தமிழ் - தமிழ் அகரமுதலி - திரோபவம் முதல் - திவளுதல் வரை
சொல் | அருஞ்சொற்பொருள் |
திரோபவம் | ஆன்மா தன் கன்மம் முடியும் வரையில் உலக அனுபவங்களில் உழன்று மயங்கும்படி உண்மையை மறைத்தலைச் செய்யும் சிவபெருமானது அருட்செயல் . |
திரோபாவம் | ஆன்மா தன் கன்மம் முடியும் வரையில் உலக அனுபவங்களில் உழன்று மயங்கும்படி உண்மையை மறைத்தலைச் செய்யும் சிவபெருமானது அருட்செயல் . |
திரோபவித்தல் | மறைத்தல் ; ஆன்மாவை மயக்கமுறச் செய்தல் . |
திரௌபதர் | திரௌபதியின் புதல்வர் . |
திரௌபதீயர் | திரௌபதியின் புதல்வர் . |
தில் | விழைவு , காலம் , ஒழியிசை என்னும் பொருளில் வரும் ஒர் இடைச்சொல் . |
தில்ல | விழைவு , காலம் , ஒழியிசை என்னும் பொருளில் வரும் ஒர் இடைச்சொல் . |
தில்லம் | காடு . |
தில்லானா | தாளக்குறிப்பு ; ஒரு சந்தக்குழிப்பு ; தில்லா அல்லது தில்லானா என்று முடியும் இசைப்பாட்டுவகை . |
தில்லி | டில்லிப்பட்டணம் ; மிகச் சிறிய நிலப்பகுதி . |
தில்லியம் | நல்லெண்ணெய் ; புதிதாகத்திருத்தப்பட்ட விளைபுலம் . |
தில்லுப்பில்லு | பொய்புரட்டு . |
தில்லுமுல்லு | பொய்புரட்டு . |
தில்லை | ஒரு மரவகை ; சிதம்பரம் ; தில் என்னும் இடைச்சொல் ; சம்பாநெல்வகை . |
தில்லைநாயகம் | ஒரு சம்பாநெல்வகை . |
தில்லைமூவாயிரவர் | சிதம்பரம் திருக்கோயிலின் உரிமைக்குருக்கள் , தில்லைவாழ் அந்தணர் . |
தில்லையம்பலம் | கனகசபை , சிதம்பரத்தில் நடராசர் கோயில்கொண்டுள்ள பொன்னம்பலம் . |
தில்லைவனம் | தில்லைமரக் காடாகிய சிதம்பரம் . |
திலகடம் | எள்ளுப்பிண்ணாக்கு . |
திலகம் | நெற்றிப்பொட்டு ; சிறந்தது ; கட்டளைக் கலித்துறைவகை ; மஞ்சாடிமரம் . |
திலகலம் | செக்கு . |
திலகன் | சிறந்தவன் . |
திலகாதுகன் | எண்ணெய் வாணியன் . |
திலகை | எள்ளுப்போலக் கருநிறமுற்ற கத்தூரி வகை . |
திலதண்டகன் | காண்க : திலகாதுகன் . |
திலதண்டுலம் | எள்ளுடன் கலந்த அரிசி ; புணர்ச்சிக் காலத்துச் செய்யும் எண்வகை ஆலிங்கனத்துள் ஒன்று . |
திலதம் | காண்க : திலகம் . |
திலதர்ப்பணம் | பிதிரர்பொருட்டு எள்ளுந் தண்ணீரும் இறைத்தல் . |
திலதைலம் | நல்லெண்ணெய் . |
திலப்பொறி | எள் இட்டு ஆட்டும் செக்கு . |
திலம் | எள்ளு ; மஞ்சாடிமரம் . |
திலவகம் | விளாம்பட்டை . |
திலு | மூன்றனைக் குறிக்க வழங்கும் குழூஉக்குறி . |
திலுப்புலு | முப்பது என்பதனைக் குறிக்கும் குழூஉக்குறி . |
திலோத்தமை | தெய்வலோக ஆடல் மகளிருள் ஒருத்தி . |
திலோதகம் | காண்க : திலதர்ப்பணம் . |
திவ்வியகவி | தெய்வப்புலவன் . |
திவ்வியசட்சு | காண்க : திவ்வியதிருட்டி . |
