட்கும் கேள்வி . |
| அறியான்வினா | தெரியாதது ஒன்றைத் தெரிந்து கொள்வதற்குக் கேட்கும் கேள்வி . |
| அறியுநன் | உணருகிறவன் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 59 | 60 | 61 | 62 | 63 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அறாக்கட்டை முதல் - அறிவை வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, கேட்கும், கேள்வி, குற்றத்தை, மூடன், அருகன், தெரிவித்தல், ஞானம், விளம்பரம், அறிவு, கொள்ளுதல், ஒப்புக், விளம்பரப்படுத்துதல், அறியாமை, தெரியாதது, கொள்வதற்குக், தெரிந்து, ஒன்றைத், அறாமை, அறிதல், புதன், உத்தரட்டாதி, அறிவிக்கை, மடமை, புத்தன், அறிந்தும், அறிவுபுகட்டுதல், புத்தி, அறிவிப்பு

