முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » திருவிளக்குநாச்சியார் முதல் - திரோதை வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - திருவிளக்குநாச்சியார் முதல் - திரோதை வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| திருவிளக்குநாச்சியார் | விளக்குத் தெய்வம் ; கையில் விளக்கு ஏந்திய பதுமை . |
| திருவிளம் | காண்க : திராய் ; சிவதை . |
| திருவிளையாட்டு | தெய்வ விளையாட்டு . |
| திருவிளையாடல் | தெய்வல¦லை ; திருவிளையாடற் புராணம் ; சிற்றின்பக் களியாட்டம் . |
| திருவினாள் | திருமகள் . |
| திருவினை | நல்வினை . |
| திருவீதியலங்கரித்தல் | கோயில்மூர்த்தி தெருவில் உலாவரல் . |
| திருவுடம்பு | தெய்வக்களை பொருந்திய உடம்பு ; தெய்வத்திருமேனி . |
| திருவுண்ணாழி | கருவறை . |
| திருவுண்ணாழிகை | கருவறை . |
| திருவுரு | தெய்வ வடிவம் ; தெய்வத்திருமேனி . |
| திருவுள்ளம் | தெய்வசித்தம் ; பெரியோர் உள்ளக்கருத்து . |
| திருவுளக்குறிப்பு | தெய்வசித்தம் ; பெரியோர் உள்ளக்கருத்து . |
| திருவுளச்சீட்டு | தெய்வசித்தமறியுஞ் சீட்டு . |
| திருவுளச்செயல் | தெய்வச்செயல் . |
| திருவுளத்தடைத்தல் | மனத்திற்கொள்ளுதல் . |
| திருவுளம்பற்றுதல் | ஏற்றுக்கொள்ளுதல் ; கேட்கமனங் கொள்ளுதல் ; அருள்புரிதல் ; கருதுதல் . |
| திருவுளம்வைத்தல் | அருள்புரிதல் ; விருப்பங் கொள்ளுதல் . |
| திருவுளமடுத்தல் | எண்ணுதல் . |
| திருவுளமறிய | தெய்வசாட்சியாய் . |
| திருவுறுப்பு | மகளிர் நெற்றியில் அணியும் சீதேவி என்னும் அணி . |
| திருவூசல் | கோயில்மூர்த்திகள் எழுந்தருளியிருந்து ஆடும் ஊஞ்சல் . |
| திருவூறல் | ஊற்றுநீர் ; வெயிற்காலத்திலே ஆற்றிடைக்குறையில் நடத்துந் திருவிழா . |
| திருவெம்பாவை | மார்கழி மாதத்தில் ஓதப்படும் திருவாசகப் பகுதி . |
| திருவெழுச்சி | திருவிழா . |
| திருவெழுத்து | அரசன் கையெழுத்து ; கொச்சி , திருவிதாங்கூர் அரசர்களின் கட்டளை ; ஐந்தெழுத்து மந்திரம் . |
| திருவேகம்பம் | காஞ்சிபுரத்தில் விளங்கும் சிவன் திருக்கோயில் . |
| திருவேங்கடம் | திருப்பதி என்று வழங்கும் திருத்தலம் . |
| திருவேடம் | திருநீறு , கண்டிகை முதலிய சைவக்கோலம் ; சைவ மடங்களில் உள்ள துறவியர் அணியும் காதணிவகை . |
| திருவொற்றாடை | திருமுழுக்குச் செய்ததும் சுவாமி திருமேனியில் ஒற்றி உபசரிக்கும் ஆடை . |
| திருவோடு | பரதேசிகளின் பிச்சைப்பாத்திரம் . |
| திருவோணம் | இருபத்தேழு நாள்களுள் இருபத்திரண்டாவது நாள் ; திருவோணத் திருவிழா . |
| திருவோலக்கம் | அத்தாணி மண்டபத்தில் வீற்றிருக்கை ; தெய்வ சன்னிதானம் . |
| திருவோலை | காண்க : திருமுகம் . |
| திரேக்காணம் | இராசியின் மூன்றில் ஒரு பாகம் . |
| திரேதம் | காண்க : திரேதாயுகம் . |
| திரேதாக்கினி | காண்க : முத்தீ . |
| திரேதாயுகம் | நான்கு யுகங்களுள் இரண்டாவது . |
| திரேதை | நான்கு யுகங்களுள் இரண்டாவது . |