திவ்வியத்தொனி | தேவர்கள் அருகக்கடவுள் முன்பு செய்யும் ஆரவார ஒலி . |
திவ்வியதிருட்டி | முக்கால உணர்வு , தீர்க்க தரிசனம் ; தீர்க்கதரிசி . |
திவ்வியதீர்த்தம் | வெயில் காயும்போது பெய்யும் மழையில் நீராடல் . |
திவ்வியதேசம் | ஆழ்வார்களால் பாடப்பெற்ற திருப்பதிகள் . |
திவ்வியப்பிரபந்தம் | பன்னிரு ஆழ்வார்களின் அருளிச் செயல்களாகிய நாலாயிரம் பாடல் கொண்ட தொகுதி . |
திவ்வியபோதனை | ஞானோபதேசம் . |
திவ்வியம் | தெய்வத்தன்மையுள்ளது ; மேன்மையானது ; ஒரு சந்தனவகை . |
திவ்வியமங்களவிக்கிரகம் | அருச்சனை செய்து வழபடற்குரிய தெய்வத்திருமேனி . |
திவ்வியமாக | நன்றாக . |
திவ்வியமுத்திரை | கட்டைவிரலும் மோதிரவிரலும் சேர்ந்த முத்திரை . |
திவ்வியரத்தினம் | சிந்தாமணி முதலிய தெய்வமணி . |
திவ்வியவராடி | குறிஞ்சிப்பண்வகை . |
திவ்வியவருடம் | தேவஆண்டு ; அது மானுட ஆண்டு முந்நூற்றறுபத்தைந்து கொண்டது என்பர் . |
திவ்வியாத்திரம் | தெய்வப்படைகள் . |
திவ்வியாதிவ்வியம் | தெய்வத்தன்மையும் மானுடத்தன்மையும் சேர்ந்துள்ளது . |
திவ்வியாபரணம் | அரசர் முதலியோர் அணியும் சிறந்த அணிகலன் . |
திவசம் | பகல் ; நாள் ; சிராத்தம் ; ஒருவர் இறந்த திதி . |
திவம் | பகல் ; பரமபதம் ; வானம் . |
திவரம் | நாடு . |
திவலை | சிதறுந் துளி ; மழைத்துளி ; மழை . |
திவவு | யாழின் தண்டில் நரம்புகளை வலிபெறக்கட்டும் வார்க்கட்டு ; மலைமேல் ஏறும் படிக்கட்டு . |
திவள்தல் | துவளுதல் ; வாடுதல் ; திளைத்தல் ; அசைதல் ; விளங்குதல் ; தொடுதல் ; தீண்டி யின்புறுத்துதல் . |
திவளுதல் | துவளுதல் ; வாடுதல் ; திளைத்தல் ; அசைதல் ; விளங்குதல் ; தொடுதல் ; தீண்டி யின்புறுத்துதல் . |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 581 | 582 | 583 | 584 | 585 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திரோபவம் முதல் - திவளுதல் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், செய்யும், காண்க, என்னும், சிதம்பரம், இடைச்சொல், முடியும், கன்மம், திலதர்ப்பணம், குழூஉக்குறி, திலகாதுகன், செக்கு, சம்பாநெல்வகை, திலகம், மஞ்சாடிமரம், திவ்வியதிருட்டி, பகல், தொடுதல், தீண்டி, யின்புறுத்துதல், விளங்குதல், அசைதல், வாடுதல், திளைத்தல், துவளுதல், பொய்புரட்டு, அருட்செயல், திரௌபதியின், புதல்வர், சிவபெருமானது, அனுபவங்களில், மயங்கும்படி, உண்மையை, மறைத்தலைச், தில், விழைவு, ஆன்மா, தில்லானா, நல்லெண்ணெய், வரும், பொருளில், காலம், ஒழியிசை, வரையில், உழன்று