தமிழ் - தமிழ் அகரமுதலி - திவறுதல் முதல் - தின்னுதல் வரை
சொல் | அருஞ்சொற்பொருள் |
திவறுதல் | சாதல் . |
திவா | பகல் ; நாள் ; நற்செயலுக்கு ஆகாதென நீக்கப்படும் காலம் . |
திவாகரன் | சூரியன் ; திவாகரம் என்னும் நூலின் ஆசிரியன் . |
திவாந்தகாலம் | மாலை . |
திவாநந்தம் | பகற்குருடாகிய ஆந்தை . |
திவாபீதம் | வெண்டாமரை . |
திவாராத்திரம் | பகலும் இரவும் . |
திவாராத்திரி | பகலும் இரவும் . |
திவால் | கடனைத் தீர்க்க வலுவற்ற நிலை . |
திவான் | முதலமைச்சன் ; அரசிறையதிகாரி . |
திவானி | நீதிமன்றம் . |
திவி | துறக்கம் ; பகற்கொழுதில் நற்செயலுக்கு ஆகாதென விலக்கப்பட்ட காலம் . |
திவிதிராட்சம் | காண்க : கொடிமுந்திரிகை . |
திவிபிநாமம் | காண்க : கொடிவேலி . |
திளைத்தல் | நெருங்குதல் ; நிறைதல் ; அசைதல் ; விளையாடுதல் ; முழுகுதல் ; நுகர்தல் ; தொழிலில் இடைவிடாது பயிலல் ; மகிழ்தல் ; பொருதல் ; துளைத்தல் ; கொதிக்கக் காய்ச்சுதல் ; இடைவிடாது ஒழுகுதல் . |
திற்றி | கடித்துத் தின்னுதற்குரிய உணவு ; இறைச்சி . |
திறக்கு | செயல் . |
திறக்குதல் | அதிகப்படுதல் . |
திறத்தகை | வலியவன் . |
திறத்தல் | கதவு முதலியவற்றின் காப்பு நீக்குதல் ; பூட்டு முதலியவற்றைத் திறத்தல் ; வழி முதலியவற்றின் அடைப்பு நீக்குதல் ; வெளிப்படுத்துதல் ; புத்தகம் முதலியவற்றை விரித்தல் ; துளைத்தல் ; பிளத்தல் . |
திறத்தவன் | செல்வம்படைத்தவன் ; வலியவன் ; திறமையுடையவன் . |
திறத்தி | மருத்துவச்சி . |
திறத்திறம் | நான்கு சுரமுள்ள பண் . |
திறந்தவெளி | வெளியான இடம் . |
திறந்தறை | காவலற்ற இடம் ; விளைவு இல்லாப் பூமி ; மறைவை வெளிப்படுத்துவோன் . |
திறந்துகாட்டுதல் | வெளிப்படையாக்குதல ; தெளிவாக விளக்குதல் . |
திறந்துபேசுதல் | மனத்தைவிட்டுப் பேசுதல் . |
திறப்படுதல் | கூறுபடுதல் ; சீர்ப்படுதல் . |
திறப்பண் | குறைந்த நரம்புள்ள பண்கள் . |
திறப்பணம் | காண்க : துறப்பணம் . |
திறப்பாடு | கூறுபாடு ; சீர்ப்படுகை ; திறமை . |
திறப்பு | வெளியிடம் ; திறவுகோல் ; வாயில் ; பிளப்பு ; அரசு தீர்வைநிலம் . |
திறபடுதல் | திறக்கப்படுதல் ; வெளியாதல் . |
திறம் | கூறுபாடு ; வகை ; சார்பு ; மிகுதி ; கூட்டம் ; நிலைபெறுதல் ; வலிமை ; திறமை ; மேன்மை ; கற்பு ; நேர்மை மருத்துவத்தொழில் ; வழி ; வரலாறு ; குலம் ; ஒழுக்கம் ; கூட்டம் ; ஆடு 80 , பசு 80 , எருமை 80 கூடின கூற்றம் ; கோட்பாடு ; விரகு ; உபாயம் ; ஐந்து சுரமுள்ள இசை ; பாதி ; உடம்பு ; வேடம் ; இயல்பு ; செய்தி ; காரணம் ; பேறு . |
