தமிழ் - தமிழ் அகரமுதலி - திருமொழி முதல் - திருவிளக்கு வரை
சொல் | அருஞ்சொற்பொருள் |
திருமொழி | பெரியோர் சொல் ; ஆகமம் ; தருமம் ; நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்துள் ஒன்றான பெரிய திருமொழி . |
திருவகுப்பு | சந்தக் குழிப்பில் அமைந்த செய்யுள் வகை . |
திருவட்டி | காண்க : திருகுகள்ளி . |
திருவடி | சீபாதம் ; சுவாமி ; முனிவர் ; திருமாலின் பாதத்தில் இருக்கும் அனுமான் ; கருடன் ; திருவாங்கூர் அரசர் ; நோவில்லாத புண் ; கோமாளி விகடம் . |
திருவடிக்கம் | திருமால்கோயிற் படிக்கத்தினின்று எடுத்து வழங்கும் சுவாமி தீர்த்தம் . |
திருவடிசம்பந்தி | சீடன் . |
திருவடித்தலம் | கடவுள் முதலியோர் பாதுகை . |
திருவடிதீட்சை | சீடன் தலையில் குரு தன் பாதத்தை வைத்தருளும் தீட்சைவகை . |
திருவடிதொழுதல் | கடவுள் முதலியோரை வணங்குதல் . |
திருவடிநிலை | சிலை வைக்கும் மேடை ; கடவுளர் முதலியோர் மிதியடி . |
திருவடிபிடிப்பான் | கோயில் அருச்சகன் . |
திருவடையாளம் | சைவசமயத்திற்குரிய திருநீறு முதலிய சாதனங்கள் . |
திருவணுக்கன் | திருவாயில் கருவறையை அடுத்துள்ள இடம் . |
திருவணை | சேது . |
திருவணைக்கரை | தனுக்கோடி . |
திருவத்தவர் | செல்வம் படைத்த நல்வினையாளர் . |
திருவத்தியயனம் | திவ்வியப் பிரபந்தம் ஓதுகை ; சிராத்தம் . |
திருவந்திக்காப்பு | திருவிழாக் காலத்தில் சுவாமி புறப்பாட்டின் முடிவில் கண்ணேறு போகச் செய்யும் சடங்கு . |
திருவம்பலம் | தென்னார்க்காட்டு மாவட்டத்திலுள்ள புகழ்வாய்ந்த சிவதலம் , சிதம்பரம் . |
திருவமால் | திருமால் . |
திருவமுது | நிவேதனவுணவு . |
திருவரங்கு | கோயிலுள்ள முதன்மை மண்டபம் . |
திருவலகிடுதல் | கோயிலைப் பெருக்கித் துப்புரவாக்கல் . |
திருவலகு | கோயிலைப் பெருக்கும் துடைப்பம் . |
திருவள்ளுவப்பயன் | திருவள்ளுவர் தந்த திருக்குறள் . |
திருவளத்தான் | நகைச்சுவை நடிகன் , கோமாளி , விகடன் . |
திருவறம் | மததருமம் ; சமண ஒழுக்கம் . |
திருவன் | செல்வன் ; திருமால் ; விகடக்காரன் ; புரட்டன் ; ஒரு மீன்வகை . |
திருவாக்கு | தெய்வப் பெரியோர்களின் வாய்மொழி . |
திருவாங்குதல் | தாலி களைதல் . |
திருவாசகம் | திவ்விய வாக்கு ; மாணிக்கவாசகர் அருளிய துதிநூல் . |
திருவாசி | வாகனப் பிரபை ; ஒரு மாலை வகை . |
திருவாசிகை | வாகனப் பிரபை ; ஒரு மாலை வகை . |
திருவாட்சி | வாகனப் பிரபை ; ஒரு மாலை வகை . |
திருவாட்டி | செல்வி , செல்வமுடையவள் . |
திருவாடுதண்டு | கோயில் ஊர்தியைச் சுமக்க உதவும் தண்டு ; ஒரு பல்லக்குவகை . |
திருவாணை | அரசாணை . |
திருவாத்தான் | காண்க : திருவளத்தான் . |
திருவாத்தி | ஒரு பூமரவகை . |
திருவாதிரை | இருபத்தேழு நட்சத்திரங்களுள் ஆறாவது நட்சத்திரம் ; காண்க : ஆருத்திரா தரிசனம் ; சடங்குவகை . |
திருவாபரணம் | கடவுளர்க்கு அணியும் அணிகலன் . |
திருவாய்க்கேள்வி | அரசனது ஆணை ; இராசவிசாரணை . |
திருவாய்மலர்தல் | கூறியருளுதல் ; பெரியார் சொல்லுதல் . |
திருவாய்மொழி | தெய்வவாக்கு ; நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்துள் நம்மாழ்வார் அருளிய தமிழ்நூல் . |
திருவாராதனம் | கடவுட்பூசை ; இறைவனது ஐயாற்றலுள் ஒன்று . |
திருவாலி | புரட்டன் . |
திருவாழ்த்தான் | காண்க : திருவளத்தான் . |
திருவாழி | திருமாலின் சக்கரம் ; மோதிரம் . |
திருவாழிக்கல் | முத்திரையிடப்பெற்ற எல்லைக்கல் . |
திருவாளர் | ஒருவர் பெயருக்குமுன் வழங்கும் மரியாதைச் சொல் . |
திருவாளன் | விகடன் ; தெய்வத் திருவருள் பெற்றவன் . |
திருவாறாட்டு | தெய்வத் திருமேனியை நீராட்டுகை . |
திருவாறாடல் | தெய்வத் திருமேனியை நீராட்டுகை . |
திருவி | செல்வம் உள்ளவள் . |
திருவிடையாட்டம் | கோயில்தொண்டு ; தேவதான மானியம் . |
திருவிருந்து | திவ்விய விருந்து ; நல்லருள் . |
திருவிருப்பு | கோயில் அமைந்த இடம் . |
திருவில் | அழகிய வில்லான வானவில் . |
திருவிலி | தாலியற்ற கைம்பெண் . |
திருவிழா | கோயிலில் நிகழும் திருநாள் . |
திருவிழாப்புறம் | திருவிழா நடத்துவதற்காக விடப்பட்ட இறையிலி நிலம் . |
திருவிளக்கு | கோயில் விளக்கு ; மங்கலமாக வைக்கும் விளக்கு . |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 579 | 580 | 581 | 582 | 583 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருமொழி முதல் - திருவிளக்கு வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, கோயில், திருவளத்தான், பிரபை, வாகனப், தெய்வத், சொல், மாலை, திவ்வியப், சுவாமி, திருவிழா, விகடன், விளக்கு, புரட்டன், திவ்விய, கோயிலைப், திருமேனியை, நீராட்டுகை, அருளிய, இடம், அமைந்த, திருமாலின், பிரபந்தத்துள், நாலாயிரத், திருமொழி, கோமாளி, வழங்கும், வைக்கும், செல்வம், முதலியோர், கடவுள், சீடன், திருமால்