தமிழ் - தமிழ் அகரமுதலி - அறத்தவிசு முதல் - அறனோம்படை வரை
சொல் | அருஞ்சொற்பொருள் |
அறவுபதை | அமைச்சரைத் தேர்ந்தெடுக்கும் சூழ்ச்சி நான்கனுள் ஒன்று ; தருமநெறியைக் கூறி ஆராய்தல் . |
அறவுரை | நீதிநெறி உரைத்தல் ; நீதிமொழி . |
அறவுளி | உடல் நலம்பெறச் செய்யும் மந்திரம் . |
அறவூதுதல் | புடமிடுதல் . |
அறவை | உதவியற்ற நிலை ; தீமை ; அறநெறி . |
அறவைச்சிறை | கடுஞ்சிறை . |
அறவைச்சோறு | உறவற்றவர்க்கு அளிக்கும் உணவு . |
அறவைத்தல் | காண்க : அறவூதுதல் . |
அறவைத்தூரியம் | உறவற்றவர்க்கு அளிக்கும் உடை . |
அறவைப்பிணஞ்சுடுதல் | உறவற்ற பிணத்துக்கு ஈமக்கடன் செய்தல் . |
அறவைப்பு | புடம்வைக்கை . |
அறவோர்பள்ளி | சமண பௌத்த ஆலயம் . |
அறவோலை | இனாம் சாசணம் . |
அறவோன் | அறநெறியாளன் ; புத்தன் . |
அறளை | நச்சுத் தொந்தரை ; ஒரு நோய் . |
அறன் | வேள்வி முதல்வன் ; அறக்கடவுள் . |
அறனில்பால் | தீவினை . |
அறனிலாளன் | அறவுணர்வு அற்றவன் . |
அறனையம் | காட்டுக்கருணை . |
அறனோம்படை | தருமம் பாதுகாக்கை ; தருமம் பாதுகாக்கும் இடம் ; தருமம் போதிக்குமிடம் . |
அறத்தவிசு | நீதிபதியின் இருக்கை . |
அறத்தளி | அந்தப்புரம் . |
அறத்தின்செல்வி | காண்க : அறச்செல்வி . |
அறத்தின்சேய் | தருமன் . |
அறத்தின்மூர்த்தி | தருமதேவதை ; பார்வதி ; திருமால் . |
அறத்துணைவி | தருமபத்தினி . |
அறத்துப்பால் | திருக்குறள் , நாலடியார் நூல்களின் முப்பால்களுள் முதலானதும் அறத்தைப் பற்றிக் கூறுவதுமான பகுதி . |
அறத்துறுப்பு | அறத்தினது கூறு ; அவை : ஐயப்படாமை , விருப்பின்மை , வெறுப்பின்மை , மயக்கமின்மை , பழியை நீக்கல் , அழிந்தோரை நிறுத்தல் , அறம் விளக்கல் , பேரன்புடைமை . |
அறத்துறை | அறவழி . |
அறத்தைக்காப்போன் | ஐயனார் . |
அறத்தொடுநிலை | களவினைத் தலைவி முதலானோர் தமர்க்கு முறையே அறிவுறுத்துகை . |
அறத்தொடுநிற்றல் | களவினைத் தலைவி முதலானோர் தமர்க்கு முறையே அறிவுறுத்துகை . |
அறதேயன் | அறங்களை நடத்துவோன் . |
அறநிலை | பிரமமணம் ; அறங்களைப் பாதுகாத்தற்குரிய நிலையம் . |
அறநிலைப்பொருள் | நெறிப்படி அரசன் பெறும் இறைப்பொருள் . |
அறநிலையறம் | நால்வகைக் குலத்தாரும் தத்தம் நெறியில் பிழையாது அரசன் பாதுகாக்கை . |
அறநிலையின்பம் | ஒத்த கன்னியை மணந்து இல்லறத்தினின்று நுகரும் இன்பம் . |
அறநீர் | அருநீர் ; நீரின் அளவு குறைந்த நிலை ; தவணைப்படி பாசனத்துக்கு விடப்படும் நீர் . |
