தமிழ் - தமிழ் அகரமுதலி - அறுப்பு முதல் - அறைக்கட்டு வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| அறுபகை | ஆறுவகை உட்பகை ; அவை : காமம் , குரோதம் , உலோபம் , மோகம் , மதம் , மாற்சரியம் . |
| அறுபடுதல் | அறுக்கப்படுதல் . |
| அறுபத்துநாலுகலை | அறுபத்து நான்கு வகையான பயிற்சியுடைமை . |
| அறுபத்துமூவர் | பெரியபுராணத்தில் கூறப்பட்ட தனியடியார் . |
| அறுபத்தை | கையாந்தகரை . |
| அறுபதம் | வண்டு , கையாந்தகரைப் பூண்டு . |
| அறுபதாங்கலியாணம் | அறுபதாம் ஆண்டு நிறைவுவிழா , மணிவிழா . |
| அறுபதாங்கேழ்வரகு | அறுபது நாளில் விளையும் கேழ்வரகுவகை . |
| அறுபதாங்கொட்டை | பேராமணக்கு . |
| அறுபான் | அறுபது . |
| அறுபொருள் | பரம்பொருள் ; ஐயமற்ற பொருள் . |
| அறுபொழுது | ஒரு நாளில் ஆறு பகுப்பான காலம் ; அவை : மாலை , யாமம் , வைகறை , விடியல் , நண்பகல் , எற்பாடு . |
| அறும்பன் | தீம்பு செய்வோன் . |
| அறும்பு | பஞ்சம் ; குறும்புத்தனம் ; தீம்பு . |
| அறுமணை | அரிவாள்மணை , அழகற்றவள் , சீர்கேடி . |
| அறுமான் | புழுவகை . |
| அறுமீன் | ஆறுமீன் தொகுதியாகிய கார்த்திகை . |
| அறுமீன்காதலன் | முருகக்கடவுள் . |
| அறுமுகன் | ஆறுமுகங்களை உடையவன் ,முருகக் கடவுள் . |
| அறுமுறி | உடன்படிக்கைப் பத்திரம் . |
| அறுமுறைவாழ்த்து | முனிவர் , பார்ப்பார் , ஆனிரை , மழை , முடியுடைவேந்தர் , உலகு என்னும் ஆறனையும்பற்றிக் கூறும் வாழ்த்து . |
| அறுமை | நிலையின்மை ; ஆறு . |
| அறுவகைச் சக்கரவர்த்திகள் | அரிச்சந்திரன் , நளன் , முசுகுந்தன் , புரூரவன் , சகரன் , கார்த்தவீரியன் . |
| அறுவகைத் தானை | வேற்றானை , வாட்டானை , விற்றானை , தேர்த்தானை , பரித்தானை , களிற்றுத்தானை . |
| அறுவகைப் படை | மூலப்படை , கூலிப்படை , நாட்டுப்படை , காட்டுப்படை , துணைப்படை , பகைப்படை . |
| அறுவகைப் பருவம் | கார் , கூதிர் , முன்பனி , பின்பனி , இளவேனில் , முதுவேனில் இவை முறையே ஆவணி முதல் இரண்டிரண்டு மாதங்களில் அமைவன . |
| அறுவகையரிசி | அருணாவரிசி , உலூவாவரிசி , ஏலவரிசி , கார்போகரிசி , விளவரிசி , வெட்பாலையரிசி . |
| அறுவகையுயிர் | மக்கள் , தேவர் , பிரமர் , நரகர் , விலங்கு , பேய் ; ஓரறிவுயிர் முதலாக உள்ள ஆறுவகை உயிர் . |
| அறுவடை | கதிரறுப்பு . |
| அறுவடைமேரை | கிராம ஊழிய சுதந்தரம் . |
| அறுவரி | தவணையில் செலுத்தும் வரி . |
| அறுவாக்குதல் | முடித்தல் ; சேகரித்தல் . |
| அறுவாதல் | செலவழிந்துபோதல் ; முடிதல் ; சேகரிக்கப்படுதல் . |
| அறுவாய் | வாள் முதலியவற்றால் அறுபட்ட இடம் ; குறைவிடம் ; கார்த்திகை நாள் . |
| அறுவாய்போதல் | முற்றுஞ் செலவாதல் . |
| அறுவிடுதல் | வசூலித்துவிடுதல் . |
| அறுவிதி | தீர்ப்பு . |
| அறுவு | முழுமை ; நீர்வற்றிய கால் ; கடைசிப்பகுதி . |
| அறுவை | ஆடை ; சித்திரை நாள் ; தோளிலிடும் உறி . |
| அறுவையர் | ஆடை நெய்வோர் . |
| அறை | அடி ; மோதுகை ; வெட்டுகை ; ஓசை ; சொல் ; விடை ; அலை ; உள்வீடு ; வீடு ; பெட்டியின் உட்பகுதி ; வகுத்த இடம் ; பிள்ளைபெறும் அறை ; சதுரங்கம் முதலியவற்றின் கட்டம் ; மலைக்குகை ; சுரங்கம் ; பாத்தி ; வஞ்சனை ; பாறை ; அம்மி ; சல்லி ; துண்டம் ; பாசறை ; அறுகை . |
| அறைக்கட்டளை | கோயிலில் நித்தியப் படித்தரப் பண்டங்கள் வைக்கும் இடம் ; சிலகாலம் அனுபவித்துப் பின் கோயிலுக்கு விடும்படி அளிக்கப்பட்ட இறையிலி நிலம் . |
| அறைக்கட்டு | வீட்டின் உட்பகுதி ; விழாப்பந்தல் . |
| அறுப்பு | கதிரறுக்கை ; தாலியறுக்கை ; புண்ணை அறுத்த இடம் ; மரத்தின் அறுத்த பக்கம் ; கண்டனம் . |
| அறுப்புக்காலம் | கதிர் அறுக்கும் பருவம் . |
| அறுப்புக்கூலி | கதிர் அறுக்கும் கூலி ; மரம் முதலியன அறுக்கும் கூலி ; வாழ்க்கை உதவி ; கைம்பெண் பெறும் வாழ்க்கைப் பணம் . |
| அறுப்புக்கோடி | தாலி அறுத்தவளுக்குச் சுற்றத்தார் இடும் புதுத்துணி . |
| அறுப்புச்சீட்டு | கதிர் அறுக்கக் கொடுக்கும் ஆணை . |
| அறுப்புச்சுகம் | கைம்பெண்ணுக்குக் கொடுக்கும் வாழ்க்கை உதவி . |
| அறுப்புச்சொம்மு | பிள்ளையில்லாத கைம்பெண்ணுக்குப் புக்ககத்தார் வாழ்க்கைக்காக மொத்தமாய்க் கொடுக்கும் தொகை . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 61 | 62 | 63 | 64 | 65 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அறுப்பு முதல் - அறைக்கட்டு வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், இடம், கதிர், கொடுக்கும், அறுக்கும், அறுத்த, வாழ்க்கை, உதவி, உட்பகுதி, கூலி, நாள், தீம்பு, நாளில், அறுபது, கார்த்திகை, அறுவகைப், சொல், பருவம், ஆறுவகை

