முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » அறிவொப்புக்காண்டல் வினா முதல் - அறுப்பின்பண்டிகை வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - அறிவொப்புக்காண்டல் வினா முதல் - அறுப்பின்பண்டிகை வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| அறுத்தல் | அரிதல் , ஊடறுத்தல் , செங்கல் அறுத்தல் , தாலியறுத்தல் , இடைவிடுதல் ; பங்கிட்டுக் கொடுத்தல் ; முடிவுசெய்தல் ; வளைதோண்டல் ; வருத்துதல் ; நீக்குதல் ; இல்லாமற் செய்தல் ; வெல்லுதல் ; செரித்தல் . |
| அறுத்தவள் | கைம்பெண் . |
| அறுத்திசைப்பு | வேற்றிசை கலந்து வரும் ஒருவகை யாப்புவழு . |
| அறுத்திடல் | அவாவறுக்கை . |
| அறுத்துக்கட்டுதல் | தாலி நீங்கியபின் மறுதாலி கட்டி மணத்தல் . |
| அறுத்துப்பேசுதல் | தீர்மானமாகப் பேசுதல் . |
| அறுத்துமுறி | மனைவியைத் தள்ளிவிடுகை . |
| அறுத்துரைத்தல் | வரையறுத்துச் சொல்லுதல் ; பிரித்துச் சொல்லுதல் . |
| அறுத்துவிட்டவள் | காண்க : அறுத்தவள் . |
| அறுத்தோடி | அரித்தோடும் நீரோட்டம் . |
| அறுதல் | கயிறு முதலியன இறுதல் ; இல்லாமற்போதல் ; தீர்தல் ; பாழாதல் ; செரித்தல் ; தங்குதல் ; நட்புச் செய்தல் ; கைம்பெண் . |
| அறுதலி | கைம்பெண் . |
| அறுதாலி | கைம்பெண் . |
| அறுதி | முடிவு ; வரையறை ; இல்லாமை ; அழிவு ; உரிமை ; அறுதிக் குத்தகை ; காண்க : அறுதிக்கிரயம் . |
| அறுதிக்கரை | நிலங்களைச் சமுதாயத்தில் வைக்காமல் தனித்தனியாய் உரிமையுள்ளவர்களுக்குப் பிரித்துக்கொடுக்கும் முறை . |
| அறுதிக்களநடை | ஆண்டிறுதி நெற்கணக்கு . |
| அறுதிக்கிரயம் | முடிவான விலை . |
| அறுதிச்சாசனம் | விலையாவணம் . |
| அறுதிச்சீட்டு | விலையாவணம் . |
| அறுதிப்பங்கு | சமுதாயத்தில் இல்லாத சொந்த நிலம் ; கடன் தீர்ப்பதில் கடைசித்தவணையாகக் கொடுக்கும் தொகை . |
| அறுதிப்பட்டு | கோயில் மரியாதையாகத் தலையில் கட்டிக் கொடுத்துவிடும் பட்டு . |
| அறுதிப்பரியட்டம் | கோயில் மரியாதையாகத் தலையில் கட்டிக் கொடுத்துவிடும் பட்டு . |
| அறுதிப்பரிவட்டம் | கோயில் மரியாதையாகத் தலையில் கட்டிக் கொடுத்துவிடும் பட்டு . |
| அறுதிப்பாடு | முடிவுபேறு . |
| அறுதிமுறி | தீர்ந்த கணக்குச் சீட்டு . |
| அறுதியிடுதல் | முடிவுக்குக் கொண்டு வருதல் ; காலங்குறித்தல் ; தீர்மானித்தல் . |
| அறுதியுறுதி | அறுதிச் சீட்டு . |
| அறுதொழில் | அந்தணர்க்குரிய ஓதல் , ஓதுவித்தல் , வேட்டல் , வேட்பித்தல் , ஈதல் ; ஏற்றல் . |
| அறுந்தருணம் | அவசர சமயம் . |
| அறுந்தறுவாய் | அவசர சமயம் . |
| அறுந்தொகை | மிச்சமின்றிப் பிரிக்கப்படும் எண் . |
| அறுநீர் | விரைவில் வற்றிப்போகும் நிலையிலுள்ள நீர் . |
