முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » அழுகற்றூற்றல் முதல் - அள்ளுச்சீடை வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - அழுகற்றூற்றல் முதல் - அள்ளுச்சீடை வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| அழைப்புத்தூரம் | கூப்பிடு அளவான 1000 கஜ தூரம் ( 914 மீ . ) . |
| அழைப்புப்பத்திரம் | அழைப்புக் கடிதம் ; கிறித்தவசபைக்குக் குருவாகும்படி அழைக்கும் பத்திரம் . |
| அழையுறுத்தல் | கூவுதல் . |
| அள் | அள்ளப்படுவது ; செறிவு ; வன்மை ; வண்டி வில்லைத் தாங்கும் கட்டை ; பற்றிரும்பு ; கூர்மை ; பூட்டு ; நீர்முள்ளி ; அள்ளுமாந்தம் ; காது ; பெண்பால் விகுதி . |
| அள் | (வி) அள்ளு ; நெருங்கு . |
| அள்வழுப்பு | காதுகுறும்பி . |
| அள்ளல் | நெருக்கம் ; சேறு ; இசைக்கரணங்கள் எட்டனுள் ஒன்று ; எழுநரகத்துள் ஒன்று ; அள்ளுதல் ; கொய்தல் ; சேர்த்தெடுத்தல் . |
| அள்ளாடித்தள்ளாடி | தளர்ந்த நடையாய் . |
| அள்ளாடுதல் | செறிதல் ; தளர்தல் . |
| அள்ளாத்தி | மீன்வகை . |
| அள்ளாயமானியம் | அள்ளு சுதந்தரம் . |
| அள்ளி | வெண்ணெய் . |
| அள்ளிக்குத்துதல் | செடி முதலியவற்றின்மேல் நீர் தெளித்தல் ; கஞ்சி முதலியவற்றைச் சிறுகக் கொடுத்தல் . |
| அள்ளிக்கொட்டுதல் | பரவுதல் ; மிகச் சம்பாதித்தல் ; மிகக் கொடுத்தல் . |
| அள்ளிக்கொண்டுபோதல் | வேகமாய் ஓடுதல் ; நோய் கடுமையாகக் கொள்ளை கொள்ளுதல் . |
| அள்ளித்துள்ளுதல் | மிகச் செருக்குதல் . |
| அள்ளியிறைத்தல் | அளவிற்குமேல் செலவிடுதல் . |
| அள்ளிருள் | கும்மிருட்டு ; செறிந்த இருட்டு . |
| அள்ளிவிடுதல் | மிகுதியாகக் கொடுத்தல் . |
| அள்ளு | காது ; கன்னம் ; கூர்மை ; பற்றிரும்பு ; நெருக்கம் ; ஒரு நோய் ; அளவு கூலியாகக் கையால் அள்ளிக்கொள்ளும் தானியம் ; விலா எலும்பு . |
| அள்ளுக்கட்டுதல் | பெட்டி முதலியவற்றை இறும்புத் தகட்டால் இறுக்குதல் ; பலப்படுத்துதல் . |
| அள்ளுக்காசு | கூடைக்காரரிடமிருந்து வசூலிக்கும் பணம் . |
| அள்ளுகொண்டை | மகளிர் மயிர் முடிவகை . |
| அள்ளுகொள்ளை | பெருங்கொள்ளை . |
| அள்ளுச்சீடை | சிறு சீடைவகை . |
| அழுகற்றூற்றல் | விடாத சிறுமழை . |
| அழுகிச்சேதம் | வெள்ளத்தால் உண்டாகும் பயிர்ச் சேதத்திற்குச் செய்யும் வரிக்குறைப்பு . |
| அழுகுகால் | நீர்ப்பெருக்கால் அழுகிய நெற்பயிர் . |
| அழுகுசப்பாணி | காண்க : அழுகுசர்ப்பம் ; அழுகு சர்ப்பம் நக்குதலால் உண்டாகும் நோய் . |
| அழுகுசர்ப்பம் | ஒரு நச்சுயிரி . |
