தமிழ் - தமிழ் அகரமுதலி - திருமண்காப்பு முதல் - திருமை வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| திருமண்காப்பு | வைணவர் நெற்றியில் இடும் திருநாமம் . |
| திருமணம் | கலியாணம் . |
| திருமணம்பரிமாறுதல் | தாளித்தல் ; பொய் கலந்து பேசுதல் . |
| திருமணிகுயிற்றுநர் | முத்துக்கோப்போர் . |
| திருமதில் | கோயிலின் சுற்றுமதில் . |
| திருமதுரம் | பழம் , நெய் , சருக்கரை சேர்த்துச் செய்யப்படும் படையற்பொருள் . |
| திருமந்திரம் | சிவஐந்தெழுத்து ; திருமால் எட்டெழுத்து ; திருமூலர் இயற்றிய நூல் ; கோயில் . |
| திருமந்திரவோலைநாயகம் | அரசவை எழுத்தாளர் தலைவன் . |
| திருமரம் | அரசமரம் . |
| திருமலர் | திருமகள் வீற்றிருக்கும் தாமரைமலர் . |
| திருமலை | தூய்மையான மலை ; கயிலாயமலை ; திருவேங்கடமலை . |
| திருமறுமார்பன் | அருகன் ; மார்பில் அழகிய மறுவையுடைய திருமால் . |
| திருமாது | திருமகள் . |
| திருமாமகள் | திருமகள் . |
| திருமாமணிமண்டபம் | பரமபதத்துள்ள திருவோலக்க மண்டபம் . |
| திருமால் | விட்டுணு ; அரசன் . |
| திருமால்குன்றம் | அழகர்மலை . |
| திருமால்கொப்பூழ் | திருமாலின் கொப்பூழிலிருந்து உண்டான தாமரை . |
| திருமால்நிலை | திருமாலின் பரம் , வியூகம் , விபவம் , அந்தர்யாமித்துவம் , அர்ச்சை என்னும் ஐவகை வடிவங்கள் . |
| திருமால்புதல்வன் | திருமாலின் மகனான மன்மதன் ; பிரமன் . |
| திருமாலவதாரம் | மீன் , ஆமை , பன்றி , நரசிங்கம் , வாமனம் , பரசுராமன் , இராமன் , பலராமன் , கண்ணன் , கற்கி என்னும் திருமாலின் பத்துப் பிறப்புகள் ; சனகன் , சனந்தனன் , சனாதனன் , சனற்குமாரன் , நரநாராயணன் , கபிலன் , இடபன் , நாரதன் , அயக்கிரீவன் , தத்தாதிரேயன் , மோகினி , வேள்வியின்பதி , வியாதன் , தன்வந்திரி , புத்தன் எனப் பதினைந்து கூறுகளையுடைய பிறப்புகள் . |
| திருமாலாயுதம் | திருமாலின் ஐம்படைகளான பாஞ்சசன்னியம் என்னும் சங்கு , சுதரிசனம் என்னும் சக்கரம் , சார்ங்கம் என்னும் வில் , நாந்தகம் என்னும் வாள் கௌமோதகி என்னும் தண்டு . |
| திருமாலிருஞ்சோலை | காண்க : அழகர்மலை . |
| திருமாளிகை | கோயில்மதிலை ஒட்டி உட்புறத்து அமைத்துள்ள கட்டட வரிசை ; பெரியோர் வாழும் இல்லம் . |
| திருமானகரம் | காண்க : திருநாடு . |
| திருமுகம் | கடவுள் சன்னிதானம் ; பெரியோர் வரைந்து அனுப்பும் ஓலை ; அரசனது சாசனம் . |
| திருமுட்டு | பூசைத்தட்டு முதலியன . |
| திருமுடி | கோயில்மூர்த்தியின் தலைப்பகுதி ; மதிப்புவாய்ந்த மக்கள் ; கொத்துவேலை செய்வோர் . |
| திருமுடிச்சாத்து | தலைப்பாகை . |
| திருமுடிச்சேவகர் | ஐயனார் . |
| திருமுடித்திலகம் | திருமுடியில் சூட்டும் மணி . |
| திருமுடியோன் | முடிசூடிய அரசன் . |
| திருமுண்டம் | சைவர்கள் மூன்று வரியாக நெற்றியில் இடும் திருநீற்றுக்குறி . |
| திருமுதல் | திரும்புதல் ; நன்றாகத் தேய்த்தல் . |
| திருமுழுக்கு | காண்க : திருமஞ்சனம் ; மார்கழி மாதத்தில் பாவைநோன்புகொண்டு மகளிர் முழுகும் நீராட்டு . |
| திருமுளைப்பாலிகை | திருமணம் முதலிய சிறப்பு நிகழ்ச்சிகளில் தானிய முளை வளர்க்கப்பெறும் மண்குடுவை . |
| திருமுற்றத்தார் | கோயிற்பணி செய்வோர் . |
| திருமுற்றம் | கோயிற் சன்னிதானம் ; குதிரை வையாளிவீதி . |
| திருமுறை | இறைவனிடம் முறையிட்டுப் பாடும் தெய்வப்பாடல்கள் ; தேவாரம் , திருவாசகம் , திருவிசைப்பா , திருப்பல்லாண்டு , திருமந்திரம் , பதினோராந் திருமுறை , பெரியபுராணம் என்னும் சைவத் திருநூல்கள் ; இராமலிங்க அடிகள் பாடிய நூல்கள் . |
| திருமுன் | சன்னிதி ; சன்னிதியில் . |
| திருமுன்பு | சன்னிதி ; சன்னிதியில் . |
| திருமுன்னர் | சன்னிதி ; சன்னிதியில் . |
| திருமெய்க்காப்பு | கோயில் காப்போன் . |
| திருமெய்ப்பூச்சு | கோயில்மூர்த்தங்களின்மேல் பூசப்படும் மணப்பூச்சு ; புனுகு , களபம் முதலியன . |
| திருமெழுக்கு | சாணம் ; கோயிலிடத்தை மெழுகுகை . |
| திருமேற்பூச்சு | காண்க : திருமெய்ப்பூச்சு . |
| திருமேனி | கடவுள் , முனிவர் முதலியோரது தெய்வ உடல் ; சிலை ; பெண்கள் காதணி ; காண்க : குப்பைமேனி . |
| திருமேனிகாவல் | கோயிற்காவல் . |
| திருமேனியழகி | காண்க : குப்பைமேனி . |
| திருமை | அழகு . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 578 | 579 | 580 | 581 | 582 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருமண்காப்பு முதல் - திருமை வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், என்னும், காண்க, திருமாலின், சன்னிதி, திருமகள், திருமால், சன்னிதியில், குப்பைமேனி, சன்னிதானம், முதலியன, திருமெய்ப்பூச்சு, செய்வோர், கடவுள், திருமுறை, பிறப்புகள், திருமந்திரம், திருமணம், இடும், கோயில், அரசன், நெற்றியில், அழகர்மலை, பெரியோர்

