முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » அள்ளுதல் முதல் - அளவியற்சந்தம் வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - அள்ளுதல் முதல் - அளவியற்சந்தம் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| அளத்தல் | அளவிடுதல் ; வரையறுத்தல் ; பிரமாணம் கொண்டு அறிதல் ; கொடுத்தல் ; கலத்தல் ; எட்டுதல் : கருதுதல் ; அளவளாவுதல் ; வீண்பேச்சுப் பேசுதல் . |
| அளத்தி | நெய்தல்நிலப் பெண் ; உப்பு அமைப்போனின் பெண் . |
| அளத்தியம் | சவர்க்காரம் ; நீலபாடாணம் . |
| அளத்துநிலம் | களர்நிலம் . |
| அளத்துப்பச்சை | கடற்கரையையடுத்துக் காணும் மருக்கொழுந்துச் சக்களத்தி என்னும் பூண்டு . |
| அளத்துப்புல் | காண்க : முயிற்றுப்புல் . |
| அளத்துப்பூளை | செடிவகை . |
| அளப்பம் | அளக்கை ; வழி ; ஊழ் ; அலப்பு . |
| அளப்பளத்தல் | அலப்புதல் ; முறுமுறுத்தல் . |
| அளப்பறிதல் | உட்கருத்தைத் தந்திரமாய் அறிதல் , ஒருவனுடைய எண்ணத்தை ஆராய்ந்து அறிதல் . |
| அளப்பன் | வீணாகப் பேசுவோன் . |
| அளப்பு | அளக்கை ; எல்லை ; ஆராய்ந்து அறிகை ; அலப்புகை ; முறுமுறுக்கை ; ஆலோசனை . |
| அளப்புக்கு | முடக்கொற்றான் கொடி . |
| அளபு | அளவு ; அளபெடை . |
| அளபெடுத்தல் | எழுத்து மாத்திரை மிக்கு ஒலித்தல் . |
| அளபெடை | பாட்டில் ஓசை மிகுந்து ஒலிக்கும் அளவு . |
| அளபெடைவண்ணம் | அளபெடை பயின்றுவரும் சந்தம் . |
| அளம் | உப்பளம் ; நெய்தனிலம் ; கடல் ; களர் நிலம் ; செறிவு . |
| அளம்படுதல் | வருந்துதல் . |
| அளம்பல் | வெடங்குறுணிமரம் . |
| அளம்பற்றுதல் | உப்புப்பூத்தல் . |
| அளமம் | பொன் . |
| அளர் | நீர் ; மஞ்சள் ; உவர் . |
| அளர்க்கம் | காண்க : தூதுவளை . |
| அளர்நிலம் | களர்நிலம் . |
| அளவநிலம் | களர்நிலம் . |
| அளர்ப்பூளை | காண்க : அளத்துப்பச்சை . |
| அளவடி | நாற்சீரான் வரும் அடி . |
| அளவடிவிருத்தம் | கலிவிருத்தம் . |
| அளவப்பொட்டல் | காண்க : அளர்நிலம் . |
| அளவம் | ஒருவனைப்போல் நடித்துப் பரிகசித்தல் . |
| அளவர் | உப்பமைப்போர் ; உழுது பயிரிடுவோர் வகையினர் ; மதிப்பிடுவோர் . |
| அளவழிச்சந்தம் | நான்கு முதல் இருபத்தாறு எழுத்துவரை வந்து அளவொவ்வாத அடிகளுடைய செய்யுள்வகை . |
| அளவழித்தாண்டகம் | இருபத்தேழெழுத்து முதலாக வந்து அளவொவ்வாத அடிகளுடைய செய்யுள்வகை |
| அளவளப்பு | அளவளாவுகை . |
| அளவளாவு | மனக்கலப்பு . |
| அளவளாவுதல் | கலந்து பேசுதல் . |
| அளவறுத்தல் | அளந்தறிதல் ; வரையறுத்தல் . |
