தமிழ் - தமிழ் அகரமுதலி - தீக்கொள்ளி முதல் - தீத்தகம் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| தீக்கொள்ளி | நெருப்பிடுவோன் ; கலக மூட்டுபவன் . |
| தீக்கொளுத்தி | நெருப்பிடுவோன் ; கலக மூட்டுபவன் . |
| தீக்கோழி | நெருப்புக்கோழி . |
| தீக்கோள் | கேடுதரும் கிரகம் . |
| தீகுறுதல் | தீயினால் அழிதல் . |
| தீங்கனி | இனிய பழம் . |
| தீங்கு | தீமை ; குற்றம் ; துன்பம் . |
| தீச்சகுனம் | தீநிமித்தம் |
| தீச்சட்டி | வேண்டுதலுக்கு எடுக்கும் நெருப்புச் சட்டி ; கணப்புச்சட்டி . |
| தீச்சடம் | சிறுநீர் . |
| தீச்சலம் | ஒரு பணிகாரவகை ; ஒருவகைக் கடல் மீன் ஓடு . |
| தீச்சனகம் | காண்க : இலுப்பை . |
| தீச்சனம் | காண்க : மிளகு . |
| தீச்சார்பு | தீயோர் தொடர்பு , கெட்டவர் சேர்க்கை . |
| தீச்சுடர் | தீக்கொழுந்து ; வெடியுப்பு . |
| தீச்சொல் | பழிச்சொல் . |
| தீசகன் | ஆலோசனையுள்ளவன் ; ஆசிரியன் . |
| தீசல் | சமையலில் கருகியது ; தீக்குணமுள்ளவர் ; தீக்குணமுள்ளது . |
| தீஞ்சுபோதல் | எரிந்துபோதல் ; பயிர்முதலியன கருகுதல் ; சோறு முதலியன காந்துதல் ; சீற்றம் கொள்ளுதல் ; அழிதல் . |
| தீஞ்சுவை | இன்சுவை . |
| தீஞ்சேறு | இனிய பாகு . |
| தீஞ்சொல் | இனிய மொழி . |
| தீட்சணகண்டகம் | முள்நாவல் . |
| தீட்சணகந்தகம் | வெங்காயம் . |
| தீட்சணகம் | காண்க : வெண்கடுகு . |
| தீட்சணசாரம் | காண்க : இலுப்பை . |
| தீட்சணதண்டுலம் | திப்பிலி . |
| தீட்சணபத்திரம் | அலரி . |
| தீட்சணபுட்பம் | இலவங்கம் . |
| தீட்சணம் | உறைப்பு ; கடுமை ; கூர்மை ; ஆயுதம் ; மிளகு ; கஞ்சாங்கோரை ; இரும்பு ; கொள்ளை நோய் ; இறப்பு . |
| தீட்சணரோகம் | கொடிய நோய் . |
| தீட்சணியம் | உறைப்பு ; கடுமை ; கூர்மை . |
| தீட்சாகுரு | ஒருவனுக்குத் தீட்சைச் சடங்கு செய்யும் ஆசாரியன் . |
| தீட்சித்தல் | நோக்கம் , தொடுகை , உபதேசம் முதலியவற்றால் அருளுடன் குரு தீட்சை செய்வித்தல் ; பேரூக்கம் காட்டுதல் ; விரதநியமம் கொள்ளுதல் . |
| தீட்சிதர் | யாகம் செய்தோர் ; தில்லை மூவாயிரவர் ; வேள்வி செய்த பார்ப்பனர் தரிக்கும் பட்டப்பெயர் ; சங்கற்பம் கொண்டவர் ; சமயதீட்சை பெற்றோர் . |
| தீட்சை | அறிவுரை ; நோன்பு ; சங்கற்பம் ; குருவின் அருளுரை ; ஞானபோதனை ; அறிவுரை கேட்டல் ; பக்குவ ஆன்மாவைக் கரையேற்றல் ; சமயதீட்சை , விசேடதீட்சை , நிர்வாணதீட்சை என்னும் மூவகைச் சைவசமயச் சடங்கு ; நயனதீட்சை , பரிசதீட்சை முதலிய எழுவகையான சைவசமயச் சடஙகுகள் ; குறித்த காலத்தின் முடிவுவரை மயிர் வளர்க்கை . |
