தமிழ் - தமிழ் அகரமுதலி - செங்கயல் முதல் - செஞ்சிலை வரை
சொல் | அருஞ்சொற்பொருள் |
செங்கயல் | ஒரு மீன்வகை . |
செங்கரடு | செம்மண்குன்று . |
செங்கரப்பான் | எயிற்றுப்புண் . |
செங்கருங்காலி | ஒரு மரவகை . |
செங்கரும்பு | செந்நிறமுள்ள கரும்புவகை . |
செங்கல் | சுட்ட மண்கல் ; காவிக்கல் ; மாணிக்கம் . |
செங்கல்வராயன் | செங்கல்வகிரி என்னும் திருத்தணிகைமலைத் தலைவனான முருகக் கடவுள் . |
செங்கல்வரை | திருத்தணிகைமலை . |
செங்கலங்கல் | செந்நிறமான கலங்கல் புது வெள்ளநீர் . |
செங்கலம் | செந்தாமரை . |
செங்கழுநீர் | கொடிவகை ; செங்குவளை ; செவ்வாம்பல் . |
செங்களம் | இரத்தத்தால் சிவந்த இடம் ; போர்க்களம் . |
செங்களி | செம்பஞ்சுக்குழம்பு ; பாக்கு ஊறவைக்குஞ் சாயக்குழம்பு . |
செங்கற்கட்டளை | செங்கல் அறுத்தற்குரிய அச்சு . |
செங்கற்றலை | ஒரு மீன்வகை . |
செங்கனல் | கொழுந்துவிட்டெரியும் தீ ; கனிந்துகொண்டிருக்கும் அழல் . |
செங்காகம் | செம்போத்துப் பறவை . |
செங்காடு | திருச்செங்காட்டங்குடி என்னும் ஒரு சிவதலம் ; சிவந்த காட்டுநிலம் . |
செங்காந்தள் | செந்நிறமுள்ள படர்கொடிவகை . |
செங்காய் | பழுக்கும் பருவத்துள்ள காய் . |
செங்காய்ப்புண் | பழுக்காத புண் . |
செங்கார் | ஒரு கார்நெல்வகை . |
செங்காரணி | கருஞ்சிவலையான பசு முதலிய விலங்கு . |
செங்காரி | கருஞ்சிவலையான பசு முதலிய விலங்கு . |
செங்காரித்தல் | கோபம் , வெயில் , கடுமை இவற்றால் முகஞ் சிவந்துகாட்டுதல் ; மழையின்றிப் பயிர்கள் கதிர்வாங்காது செந்நிறமாதல் . |
செங்காலி | செங்கருங்காலிமரம் . |
செங்காவி | செங்கழுநீர் ; குங்குமக்காவி . |
செங்கானாரை | சிவந்த காலையுடைய நாரை வகை . |
செங்கிடை | ஒரு முட்செடிவகை . |
செங்கிரந்தி | ஒரு மேகக்கட்டிவகை ; செந்நிறப்புண்கட்டி . |
செங்கிளுவை | கீச்சுத்தாராப் பறவை ; ஒரு மரவகை . |
செங்கீரை | ஒரு கீரைவகை ; செங்கீரைப் பருவம் . |
செங்கீரைப்பருவம் | இருகை ஊன்றி ஒரு கால் மடக்கி ஒரு கால் நீட்டி ஐந்தாம் திங்களிற் பிள்ளைகள் தலைநிமிர்ந்தாடும் பருவம் . |
செங்குங்குமம் | சந்தனமரவகை . |
செங்குணக்கு | நேர்கிழக்கு . |
செங்குத்தாய்விழுதல் | தலைகுப்புற விழுதல் . |
செங்குத்து | நேரே நிமிர்ந்து நிற்கும் நிலை . |
செங்குந்தம் | கண்ணோய்வகை ; இரத்தத்தால் சிவந்த ஈட்டி . |
செங்குமிழ் | ஒரு மரவகை . |
செங்குமுதம் | காண்க : செவ்வாம்பல் ; கண்ணோய்வகை . |
செங்குலிகம் | சாதிலிங்கம் . |
செங்குவளை | செங்கழுநீர்ப்பூ . |
செங்குளவி | மஞ்சள் நிறமுள்ள ஒரு குளவிவகை . |
செங்குறிஞ்சி | ஒரு மரவகை . |
செங்குன்றி | ஒரு குன்றிக்கொடிவகை . |
செங்கை | கொடுக்குந் தன்மையுள்ள கை ; அழகிய கை ; சிவந்த கை ; திருவாதிரைநாள் . |
செங்கொடிவெலி | ரோசாநிறப் பூவுள்ள ஒரு கொடிவகை . |
செங்கொல் | செம்பொன் . |
செங்கொல்லர் | தட்டார் . |
செங்கொள் | ஒரு கொள்ளுவகை . |
செங்கோட்டியாழ் | நால்வகை யாழ்களுள் ஒன்று . |
செங்கோடு | செங்குத்தான மலை ; செருந்திமரம் ; ஒரு சிவதலம் . |
செங்கோல் | அரசச் சின்னமாகிய நேர்கோல் ; நல்லரசாட்சி ; நெருப்புச் சலாகை . |
செங்கோல்கோடுதல் | அரசநீதி தவறுதல் . |
செங்கோலம் | செம்புமணல் . |
செங்கோலறுகு | அறுகம்புல்வகை . |
செங்கோலோச்சுதல் | நீதி தவறாது அரசு புரிதல் . |
செங்கோற்கடவுள் | யமன் . |
செங்கோன்மை | அரசநீதி . |
செச்சை | சந்தனக்குழம்பு ; நீறு ; சட்டை ; வெள்ளாட்டுக்கடா ; ஆடு ; மேடராசி ; தழைகள் ; குடில் ; செங்காடு ; உதயசந்திரன் ; இலிங்கப்பெட்டகம் ; இரட்டை ; சிவப்பு ; வெட்சி ; செந்துளசிச்செடி . |
செஞ்ச | நிறைய ; சேர ; நேராக ; முழுதும் . |
செஞ்சடையோன் | காஷ்மீரப் படிகம் ; சிவன் ; வயிரவன் ; வீரபத்திரன் . |
செஞ்சந்தனம் | ஒரு சந்தனமரவகை . |
செஞ்சம் | நேர்மை ; முழுமை . |
செஞ்சாந்து | குங்குமம் ; சந்தனக்கலவை . |
செஞ்சாலி | உயர்தரச் செந்நெல்வகை . |
செஞ்சிலை | சிவந்தகல் ; செங்காவி ; அழகிய வில் . |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 496 | 497 | 498 | 499 | 500 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
செங்கயல் முதல் - செஞ்சிலை வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், சிவந்த, மரவகை, விலங்கு, செங்காவி, முதலிய, கருஞ்சிவலையான, பருவம், கால், அரசநீதி, அழகிய, கண்ணோய்வகை, சந்தனமரவகை, சிவதலம், பறவை, செங்கழுநீர், என்னும், செங்கல், செந்நிறமுள்ள, கொடிவகை, செங்குவளை, மீன்வகை, இரத்தத்தால், செவ்வாம்பல், செங்காடு