தமிழ் - தமிழ் அகரமுதலி - செந்நீர் முதல் - செம்பால் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| செந்நீர் | இரத்தம் ; புதுவெள்ளம் ; தெளிந்த நீர் ; சுரோணிதம் ; சாயச்சரக்கு . |
| செந்நீர்ப்பவளம் | சிவந்த பவளம் . |
| செந்நீர்முத்து | செந்நீரோட்டமுள்ள முத்து . |
| செந்நெல் | செஞ்சாலிநெல் ; நன்னீர் மீன்வகை . |
| செந்நெறி | நல்வழி ; சன்மார்க்கம் . |
| செப்பஞ்செய்தல் | ஒழுங்குபடுத்துதல் ; புதைத்தல் . |
| செப்பட்டை | பறவைச் சிறகு ; தோட்பட்டை ; தூண்டியில் வைக்குஞ் சதுரக்கல் ; கன்னம் . |
| செப்பட | செவ்விதாக . |
| செப்படி | காண்க : செப்படிவித்தை . |
| செப்படித்தல் | செப்படிவித்தை செய்தல் . |
| செப்படிவித்தை | செப்பைக்கொண்டு செய்யும் ஒருவகைத் தந்திரவித்தை ; தந்திரம் ; சூழ்ச்சியான செயல் ; சிக்கனம் . |
| செப்பம் | செவ்வை ; நடுநிலை ; சீர்திருத்தம் ; பாதுகாப்பு ; செவ்விய வழி ; தெரு ; நெஞ்சு ; மனநிறைவு ; ஆயத்தம் . |
| செப்பமிடுதல் | காண்க : செப்பஞ்செய்தல் . |
| செப்பல் | சொல்லுகை ; காண்க : செப்பலோசை ; செந்நிறம் . |
| செப்பல்பிரிதல் | பொழுதுவிடிதல் . |
| செப்பலி | கடல்மீன்வகை . |
| செப்பலோசை | வெண்பாவுக்குரிய ஓசை . |
| செப்பலோடுதல் | செந்நிறங்கொள்ளுதல் . |
| செப்பனிடுதல் | சீர்திருத்துதல் ; சமப்படுத்துதல் ; மெருகிடுதல் . |
| செப்பாடு | நேர்மை . |
| செப்பிக்கூறுதல் | விடைசொல்லுதல் . |
| செப்பிடில் | காண்க : சடாமாஞ்சில் . |
| செப்பிடுவித்தை | காண்க : செப்படிவித்தை . |
| செப்பியம் | திரும்பத்திரும்ப உச்சரித்தல் . |
| செப்பிலை | காண்க : தும்பை . |
| செப்பு | சொல் ; விடை ; செம்பு ; சிமிழ் ; நீர் வைக்கும் குடுவை ; சிறுமியர் விளையாட்டுப் பாத்திரம் ; இடுப்பு . |
| செப்புக்கட்டை | பொன் வளையல் முதலியவற்றிற்கு உள்ளே இடும் தாமிரக்கட்டை . |
| செப்புக்குடம் | செப்பு முதலிய உலோகங்களாற் செய்த நீர்க்குடம் . |
| செப்புக்கோட்டை | செம்பினாலியன்ற இராவணன் கோட்டை . |
| செப்புச்சிலை | செம்பாலான உருவம் ; மாந்தளிர்க்கல் . |
| செப்புத்திருமேனி | செம்பினாலாகிய சிலை . |
| செப்புத்துறை | இடுகாடு . |
| செப்புதல் | சொல்லுதல் ; விடைசொல்லுதல் . |
| செப்புநெருஞ்சி | சிவப்பு நெருஞ்சிப்பூடு . |
| செப்புப்பட்டயம் | செப்புத்தகட்டிலெழுதிய சாசனம் . |
| செப்புப்பத்திரம் | செப்புத்தகட்டிலெழுதிய சாசனம் . |
| செப்புவழு | விடைக்குற்றம் . |
| செப்பேடு | காண்க : செப்புப்பட்டயம் . |
| செப்போடு | செம்பாலாகிய ஓடு . |
| செபத்தியானம் | மந்திரத்தை உச்சரித்துக் கொண்டே கடவுளை நினைந்திருத்தல் . |
| செபம் | மந்திரமோதல் ; வேண்டுதல் ; சூழ்ச்சி . |
| செபமாலை | செபஞ்செய்வதற்குரிய மாலை ; மாதரின் அணிகலவகை . |
| செபவடம் | செபஞ்செய்வதற்குரிய மாலை ; மாதரின் அணிகலவகை . |