| அறுப்படிகணக்கு | பேறு இழப்புகளை வகுத்துக் காட்டும் கணக்கு . |
| அறுப்பம்புல் | புல்வகை . |
| அறுப்பன்பூச்சி | தானியப் பூச்சிவகை . |
| அறுப்பின்பண்டிகை | விளைவு காலத்துக்குப்பின் காணிக்கை செலுத்தும் கிறித்தவர் சிறப்பு நாள் . |
| அறிவொப்புக்காண்டல் வினா | தான் அறிந்ததைப் பிறன் அறிவோடு ஒப்புநோக்கக் கேட்கும் கேள்வி . |
| அறுக்கணக்கு | சரக்கறைக் கணக்கு . |
| அறுக்கரிவாள் | கருக்கறுவாள் . |
| அறுக்கன் | தலைவன் ; நெருக்கமான நண்பன் . |
| அறுகடி | அறுகு பற்றிய நிலம் . |
| அறுகரிசி | அறுகம்புல்லோடு கூடிய மங்கல அரிசி , அட்சதை . |
| அறுகால் | வண்டு ; பாம்பு ; இல்லாதபோது . |
| அறுகாலன் | பாம்பு . |
| அறுகாழி | மோதிரவகை . |
| அறுகாற்பீடம் | ஆறு கால்கள் அமைந்த இருக்கை . |
| அறுகிடுதல் | திருமணத்தில் அறுகு இட்டு வாழ்த்துதல் . |
| அறுகிலிப்பூடு | பூண்டுவகை . |
| அறுகீரை | காண்க : அறைக்கீரை . |
| அறுகு | அறுகம்புல் ; சிங்கம் ; புலி ; யானையாளி ; யானை ; வெளித்திண்ணை ; தெருப்பந்தல் . |
| அறுகுணன் | ஆறு குணங்களோடு கூடியவன் ; பகவன் . |
| அறுகுதராசு | சிறு தராசு . |
| அறுகுவெட்டுத் தரிசுகூலி | தரிசு நிலத்திலுள்ள காடுகளை வெட்டிச் செம்மை செய்து உழவுக்குக் கொண்டுவந்தவர்க்கு அதுபற்றி அந்நிலத்தில் ஏற்பட்ட அனுபோக உரிமை . |
| அறுகுறை | கவந்தம் , முண்டம் . |
| அறுகெடுத்தல் | அறுகிட்டு வாழத்தல் ; பூசித்தல் . |
| அறுகெழுந்தபடுதரை | அறுகு முளைத்து உழவுக்குப் பயன்படாத தரிசுநிலம் . |
| அறுகை | அறுகம்புல் . |
| அறுகோணம் | ஆறு மூலைகொண்ட வடிவம் . |
| அறுசமயம் | ஆறு வகையான வைதிக மதங்கள் ; அவை : சைவம் , வைணவம் , சாக்தம் , சௌரம் , காணபத்தியம் , கௌமாரம் . |
| அறுசரம் | யாழ் . |
| அறுசுவை | கைப்பு , இனிப்பு , புளிப்பு , துவர்ப்பு , உவரப்பு , கார்ப்பு என்னும் ஆறு வகையான சுவைகள் . |
| அறுசூலை | ஆறு வகையான நோய் ; அவை : பித்தசூலை , வாதசூலை , சிலேட்டுமசூலை , வாதபித்த சூலை , சிலேட்டுமபித்த சூலை , ஐயகணச்சூலை . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 60 | 61 | 62 | 63 | 64 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அறிவொப்புக்காண்டல் வினா முதல் - அறுப்பின்பண்டிகை வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், கைம்பெண், அறுகு, தலையில், கட்டிக், கொடுத்துவிடும், பட்டு, வகையான, கோயில், மரியாதையாகத், காண்க, கணக்கு, சமயம், செரித்தல், பாம்பு, சூலை, செய்தல், அறுகம்புல், அவசர, அறுத்தவள், அறுதிக்கிரயம், நிலம், விலையாவணம், அறுத்தல், உரிமை, சமுதாயத்தில், சொல்லுதல், சீட்டு

