முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » அளவியற்றாண்டகம் முதல் - அற்காமை வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - அளவியற்றாண்டகம் முதல் - அற்காமை வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| அளவுபடி | முத்திரைப் படி . |
| அளவுபடுத்தல் | வரையறை செய்தல் . |
| அளவுபடை | சிறுசேனை . |
| அளவுவர்க்கம் | ஒரு பழைய வரி . |
| அளவெடுத்தல் | ஒன்றன் நீளம் அகலம் முதலியவற்றை அளந்தறிதல் . |
| அளவெண் | நாற்சீர் ஓரடியாய் வரும் அம்போதரங்க உறுப்புவகை . |
| அளவை | அளவு ; அளவுகருவி ; தருக்க அளவை ; எல்லை ; சமயம் ; நாள் ; தன்மை ; அறிகுறி . |
| அளவைக்கால் | மரக்கால் என்னும் முகத்தலளவைக் கருவி . |
| அளவைநூல் | தருக்கநூல் . |
| அளவையாகுபெயர் | எண்ணல் , எடுத்தல் , முகத்தல் , நீட்டல் என்னும் அளவைப் பெயர் அவ்வவ் அளவுகொண்ட பொருளுக்கு ஆகிவருவது . |
| அளவை வடிவம் | உருவத்தைக் காட்டுதற்கு வரைந்த படம் . |
| அளவைவாதி | பிரமாண வாதம் செய்பவன் . |
| அளவொழுகு | ஊரின் நிலபுலங்களின் அளவுகளைப் பதிவு செய்த புத்தகம் . |
| அளறு | குழைசேறு ; குழம்பு ; காவிக்கல் ; நீர் ; நரகம் . |
| அளறுதல் | சிதறி வெடித்தல் ; நெரிதல் ; பிளத்தல் . |
| அளறுபடுதல் | சேறாதல் ; நிலைகலங்குதல் . |
| அளாய்குளாய் | பரபரப்பான செய்கை . |
| அளாவன் | கலப்பு . |
| அளாவுதல் | கையால் அளைதல் ; துழாவுதல் ; கலத்தல் ; சென்று பொறுந்துதல் ; கலந்து பேசுதல் . |
| அளி | அன்பு ; அருள் ; ஆசை ; வரவேற்பு ; எளிமை ; குளிர்ச்சி ; கொடை ; காய் ; வண்டு ; தேன் ; வண்டுகொல்லி ; கருந்தேனீ ; மாட்டுக்காடி ; தேள் ; கிராதி ; மரவுரிமரம் . |
| அளி | (வி) கொடு ; காப்பாற்று . |
| அளிகம் | நெற்றி ; பொய் ; நெல்லி ; வெறுப்பு . |
| அளீகம் | நெற்றி ; பொய் ; நெல்லி ; வெறுப்பு . |
| அளித்தல் | காத்தல் ; கொடுத்தல் ; படைத்தல் ; ஈனுதல் ; அருள்செய்தல் ; விருப்பம் உண்டாக்குதல் ; சோர்வை நீக்குதல் ; செறித்தல் ; சொல்லுதல் . |
| அளித்து | அளிசெய்யத்தக்கது . |
| அளிது | அளிசெய்யத்தக்கது . |
| அளிந்தம் | கோபுரவாயில் திண்ணை . |
| அளிந்தார் | அன்புடையோர் . |
| அளிப்பாய்ச்சுதல் | கிராதியிடுதல் . |
| அளிம்பகம் | குயில் ; தவளை ; இருப்பை ; தாமரைப் பூந்தாது . |
| அளியர் | காண்க : மைத்துனர் ; இரங்கத்தக்கவர் . |
| அளியன் | அன்புமிக்கவன் ; காக்கப்படத்தக்கவன் . |
| அளிலாமயம் | வாதநோய் . |
| அளுக்குதல் | குலைதல் ; அஞ்சுவித்தல் . |
| அளுங்கு | காண்க : அழுங்கு . |
| அளேசுவெப்பம் | அதிவிடய வேர் . |
| அளேசுவெப்பு | அதிவிடய வேர் . |
| அளேரியம் | வெங்காயம் . |
| அளேறுகம் | காண்க : தூதுவளை . |
| அளை | தயிர் ; மோர் ; வெண்ணெய் ; புற்று ; பொந்து ; குகை ; ஏழாம்வேற்றுமையுருபு . |
| அளை | (வி) துழாவு ; கல ; தழுவு . |
| அளைச்சல் | வயிற்றுளைச்சல் ; சீதபேதி . |
| அளைதல் | துழாவுதல் ; கலத்தல் ; சூடுதல் ; தழுவுதல் ; கூடியிருத்தல் ; அனுபவித்தல் ; வயிறு வலித்தல் . |
| அளைமறிபாப்பு | பாட்டின் ஈறறில் நின்ற சொல் இடையிலும் முதலிலும் சென்று பொருள் கொள்ளப்படும் முறை . |
| அளையெடுத்தல் | வளை தோண்டுதல் ; புரை வைத்தல் . |
| அளைவு | சோறு முதலியன குழைகை ; கலப்பு . |
| அற்கத்தி | காண்க : திப்பிலி . |
| அற்கம் | அடக்கம் ; வெண்துளசி ; பொருள் விலை ; பூசைவிதி . |
| அற்களம் | கதவின் தாழ் ; பேரவை . |
| அற்கன் | அருக்கன் ; சூரியன் . |
| அற்காமை | நிலையாமை . |
| அளவியற்றாண்டகம் | இருபத்தேழு எழுத்து முதலாக வரும் அளவொத்த அடிகளுடைய செய்யுள் வழக்கு . |
| அளவில் | மட்டில் . |
| அளவிறத்தல் | எண்ணிலவாதல் ; அளவு கடத்தல் . |
| அளவினார் | நேர்வாளம் ; சிறுமரவகை . |
| அளவு | பரிமாணம் ; தருக்க அளவை ; தாளத்தில் மூன்று மாத்திரைக் காலம் ; மாத்திரை ; நில அளவு ; சமயம் ; தன்மை ; ஞானம் ; மட்டும் ; தொடங்கி . |
| அளவுக்கல் | நீரேற்றம் காட்டும் கல் ; எல்லைக்கல் . |
| அளவுகருவி | பொருள்களை அளவிட்டு அறியப்பயன்படும் கருவி . |
| அளவுகாரன் | நெல் முதலியன அளப்பவன் . |
| அளவுகூடை | குறித்த அளவுள்ள தானியம் அளக்கும் கூடை . |
| அளவுகோல் | அளக்கும் தடி . |
| அளவுதல் | கலப்புறுதல் ; கலத்தல் ; உசாவுதல் . |
| அளவுநாழி | முத்திரைப் படி . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 56 | 57 | 58 | 59 | 60 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அளவியற்றாண்டகம் முதல் - அற்காமை வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, அளவை, அளவு, கலத்தல், வெறுப்பு, நெல்லி, பொய், அளிசெய்யத்தக்கது, நெற்றி, அதிவிடய, அளக்கும், முதலியன, பொருள், வேர், சென்று, துழாவுதல், தருக்க, அளவுகருவி, வரும், முத்திரைப், சமயம், தன்மை, அளைதல், கலப்பு, கருவி, என்னும், சொல்