அறநூல் | நீதி கூறும் நூல் . |
அறநெறி | அறவழி . |
அறப்பரிகாரம் | துறந்தோர் முதலியவர்க்குச் செய்யும் பணிவிடை . |
அறப்பரிசாரம் | துறந்தோர் முதலியவர்க்குச் செய்யும் பணிவிடை . |
அறப்பாடல் | கேடு விளைக்கும் சொற்பயிலும் பாட்டு . |
அறப்பாடுபடுதல் | பாடுபட்டு வேலை செய்தல் . |
அறப்பார்த்தல் | தீர ஆராய்தல் ; அழிக்க வழி தேடுதல் . |
அறப்புறங்காவல் | அறத்திற்கு விடப்பட்ட நிலங்களைப் பாதுகாக்கை . |
அறப்புறம் | பாவம் ; அறத்துக்கு விடப்பட்ட இறையிலி நிலம் ; அறச்சாலை ; வேதம் ஓதும் பள்ளி . |
அறப்போர் | அறவழியில் செய்யும் கிளர்ச்சி . |
அறம் | தருமம் ; புண்ணியம் ; அறச்சாலை ; தரும தேவதை ; யமன் ; தகுதியானது ; சமயம் ; ஞானம் ; நோன்பு ; இதம் ; இன்பம் ; தீப்பயன் உண்டாக்கும் சொல் . |
அறம்பகர்ந்தோன் | புத்தன் . |
அறம்பாடுதல் | தீச்சொற்பட்டுத் தீப்பயன் உண்டாகப் பாடுதல் ; வசைக்கவி பாடுதல் . |
அறல் | அறுகை ; அறுத்துச் செல்லும் நீர் ; அரித்தோடுகை ; நீர் ; சிறுதூறு ; நுண்மணல் ; கருமணல் ; நீர்த்திரை ; மயிர் நெறிப்பு ; கொற்றான் ; திருமணம் ; விழா . |
அறவன் | தருமவான் ; கடவுள் ; புத்தன் ; முனிவன் ; அறத்தைக் கூறுவோன் ; பார்ப்பனன் . |
அறவாணன் | கடவுள் . |
அறவாய்போதல் | காண்க : அறுவாய்போதல் . |
அறவாழி | தருமசக்கரம் ; அறக்கடல் . |
அறவாளன் | தருமவான் ; |
அறவி | அறம் ; புண்ணியத்தோடு கூடியது ; பெண்துறவி ; பொதுவிடம் . |
அறவிடுதல் | முற்றும் நீக்குதல் ; விற்றல் . |
அறவிய | அறத்தோடுகூடிய . |
அறவியங்கிழவோன் | புத்தன் . |
அறவியான் | அறத்தில் நிற்பவன் . |
அறவிலை | முழுமையும் விலைப்படுதல் . |
அறவிலை வாணிகன் | பொருளை விலையாகக் கொடுத்து அறம் கொள்வோன் . |
அறவினை | நற்செயல் . |
அறவு | ஒழிகை . |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 58 | 59 | 60 | 61 | 62 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அறத்தவிசு முதல் - அறனோம்படை வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், அறம், செய்யும், புத்தன், தருமம், பாதுகாக்கை, நீர், காண்க, துறந்தோர், அரசன், இன்பம், முதலியவர்க்குச், பணிவிடை, விடப்பட்ட, கடவுள், அறவிலை, தருமவான், பாடுதல், அறச்சாலை, தீப்பயன், அறிவுறுத்துகை, தலைவி, அறநெறி, உறவற்றவர்க்கு, நிலை, அறவூதுதல், ஆராய்தல், அளிக்கும், செய்தல், முதலானோர், தமர்க்கு, சொல், களவினைத், அறவழி, முறையே