| தீட்சைகேட்டல் | குருவினிடமிருந்து உபதேசம் பெறுகை . |
| தீட்சைபண்ணுதல் | உபதேசந்தரல் . |
| தீட்டணசாரம் | காண்க : இலுப்பை . |
| தீட்டணம் | காண்க : கஞ்சாங்கோரை . |
| தீட்டம் | மலம் ; தீண்டுகை ; மகப்பேறு , இறப்பு முதலியவற்றால் உண்டாவதாகக் கருத்ப்படும் தீட்டு ; மாதவிடாய் . |
| தீட்டரிசி | தவிடு நீக்கிய அரிசி . |
| தீட்டலரிசி | தவிடு நீக்கிய அரிசி . |
| தீட்டிப்பார்த்தல் | கல்வி முதலியவற்றைச் சோதித்தல் . |
| தீட்டு | கூராக்குகை ; மாதவிடாய் ; பிறப்பு இறப்பு முதலியவற்றால் உண்டாவதாகக் கருதப்படும் தீட்டு ; தீண்டுகை ; சீட்டு ; பூச்சு ; அடி ; துப்புரவாக்குதல் . |
| தீட்டுக்கல் | சாணைக்கல் . |
| தீட்டுக்கவி | காண்க : சீட்டுக்கவி . |
| தீட்டுக்காரி | மாதவிடாய் கொண்டவள் . |
| தீட்டுக்குற்றி | ஆயுதம் தீட்டும் தடி . |
| தீட்டுகோல் | எழுதுகோல் . |
| தீட்டுதல் | கூராக்குதல் ; துலக்குதல் ; மினுக்குதல் ; அரிசி குற்றித் தூய்மைசெய்தல் ; கோதுதல் ; தூய்மைசெய்தல் ; பூசுதல் ; எழுதுதல் ; சித்திரித்தல் ; சொல்லுதல் ; அடித்தல் ; சாத்துதல் . |
| தீட்டுப்படுதல் | தீண்டத்தகாதவரைத் தீண்டுதலால் தூய்மை கெடுதல் . |
| தீட்டுப்பலகை | கத்தி முதலியன தீட்டும் பலகை . |
| தீட்டுவீடு | பிறப்பாலும் இறப்பாலும் தீட்டுள்ள வீடு . |
| தீட்பு | இழிவு ; ஒழுக்கத் தவறுதலால் நேரும் குற்றம் . |
| தீண்டல் | தீண்டுதல் ; பிறப்பு இறப்பு முதலியவற்றால் உண்டாவதாகத் கருதப்படும் தீட்டு ; மாதவிடாய் ; வயல் . |
| தீண்டியம் | காண்க : பவளக்குறிஞ்சி . |
| தீண்டுதல் | தொடுதல் ; பற்றுதல் ; பாம்பு முதலியன கடித்தல் ; அடித்தல் ; தீட்டுப்படுத்துதல் . |
| தீத்தகம் | பொன் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 584 | 585 | 586 | 587 | 588 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
தீக்கொள்ளி முதல் - தீத்தகம் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, மாதவிடாய், முதலியவற்றால், இறப்பு, தீட்டு, அரிசி, முதலியன, இலுப்பை, இனிய, அறிவுரை, சைவசமயச், தீண்டுகை, உண்டாவதாகக், பிறப்பு, தூய்மைசெய்தல், அடித்தல், தீண்டுதல், தீட்டும், கருதப்படும், நீக்கிய, சமயதீட்சை, தவிடு, உபதேசம், கொள்ளுதல், உறைப்பு, மிளகு, குற்றம், மூட்டுபவன், அழிதல், கடுமை, கூர்மை, நெருப்பிடுவோன், தீட்சை, சடங்கு, நோய், ஆயுதம், கஞ்சாங்கோரை, சங்கற்பம்