| அளவன் | தானியம் அளப்போன் ; உப்பமைப்போன் ; சோரபாடாணம் . |
| அளவாக்குதல் | மட்டமாக்குதல் . |
| அளவி | அளவு . |
| அளவிடுதல் | ஆராய்ந்து அறிதல் ; அளத்தல் ; மதிப்பிடுதல் . |
| அளவிடை | ஆராய்ந்து அறிதல் ; அளத்தல் ; மதிப்பிடுதல் . |
| அளவியல் | பாவின் அடிவரையறை . |
| அளவியற்சந்தம் | நான்கு முதல் இருபத்தாறு எழுத்துவரை அளவொத்து வரும் அடிகளுடைய செய்யுள்வகை . |
| அள்ளுதல் | செறிதல் ; கையால் முகத்தல் ; திரளாய் எடுத்தல் ; வாரிக்கொண்டு போதல் ; எற்றுதல் ; நுகர்தல் . |
| அள்ளுமாந்தம் | குழந்தைகளுக்கு உண்டாகும் ஒருவகை நோய் . |
| அள்ளூறுதல் | வாயூறுதல் . |
| அள்ளெடுக்கிறவன் | ஒவ்வோர் அளவிலும் ஒவ்வொரு பிடி பெற்றுக்கொண்டு நெல் அளப்பவன் . |
| அள்ளெடுத்தல் | கையால் வாருதல் |
| அள்ளை | பேய் ; விலாப்புறம் . |
| அள்ளைப்புறம் | வீட்டின் ஒரு பகுதி . |
| அளக்கர் | கடல் ; நிலம் ; சேறு ; உப்பளம் ; நீள் வழி ; கார்த்திகை நாள் . |
| அளக்கல் | அளத்தல் . |
| அளக்காய் | காண்க : வெள்ளெருக்கு . |
| அளகத்தி | கூந்தலுடையவள் . |
| அளகபந்தி | கூந்தலின் ஒழுங்கு . |
| அளகபாரம் | கூந்தல் தொகுதி . |
| அளகம் | பெண்மயிர் ; மயிர்க்குழற்சி ; பன்றிமுள் ; மழைநீர் ; நீர் ; காண்க : வெள்ளெருக்கு . |
| அளகளப்பு | காண்க : அளவளப்பு ; சேர்க்கை . |
| அளகவல்லி | மயிர்மாட்டி . |
| அளகாதிபதி | அளகைநகர்த் தலைவனாகிய குபேரன் . |
| அளகாதிபன் | அளகைநகர்த் தலைவனாகிய குபேரன் . |
| அளகாபதி | அளகைநகர்த் தலைவனாகிய குபேரன் . |
| அளகாபுரி | குபேரனின் நகரம் ; தஞ்சாவூர் . |
| அளகு | கோட்டான் , கோழி , மயில் இவற்றின் பெண் ; சேவல் ; கார்த்திகை நாள் . |
| அளகேசன் | குபேரன் . |
| அளகை | அளகாபுரி ; தஞ்சை ; எட்டிற்கு மேலும் பத்திற்குக் கீழுமான வயதுடைய பெண் . |
| அளகையாளி | காண்க : அளகேசன் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 55 | 56 | 57 | 58 | 59 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அள்ளுதல் முதல் - அளவியற்சந்தம் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, அறிதல், அளத்தல், பெண், ஆராய்ந்து, குபேரன், தலைவனாகிய, செய்யுள்வகை, அடிகளுடைய, அளவு, அளபெடை, அளகைநகர்த், களர்நிலம், அளகேசன், அளவளப்பு, அளவொவ்வாத, மதிப்பிடுதல், கையால், வெள்ளெருக்கு, அளகாபுரி, நாள், கார்த்திகை, வந்து, அளர்நிலம், அளத்துப்பச்சை, அளக்கை, பேசுதல், அளவளாவுதல், அளவிடுதல், வரையறுத்தல், உப்பளம், கடல், நான்கு, இருபத்தாறு, வரும், நீர், நிலம், எழுத்துவரை