| அழுகுசிறை | அவிந்து சாகத்தக்க சிறை . |
| அழுகுணி | அழுகிற குணம் உள்ளவன் ; சொறி சிரங்கு வகை . |
| அழுகுதல் | பதனழிதல் . |
| அழுகுபுண்குட்டம் | குட்டநோய் வகை . |
| அழுகுமூலம் | மூலநோய் வகை . |
| அழுகை | காண்க : அவலம் . |
| அழுங்கல் | துன்பம் ; கேடு ; நோய் ; அச்சம் ; சோம்பல் ; இரக்கம் ; ஆரவாரம் ; யாழின் நரம்போசை . |
| அழுங்காமை | கடல் ஆமைவகை . |
| அழுங்கு | விலங்குவகை ; கற்றாழை ; பாலை யாழ்த்திறவகை . |
| அழுங்குதல் | வருந்துதல் ; துன்பப்படுதல் ; அஞ்சுதல் ; உரு அழிதல் ; கெடுதல் ; சோம்புதல் ; தவிர்த்தல் ; ஒலித்தல் ; அழுதல் . |
| அழுங்குப்பிடி | விடாப்பிடி . |
| அழுங்குவித்தல் | விலக்குதல் ; துன்புறுத்துதல் . |
| அழுத்தக்காரன் | பொருள் இறுக்கமுடையவன் ; அழுக்கன் . |
| அழுத்தம் | இறுக்கம் ; கடினம் ; உறுதி ; பிடிவாதம் ; உலோபம் ; ஆழ்ந்து அறியும் குணம் . |
| அழுத்து | அழுத்துகை ; பதிவு . |
| அழுத்துதல் | அழுந்தச் செய்தல் ; பதித்தல் ; அமிழ்த்துதல் ; எய்தல் ; வற்புறுத்துதல் ; உறுதியாக்குதல் . |
| அழுந்து | நீராழம் ; வெற்றிலை நடும் வரம்பு . |
| அழுந்துதல் | அழுக்குண்ணுதல் ; உறுதியாகப்பற்றுதல் ; உறுதியாதல் ; பதிதல் ; அமிழ்தல் ; அனுபவப்படுதல் ; வருந்துதல் . |
| அழுந்துபடுதல் | தொன்றுதொட்டு வருதல் . |
| அழுந்தை | அழுந்தூர் . |
| அழுப்பு | சோறு . |
| அழுப்புகம் | தேவலோகம் . |
| அழும்பு | தீம்பு . |
| அழும்புதல் | செறியக் கலத்தல் . |
| அழுவம் | பரப்பு ; நாடு ; துர்க்கம் ; காடு ; போர் ; முரசு ; குழி ; ஆழம் ; கடல் ; மிகுதி ; பெருமை ; நடு ; நடுக்கம் . |
| அழுவிளிப்பூசல் | ஒப்பாரி வைத்தழும் பேரொலி . |
| அழுவை | யானை . |
| அழைத்தல் | கூப்பிடுதல் ; பெயரிட்டுக் கூப்பிடுதல் ; வரச்செய்தல் ; கதறுதல் . |
| அழைப்பு | கூப்பிடுகை ; பொருள் புணரா ஓசை . |
| அழைப்புச்சுருள் | திருமணத்துக்கு அழைக்கும் போது மணமக்களுக்கும் உறவினர்க்கும் தாமபூலத்துடன் கொடுக்கும் பணமுடிப்பு . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 54 | 55 | 56 | 57 | 58 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அழுகற்றூற்றல் முதல் - அள்ளுச்சீடை வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், நோய், கொடுத்தல், அள்ளு, அழுகுசர்ப்பம், கூப்பிடுதல், பொருள், குணம், காண்க, கடல், வருந்துதல், மிகச், கூர்மை, பற்றிரும்பு, காது, நெருக்கம், அழைக்கும், ஒன்று, உண்டாகும்

