தமிழ் - தமிழ் அகரமுதலி - செஞ்சீரகம் முதல் - செதுவல் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| செஞ்சீரகம் | செந்றிறமுள்ள சீரகவகை . |
| செஞ்சு | நேர்மை ; முழுதும் . |
| செஞ்சுடர் | சூரியன் ; தீ . |
| செஞ்சுடர்ப் பகவன் | தீக்கடவுள் ; ககிரவன் . |
| செஞ்சுருட்டி | ஒரு பண்வகை . |
| செஞ்செயல் | நேர்மையான தொழில் . |
| செஞ்செவியர் | செல்வர் . |
| செஞ்செவே | நேராக ; எளிதாக ; முழுவதும் . |
| செஞ்செழிப்பு | முகமலர்ச்சி ; பயிர்ச்செழிப்பு ; ஏராளம் . |
| செஞ்சொல் | திருந்திய சொல் ; வெளிப்படையான சொல் . |
| செஞ்சொன்மாலை | புகழ்மாலை . |
| செஞ்சோற்றுக்கடன் | உணவுபெற்று உண்டதற்காக வீரன் தன் உயிரையும் போரிடைக் கொடுத்தலாகிய கடமை . |
| செஞ்சோறு | சிவப்பன்னம் ; காண்க : செஞ்சோற்றுக்கடன் ; உரிமைச்சோறு . |
| செஞ்ஞானி | சிறந்த ஞானி . |
| செட்டி | முருகன் ; வாணிகன் ; வணிகர்களின் பட்டப்பெயர் ; காண்க : வெட்சி ; மல்லக செட்டி . |
| செட்டிச்சி | வணிகக்குலப் பெண் . |
| செட்டிமை | செட்டித் தன்மை வாணிகம் . |
| செட்டியப்பன் | சிவன் . |
| செட்டு | சிக்கனம் ; கடும்பற்றுள்ளம் ; வாணிகம் . |
| செட்டுக்காரன் | அளவாய்ச் செலவிடுவோன் ; பிறருக்குக் கொடுக்காதவன் . |
| செட்டுப்பொட்டாதல் | வாணிகஞ் சிதைதல் . |
| செட்டை | இறகு ; தோட்பட்டை ; மீன்சிறை ; ஆடைக்கரைவகை . |
| செடகன் | வேலைக்காரன் ; அடிமை . |
| செடி | பூண்டு ; புதர் ; நெருக்கம் ; பாவம் ; தீமை ; துன்பம் ; தீநாற்றம் ; பதனழிந்தது ; அற்பம் ; ஒளி ; குற்றம் . |
| செடிக்காடு | புதர் . |
| செடிச்சி | இழிந்தவள் . |
| செடிசீத்தல் | காடுவெட்டுதல் . |
| செண்டாடுதல் | பந்தாடுதல் ; நிலைகுலைத்தல் . |
| செண்டாயுதன் | ஐயனார் . |
| செண்டு | பூச்சேண்டு ; பந்து ; குதிரைச் சம்மட்டி ; வையாளிவீதி ; பந்தடிமேடை ; நூற்செண்டு ; தீவடடிச்செண்டு ; கூர்மை . |
| செண்டுகோல் | பந்தடிக்குங் கோல் . |
| செண்டுமல்லிகை | காண்க : குடமல்லிகை . |
| செண்டுவெளி | அரண்மனையைச் சார்ந்துள்ள வையாளிவீதி . |
| செண்டேறுதல் | சாரிகை புறப்படுதல் . |
| செண்டை | ஒரு கொட்டுவாத்தியவகை . |
| செண்ணம் | நுண்டொழில் ; அழகிய வடிவு . |
| செண்ணிகைக்கோதை | பூமாலைவகை . |
| செண்ணுதல் | அலங்கரித்தல் . |
| செண்பகம் | வண்டுண்ணாத மலர் ; செம்போத்துப் பறவை ; சண்பகமரம் . |
| செண்பகவருக்கை | ஒரு பலாமரவகை . |
| செத்தல் | சாதல் ; தேங்காய் நெற்று ; உலர்ந்து சுருங்கிய பனம்பழம் , மிளகாய் , வாழை முதலியன ; மெலிந்தது ; அறக்காய்ந்தது , பசுமையற்றது . |
| செத்து | செதுக்குகை ; கருதி ; ஐயம் ; ஒத்து . |
| செத்துதல் | செதுக்குதல் . |
| செத்தை | வைக்கோல் ; துரும்பு ; குப்பை ; உலர்ந்த சருகு முதலியன ; ஒலைவேலி ; அழுகின தசை ; கடல்மீன்வகை . |
| செத்தைகுத்துதல் | மதிலில் முளைக்குஞ் செடிகளைக் களைதல் . |
| செத்தோர்ப்புணர்த்தல் | இறந்தோரை உயிர் பெற்றெழச் செய்தல் . |
| செதில் | மீனின்மேலுள்ள பிராலுறுப்பு ; தோல் ; தூளி ; மரப்பட்டை . |
| செதிள் | மீனின்மேலுள்ள பிராலுறுப்பு ; தோல் ; தூளி ; மரப்பட்டை . |
| செதிளெடுத்தல் | தோலையுரித்தல் ; முற்றும் போக்குதல் . |
| செதுக்கடவேலை | காண்க : செதுக்குவேலை . |
| செதுக்கணார்தல் | கைம்மிஞ்சுதல் . |
| செதுக்கி | காண்க : செதுக்குப்பாரை . |
| செதுக்கு | செதுக்குகை ; பூ முதலியன வாடல் ; சேறு ; பூதம் ; மந்தி . |
| செதுக்குதல் | புல் முதலியன செதுக்குதல் ; மரம் முதலியன செதுக்குதல் ; வற்றியொடுங்குதல் . |
| செதுக்குப்பாரை | புல் , மண் முதலியன செதுக்குங் கருவி . |
| செதுக்குவேலை | அணிகலன்களில் மணிபதிக்கும் தொழில் . |
| செதுக்குளி | தச்சனின் உளிவகையுள் ஒன்று ; மணி பதித்தற்குரிய தட்டான் கருவி . |
| செதுக்கை | தழும்பு . |
| செதுகு | கூளம் ; சருகு ; தீங்கு . |
| செதுகுதல் | தவறுதல் . |
| செதுகை | தீமை . |
| செதுத்தல் | ஒளிமழுங்குதல் ; சோர்தல் ; வற்றி யொடுங்குதல் . |
| செதும்பல் | காண்க : செதும்புதல் . |
| செதும்பு | சேறு ; சிறிதளவு ஒடும் நீர் . |
| செதும்புதல் | ஈரம் உறைத்தல் . |
| செதுமகவு | இறந்து பிறக்கும் பிள்ளை . |
| செதுமொழி | பொல்லாச் சொல் . |
| செதுவல் | பட்டுப்போதல் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 497 | 498 | 499 | 500 | 501 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
செஞ்சீரகம் முதல் - செதுவல் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, முதலியன, சொல், செதுக்குதல், செதுக்குவேலை, மரப்பட்டை, தூளி, தோல், செதுக்குப்பாரை, சேறு, செதும்புதல், கருவி, புல், பிராலுறுப்பு, மீனின்மேலுள்ள, தீமை, புதர், வாணிகம், வையாளிவீதி, செஞ்சோற்றுக்கடன், சருகு, தொழில், செதுக்குகை, செட்டி

