தமிழ் - தமிழ் அகரமுதலி - தினகரன் முதல் - தீக்கை வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| தினகரன் | பகலைச் செய்வோனான சூரியன் . |
| தினகவி | நாள்தோறும் கவிபாடுவோன் ; அரசன் திருவோலக்க மண்டபத்தில் உட்காரும் போதும் எழுந்திருக்கும்போதும் பாடும் பாட்டு . |
| தினகாரி | காண்க : தினகரன் . |
| தினகாலம் | எப்போதும் . |
| தினசரி | நாள்தோறும் ; நாட்குறிப்பு ; நாட்செயல் . |
| தினசரிக்குறிப்பு | நாட்குறிப்பு . |
| தினத்திரயம் | மூன்று நட்சத்திரங்கள் வரும் நாள் . |
| தினந்தினம் | ஒவ்வொரு நாளும் . |
| தினந்தோறும் | ஒவ்வொரு நாளும் . |
| தினநாதன் | நாளுக்குத் தலைவனான சூரியன் . |
| தினப்படி | நாள்தோறும் ; நாட்படித்தரம் . |
| தினப்பாடு | தின்னுகை ; நாள்தோறும் . |
| தினப்பொருத்தம் | காண்க : நட்சத்திரப் பொருத்தம் . |
| தினம் | நாள் ; பகல் ; நட்சத்திரம் ; நாள்தோறும் . |
| தினம்பார்த்தல் | நல்ல நாள் பார்த்தல் . |
| தினமணி | சூரியன் . |
| தினமானம் | காண்க : நாள்தோறும் ; கலியுகம் தொடக்கமாகக் கணிக்கப்பட்ட நாட்கணக்கு . |
| தினமுகம் | நாளின் முகமான விடியற்காலை . |
| தினவர்த்தமானம் | நாட்செய்தி . |
| தினவர்த்தமானி | செய்தித்தாள் . |
| தினவாரி | நாள்தோறும் . |
| தினவிருத்தி | காண்க : தினவாரி ; நாள்வேலை . |
| தினவு | சொறி . |
| தினவுதென்றல் | அரிப்புண்டாதல் . |
| தினவெடுத்தல் | அரிப்புண்டாதல் . |
| தினாமிகம் | நாளின் பகுதி . |
| தினாரம்பம் | விடியற்காலம் . |
| தினிகை | நாட்கூலி . |
| தினிசு | பொருளின் தரம் . |
| தினிசுவாரி | தரந்தரமாய் , வகைவகையாய் . |
| தினை | சிறுதானியவகை ; தினைவகை ; ஒரு புல்வகை ; காண்க : சாமை ; தினையளவு . |
| தினைக்குருவி | ஒரு சிறுகுருவிவகை . |
| தினைச்சாமை | காண்க : சாமை . |
| தினைப்புனம் | தினை விளையும் புலம் . |
| தினையளவு | மிகச் சிறிய அளவு . |
| தீ | ஒர் உயிர்மெய்யெழுத்து (த் + ஈ) ; பஞ்ச பூதத்துள் ஒன்றாகிய நெருப்பு ; வேள்வித் தீ ; கோபம் ; அறிவு ; தீமை ; நஞ்சு ; நரகம் ; விளக்கு ; உணவைச் செரிக்கச்செய்யும் வயிற்றுத் தீ ; வழிவகை . |
| தீக்கஞ்சி | நெருப்புக்கு அஞ்சுவதான ஆரத்திக் கருப்பூரம் . |
| தீக்கடவுள் | அக்கினிதேவன் . |
| தீக்கடன் | இறுதிச்சடங்கு ; அக்கினிகாரியம் . |
| தீக்கடைகோல் | கடைந்து நெருப்புண்டாக்க உதவும் அரசு அல்லது வன்னிமரத்துச் சிறு கட்டை . |
| தீக்கடைதல் | கடைந்து நெருப்புண்டாக்குதல் . |
| தீக்கணம் | செய்யுள் முதற்சீராக அமைக்கத் தகாததும் நிரைநேர்நிரை என வருவதுமாகிய செய்யுட்கணம் . |
| தீக்கதி | கொடிய உலகமாகிய நரகம் ; கொடிய விதி . |
| தீக்கதிர் | உலையாணிக்கோல் . |
| தீக்கரண்டி | நெருப்பு எடுக்கும் கருவி . |
| தீக்கரும்பு | விறகு . |
| தீக்கருமம் | தீய செயல் ; தீக்கடன் , ஈமக்கிரியை . |
| தீக்கரரை | காண்க : முள்ளுமுருங்கை . |
| தீக்கல் | தீத்தட்டிக் கல் ; இரும்புச் சத்துள்ள கல் . |
| தீக்கலம் | காண்க : தீச்சட்டி ; ஈமப்பள்ளி . |
| தீக்கனா | தீமை விளைவிக்கும் கனவு . |
| தீக்காய்தல் | குளிர்காய்தல் . |
| தீக்காரியம் | காண்க : தீக்கருமம் . |
| தீக்காலி | தன் வரவால் குடிகேடு விளைப்பவள் ; ஓர் அசுரன் . |
| தீக்காற்று | நெருப்புக்காற்று , அனற்காற்று . |
| தீக்கித்தல் | நோன்புகொள்ளல் . |
| தீக்கிதர் | காண்க : தீட்சிதர் . |
| தீக்குச்சி | தீ உண்டாக்கும் குச்சி ; தீங்கு விளைவிப்போன் . |
| தீக்குண்டம் | ஓமகுண்டம் . |
| தீக்குணம் | கெட்ட குணம் ; வெப்பம் . |
| தீக்குணர் | கீழ்மக்கள் ; தீயர் . |
| தீக்குதித்தல் | ஆவேசம் முதலியவற்றால் வேண்டுதலுக்காகத் தீக்குழியில் இறங்கி நடத்தல் ; தீப்பாய்தல் . |
| தீக்குருவி | காண்க : தீக்கோழி . |
| தீக்குளித்தல் | நெருப்பில் பாய்ந்து இறத்தல் . |
| தீக்குறி | கெடுவது காட்டுங் குறி ; தீநிமித்தம் . |
| தீக்கூர்மை | இந்துப்பு ; திலசாரம் என்னும் உப்பு . |
| தீக்கை | காண்க : தீட்சை . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 583 | 584 | 585 | 586 | 587 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
தினகரன் முதல் - தீக்கை வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, நாள்தோறும், நாள், சூரியன், நரகம், தீமை, நெருப்பு, தீக்கடன், கடைந்து, தீக்கருமம், தினையளவு, கொடிய, அரிப்புண்டாதல், நாளும், ஒவ்வொரு, நாட்குறிப்பு, நாளின், தினவாரி, தினை, தினகரன், சாமை