திறம்புதல் | மாறுபடுதல் ; தவறுதல் ; நரம்பு முதலியன பிறழ்தல் . |
திறமை | சாமர்த்தியம் ; வலிமை ; துணிவு ; மேன்மை ; மிகுதி ; பேறு . |
திறமைக்காரன் | வல்லவன் ; செல்வன் . |
திறல் | வலிமை ; ஊக்கம் ; பகை ; போர் ; ஒளி ; வெற்றி . |
திறலோன் | வல்லமையுள்ளவன் ; பதினைந்தாண்டுப் பருவத்தான் . |
திறவது | உறுதியானது ; செவ்வையானது . |
திறவறிதல் | உபாயமறிதல் ; இரகசியத்தை வெளியிடும் தகுதியறிதல் ; பட்டறிதல் . |
திறவான் | வல்லவன் . |
திறவிது | செவ்விது ; உறுதியானது . |
திறவு | திறத்தல் ; வாயில் ; வழி ; வெளியிடம் ; உளவு ; காரணம் . |
திறவுகோல் | காண்க : தாழக்கோல் , சாவி . |
திறவோன் | பகுத்தறிவுள்ளவன் ; வலிமையுடையவன் . |
திறன் | கூறுபாடு . |
திறனில்யாழ் | நெய்தல் யாழ்த்திறம் . |
திறாங்கு | கதவடைதாழ் . |
திறாணி | காண்க : திராணி . |
திறுதட்டம் | நேர்நிற்கை . |
திறுதிட்டம் | நேர்நிற்கை . |
திறுதிறுக்கல் | அஞ்சி விழித்தல் . |
திறுதிறெனல் | அச்சத்தோடு நோக்கும் குறிப்பு . |
திறை | அரசிறை , கப்பம் . |
திறையளத்தல் | கப்பங்கட்டுதல் . |
தின்பண்டநல்கல் | முப்பத்திரண்டு அறங்களுள் வழிச்செல்வோருக்கு உணவிடும் அறச்செயல் . |
தின்பண்டம் | உணவுப்பொருள் ; பண்ணிகாரம் . |
தின்பன | திற்றி . |
தின்மர் | தின்பவர் . |
தின்மார் | தின்பவர் . |
தின்மை | தீமை ; சாவு ; தீய செயல் . |
தின்றல் | உண்ணல் ; மெல்லுதல் . |
தின்றி | காண்க : தின்பண்டம் . |
தின்னி | கண்ட இடங்களிலெல்லாம் தின்பவன் . |
தின்னிமாடன் | கண்ட இடங்களிலெல்லாம் தின்பவன் . |
தின்னுதல் | உண்ணுதல் ; கடித்தல் ; மெல்லுதல் ; அரித்தல் ; அழித்தல் ; வருத்துதல் ; வெட்டுதல் ; அராவுதல் ; பெறுதல் . |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 582 | 583 | 584 | 585 | 586 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திவறுதல் முதல் - தின்னுதல் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, திறத்தல், வலிமை, கூறுபாடு, திறமை, பேறு, வல்லவன், காரணம், மேன்மை, கூட்டம், ஆகாதென, உறுதியானது, நேர்நிற்கை, இடங்களிலெல்லாம், தின்பவன், கண்ட, மெல்லுதல், தின்பண்டம், தின்பவர், மிகுதி, வாயில், வலியவன், பகலும், செயல், திற்றி, இடைவிடாது, துளைத்தல், முதலியவற்றின், நீக்குதல், வெளியிடம், திறவுகோல், நற்செயலுக்கு, காலம், சுரமுள்ள, இடம், இரவும்