| செபித்தல் | மந்ததிரம் சொல்லுதல் ; வேண்டுதல் . |
| செம் | சிவப்பு ; செம்மை . |
| செம்பக்கால் | வெற்றிலைக்கொடி நடாத இளமையான அகத்திச் செடிகளையுடைய வெற்றிலைத் தோட்டம் . |
| செம்பகம் | காண்க : செண்பகம் . |
| செம்பகை | யாழ்க்குற்றம் நான்கனுள் ஒன்று . இன்பமின்றி இசைத்தலாகிய தாழ்ந்த இசை . |
| செம்பசலை | சிவப்புப் பசளைக்கீரை . |
| செம்பசளை | சிவப்புப் பசளைக்கீரை . |
| செம்பஞ்சி | ஒரு பருத்திவகை ; சிவந்த பஞ்சு ; செவ்வரக்குச் சாயமிட்ட பஞ்சு . |
| செம்பஞ்சு | ஒரு பருத்திவகை ; சிவந்த பஞ்சு ; செவ்வரக்குச் சாயமிட்ட பஞ்சு . |
| செம்பஞ்சுக்குழம்பு | மகளிர் பண்டைக்காலததில் அழகிற்காகப் பூசிய சிவப்புக் கலவை . |
| செம்பஞ்சூட்டுதல் | மகளிர் அடிகட்குச் செம்பஞ்சுக் குழம்பு பூசுதல் . |
| செம்பட்டை | சிவந்த மயிர் ; வாத்தியவகை . |
| செம்படத்தி | செம்படவப்பெண் . |
| செம்படவன் | மீன்வலைஞன் . |
| செம்படாம் | சிவப்புச் சீலை . |
| செம்படை | சிவந்த மயிர் . |
| செம்படைச்சி | காண்க : செம்படத்தி . |
| செம்பத்தி | உண்மையான அன்பு . |
| செம்பரத்தை | ஒரு செடிவகை . |
| செம்பருத்தி | உயர்ரகப் பூணூல் நூற்க உதவும் பருத்திவகை ; செம்பஞ்சு ; பருத்திவகை . |
| செம்பருந்து | கருடன் . |
| செம்பலகை | செங்கல் . |
| செம்பலா | இலவங்கவகை . |
| செம்பவளம் | வெளுப்புக் கலவாது நன்றாகச் சிவந்துள்ள பவளவகை ; உருண்டை வடிவுள்ள பவளவகை . |
| செம்பளித்தல் | அச்சம் முதலிய காரணம் பற்றிக் கண்ணை இடுக்கிக் கொள்ளுதல் . |
| செம்பிளித்தல் | அச்சம் முதலிய காரணம் பற்றிக் கண்ணை இடுக்கிக் கொள்ளுதல் . |
| செம்பாகம் | சரிபாதி ; இனிமை ; நல்ல பக்குவம் . |
| செம்பாட்டுத்தரை | செம்மண் பூமி . |
| செம்பாட்டுநிலம் | செம்மண் பூமி . |
| செம்பாட்டுமண் | செம்மண் பூமி . |
| செம்பாடு | செம்மண் பூமி ; செம்மண் படிந்தது . |
| செம்பாதி | சரிபாதி . |
| செம்பாம்பு | கேது . |
| செம்பால் | காண்க : சுரோணிதம் ; சரிபாதி . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 499 | 500 | 501 | 502 | 503 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
செந்நீர் முதல் - செம்பால் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, செம்மண், சிவந்த, செப்படிவித்தை, பூமி, பஞ்சு, பருத்திவகை, முதலிய, சரிபாதி, மகளிர், மயிர், செம்பஞ்சு, சாயமிட்ட, செவ்வரக்குச், செம்படத்தி, பவளவகை, கொள்ளுதல், கண்ணை, பற்றிக், காரணம், அச்சம், இடுக்கிக், அணிகலவகை, செப்பு, சொல்லுதல், சிவப்பு, விடைசொல்லுதல், செப்பலோசை, நீர், சுரோணிதம், செப்பஞ்செய்தல், செப்புப்பட்டயம், செப்புத்தகட்டிலெழுதிய, மாதரின், சொல், சிவப்புப், மாலை, செபஞ்செய்வதற்குரிய, சாசனம், வேண்டுதல், பசளைக்கீரை