| திரை | அலை ; ஆறு ; பூமி ; கடல் ; ஏழு என்னும் குழூஉக்குறி ; திரைச்சீலை ; தோற்சுருக்கம் ; வெற்றிலை ; வெற்றிலைச் சுருள் ; வைக்கோற் புரி ; பஞ்சுச்சுருள் . |
| திரைச்சீலை | இடுதிரை . |
| திரைத்தல் | சுருக்குதல் ; சுருட்டுதல் , தன்னுள் அடக்குதல் ; ஒதுக்குதல் ; ஆடைகொய்தல் ; அலையெழுதல் ; அணைத்தல் ; தோல் சுருங்குதல் . |
| திரைத்தவிர்தல் | விட்டுவிட்டு ஒளிவிடல் . |
| திரைத்துப்பாடுதல் | திரும்பத்திரும்ப நீட்டிப் பாடுதல் . |
| திரைதல் | சுருங்குதல் ; வயது முதிர்ச்சியால் தோல் சுருங்குதல் ; அலையெழுதல் ; மிதந்து ஆடுதல் ; திரிதல் ; திரளுதல் ; இழை விலகுதல் . |
| திரைப்பு | சுருங்குகை ; அலையெழுகை ; திரையால் மறைத்த இடம் . |
| திரையல் | சுருங்கல் ; வெற்றிலை ; வெற்றிலைச் சுருள் . |
| திரையன் | நெய்தல்நிலத் தலைவன் ; தொண்டைநாட்டு அரசன் . |
| திரைராசிகம் | முத்தொகை வினா . |
| திரைலோக்கியம் | மூவுலகம் ; பேரழகுள்ளது . |
| திரைவிழுதல் | தோல் சுருக்குவிழுதல் . |
| திரைவு | தோல் சருங்குகை ; அலையெழுகை . |
| திரோகிதம் | மறைவு ; மறைக்கப்பட்டது . |
| திரோதகம் | மறைத்தலைச் செய்வது . |
| திரோதசத்தி | மறைத்தல் , ஆன்மாக்களுக்கு உலக அனுபவங்களைக் கொடுத்து உண்மையை மறைத்தல் செய்யும் சிவபெருமானின் ஐவகை ஆற்றலுள் ஒன்று . |
| திரோதம் | மறைத்தல் , ஆன்மாக்களுக்கு உலக அனுபவங்களைக் கொடுத்து உண்மையை மறைத்தல் செய்யும் சிவபெருமானின் ஐவகை ஆற்றலுள் ஒன்று . |
| திரோதயம் | மறைத்தல் , ஆன்மாக்களுக்கு உலக அனுபவங்களைக் கொடுத்து உண்மையை மறைத்தல் செய்யும் சிவபெருமானின் ஐவகை ஆற்றலுள் ஒன்று . |
| திரோதாயி | மறைத்தல் , ஆன்மாக்களுக்கு உலக அனுபவங்களைக் கொடுத்து உண்மையை மறைத்தல் செய்யும் சிவபெருமானின் ஐவகை ஆற்றலுள் ஒன்று . |
| திரோதானகரி | மறைத்தல் , ஆன்மாக்களுக்கு உலக அனுபவங்களைக் கொடுத்து உண்மையை மறைத்தல் செய்யும் சிவபெருமானின் ஐவகை ஆற்றலுள் ஒன்று . |
| திரோதானசத்தி | மறைத்தல் , ஆன்மாக்களுக்கு உலக அனுபவங்களைக் கொடுத்து உண்மையை மறைத்தல் செய்யும் சிவபெருமானின் ஐவகை ஆற்றலுள் ஒன்று . |
| திரோதானம் | மறைப்பு ; ஒரு நரகம் ; காண்க : திரோதான சத்தி ; திரோப(பா)வம் . |
| திரோதித்தல் | மறைத்தல் ; ஆன்மாவை மயக்கமுறச் செய்தல் . |
| திரோதை | காண்க : திரோதசத்தி . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 580 | 581 | 582 | 583 | 584 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருவிளக்குநாச்சியார் முதல் - திரோதை வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், மறைத்தல், உண்மையை, கொடுத்து, ஆன்மாக்களுக்கு, செய்யும், காண்க, அனுபவங்களைக், சிவபெருமானின், ஆற்றலுள், ஒன்று, ஐவகை, தோல், தெய்வ, திருவிழா, சுருங்குதல், அலையெழுதல், அலையெழுகை, திரோதசத்தி, சுருள், திரைச்சீலை, உள்ளக்கருத்து, கொள்ளுதல், அருள்புரிதல், பெரியோர், தெய்வசித்தம், தெய்வத்திருமேனி, கருவறை, அணியும், என்னும், இரண்டாவது, வெற்றிலை, யுகங்களுள், நான்கு, அரசன், திரேதாயுகம், வெற்றிலைச்

