தமிழ் - தமிழ் அகரமுதலி - அற்கி முதல் - அறசோகணக்கு வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| அறச்செட்டு | கடுஞ்செட்டு . |
| அறச்செல்வி | தருமதேவதை ; உமாதேவி . |
| அறச்சோலை | கோயினுட்சோலை . |
| அறசம் | கத்தரி . |
| அறசோகணக்கு | காட்டுக்கருணை ; கருணைக்கிழங்கு . |
| அற்பசங்கை | சிறுநீருக்குப் போகை . |
| அற்பசி | காண்க : ஐப்பசி ; அசுவினி . |
| அற்பத்தனம் | இழிகுணம் . |
| அற்பத்திரம் | துளசி ; திருநீற்றுப்பச்சை . |
| அற்பபத்திரம் | துளசி ; திருநீற்றுப்பச்சை . |
| அற்பதுமம் | செந்தாமரை . |
| அற்பபதுமம் | செந்தாமரை . |
| அற்பம் | சிறுமை ; இழிவு ; இலேசு ; நாய் ; பஞ்சு ; புகை . |
| அற்பமாரி | சிறுகீரை . |
| அற்பமாரிடம் | சிறுகீரை . |
| அற்பர் | கீழ்மக்கள் . |
| அற்பரம் | மக்கட் படுக்கை . |
| அற்பருத்தம் | வாழை . |
| அற்பாசனம் | மூத்திரம் பெய்கை . |
| அற்பாசமனம் | மூத்திரம் பெய்கை . |
| அற்பாயு | குறைந்த வாழ்நாள் . |
| அற்பாயுசு | குறைந்த வாழ்நாள் . |
| அற்பாயுள் | குறைந்த வாழ்நாள் . |
| அற்புத்தளை | அன்புப் பிணைப்பு . |
| அற்புதக்கண் | அபிநயக் கண்வகை . |
| அற்புதம் | ஒன்பான் சுவையுள் ஒன்று ; வியப்பு ; அறிவு ; அழகு ; சூனியம் ; ஆயிரங்கோடி ; சிதம்பரம் ; தசைக்கணு . |
| அற்புதமூர்த்தி | கடவுள் . |
| அற்புதவாதம் | இசிவுநோய்வகை . |
| அற்புதவாயு | இசிவுநோய்வகை . |
| அற்புதன் | கடவுள் ; கம்மாளன் ; புதியது புனைவோன் ; கண்ணாளன் . |
| அற்றகாரியம் | தீர்ந்த பொருள் ; முடிந்த வேலை . |
| அற்றகுற்றம் | இழப்பு . |
| அற்றப்படுதல் | கவனத்தின் இடையறவுபடுதல் ; இல்லாமையாதல் . |
| அற்றபேச்சு | முடிவான பேச்சு . |
| அற்றம் | அழிவு ; துன்பம் ; இறுதி ; சோர்வு ; வறுமை ; இடைவிடுகை ; அவகாசம் ; அவமானம் ; அறுதி ; விலகுகை ; சுற்று ; மறைக்கத்தக்கது ; நாய் ; பொய் ; உண்மை . |
| அற்றவன் | பற்றற்றவன் ; பொருளற்றவன் . |
| அற்றார் | பொருள் இல்லாதவர் ; முனிவர் . |
| அற்று | அத் தன்மையது ; அதுபோன்றது ; ஓர் உவம உருபு ; ஒரு சாரியை . |
| அற்றுப்போதல் | முழுதும் ஒழிதல் ; இடைமுறிதல் ; முழுதும் கைவருதல் . |
| அற்றூரம் | காண்க : மரமஞ்சள் . |
| அற்றேல் | அப்படியானால் . |
| அற்றை | அந்நாட்குரிய ; அன்றன்றைக்குரிய ; அற்பமான . |
| அற்றைக்கூலி | நாட்கூலி . |
| அற்றைக்கொத்து | நாள்தோறும் தானியமாகக் கொடுக்கும் கூலி . |
| அற்றைநாள் | அன்று ; அந்த நாள் . |
| அற்றைப்படி | நாள்தோறும் உணவுக்காக அளிக்கும் பண்டம் அல்லது பணம் . |
| அற்றைப்பரிசம் | விலைமாதர் அன்றன்று பெறும் கூலி . |
| அற்றைப்பிழைப்பு | அன்றன்று செய்யும் சீவனம் ; அன்றாடங்காய்ச்சி . |
| அற | முழுவதும் ; மிகவும் ; தெளிவாக ; செவ்வையாக . |
| அறக்கட்டளை | நிலைபெற்ற அறச்செயல்கள் நடப்பதற்காக ஒதுக்கப்பெறும் மானியம் முதலியன . |
| அறக்கடவுள் | யமன் ; தருமதேவதை . |
| அறக்கடை | பாவம் . |
| அறக்கப்பறக்க | விழுந்து விழுந்து ; விரைவாக . |
| அறக்கப்பாலை | திருநாமப்பாலை . |
| அறக்கருணை | அனுக்கிரக ரூபமான அருள் . |
| அறக்கழிவு | அறநெறிக்கு மாறுபட்ட செயல் . |
| அறக்களவழி | வேளாண் தொழிலைக் கூறும் புறத்துறை . |
| அறக்களவேள்வி | வேள்விச்செயல் . |
| அறக்கற்பு | அமைதிநிலை பொருந்திய கற்பு . |
| அறக்காடு | சுடுகாடு . |
| அறக்குளாமீன் | சூரைமீன் . |
| அறக்கூர்மை | மிக்க கூர் . |
| அறக்கூழ்ச்சாலை | அன்னசத்திரம் ; கஞ்சிமடம் . |
| அறக்கொடி | பார்வதி ; உமை . |
| அறக்கொடிபாகன் | சிவன் . |
| அறங்கடை | பாவம் . |
| அறன்கடை | பாவம் . |
| அறங்காவல் | கோயில் சைத்தியம் முதலாயின காக்கும் தொழில் ; நற்பொறுப்பு . |
| அறங்கூறவையம் | நீதிமன்றம் . |
| அறச்சாலாபோகம் | அறச்சாலைகளுக்கு விட்ட மானியம் . |
| அறச்சாலை | தருமசாலை . |
| அற்கி | காண்க : ஓரிலைத்தாமரை . |
| அற்குதல் | நிலைபெறுதல் ; தங்குதல் . |
| அற்சிரம் | காண்க : அச்சிரம் . |
| அற்சிரை | காண்க : அச்சிரம் . |
| அற்பக்கியன் | சிற்றறிவுடையவன் . |
| அற்பகதன் | வாழை . |
| அற்பகந்தம் | காண்க : செந்தாமரை . |
| அற்பகேசி | காண்க : வசம்பு . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 57 | 58 | 59 | 60 | 61 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அற்கி முதல் - அறசோகணக்கு வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, குறைந்த, பாவம், செந்தாமரை, வாழ்நாள், கூலி, நாள்தோறும், முழுதும், அன்றன்று, மானியம், அச்சிரம், விழுந்து, துளசி, பொருள், இசிவுநோய்வகை, மூத்திரம், வாழை, சிறுகீரை, பெய்கை, திருநீற்றுப்பச்சை, கடவுள், தருமதேவதை, நாய்

