முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » செந்தட்டு முதல் - செந்நிறுவுதல் வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - செந்தட்டு முதல் - செந்நிறுவுதல் வரை
சொல் | அருஞ்சொற்பொருள் |
செந்தட்டு | தன்மீது படும் அடியைத் தடுத்தல் ; செயல் சித்திக்குமாறு செய்யும் மறைந்து கொள்ளல் முதலிய வழிவகை . |
செந்தண்டு | செந்தண்டுக்கீரை ; நோயாற் சிவந்த கதிர் ; பவளம் . |
செந்தண்மை | அருள் . |
செந்தணக்கு | காண்க : தணக்கு ; தணக்குவகை ; வெண்டாளி . |
செந்தணல் | காண்க : செந்தீ . |
செந்தணற்கொடி | பவளக்கொடி . |
செந்தமிழ் | கலப்பற்ற தூய தமிழ் . |
செந்தமிழ்நாடு | வையையாற்றின் வடக்கும் , மருதயாற்றின் தெற்கும் , மருவூரின் மேற்கும் , கருவூரின் கிழக்கும் ஆகிய செந்தமிழ் வழங்கும் நிலம் . |
செந்தமிழ்நிலம் | வையையாற்றின் வடக்கும் , மருதயாற்றின் தெற்கும் , மருவூரின் மேற்கும் , கருவூரின் கிழக்கும் ஆகிய செந்தமிழ் வழங்கும் நிலம் . |
செந்தயிர் | செந்நிறமுள்ள தயிர்க்கட்டி . |
செந்தரா | கசப்புள்ள மருந்துக்கொடிவகை . |
செந்தருப்பை | நச்சுப்புல்வகை . |
செந்தலித்தல் | செழிப்பாதல் . |
செந்தலிப்பு | செழிப்பு . |
செந்தலை | அரைக்கால் . |
செந்தழல் | பொங்கி எரியும் தீ ; செந்தணல் : கேட்டைநாள் . |
செந்தழற்கொடி | பவளக்கொடி . |
செந்தளித்தல் | செழிப்பாதல் ; செவ்வியுறுதல் . |
செந்தளிர் | செந்நிறமுள்ள இளந்தளிர் . |
செந்தளிர்ப்பு | மகிழ்ச்சி ; செழிப்பு ; இளமைவளம் . |
செந்தாது | பொன் . |
செந்தாமரை | சிவந்த தாமரை . |
செந்தார் | ஆண்கிளியின் சுழுத்திலுள்ள செங்கோடு . |
செந்தாழை | செந்நிறமுள்ள தாழைவகை ; தணக்குவகை ; பார்வையை மறைக்கும் கண்ணோய் ; உதட்டில் புண் உண்டாக்கி வாயில் தீநாற்றம் அடைவிக்கும் நோய்வகை ; பயிரைச் செந்நிறமாக்கும் நோய்வகை ; நெல்வகை . |
செந்தாள் | நோயால் செந்நிறமான கதிர் . |
செந்தாளி | ஒரு தாளிச்செடிவகை . |
செந்தி | காண்க : திருச்செந்தூர் . |
செந்திரிக்கம் | ஒலைக் கடிதத்தின் மூடுசுருள் ; கயிற்றில் ஏறிச் செல்லுமாறு தொடுக்கும் ஒலைச்சுருள் . |
செந்திருக்கம் | ஒலைக் கடிதத்தின் மூடுசுருள் ; கயிற்றில் ஏறிச் செல்லுமாறு தொடுக்கும் ஒலைச்சுருள் . |
செந்திரு | திருமகள் ; தாளகம் . |
செந்திருக்கை | ஒரு மஞ்சள்வகை . |
செந்தில் | முருகக்கடவுள் தலமாகிய திருச்செந்தூர் . |
செந்திறம் | சிவப்பு ; குறிஞ்சி யாழ்த்திறத்துள் ஒன்று ; தெளிவு . |
செந்தினை | கம்புப்பயிர் ; சிவந்த தினை . |
செந்தீ | சொழுந்துவிட்டெரியும் தீ . |
செந்தீக்கரப்பான் | கரப்பான் சட்டிவகை . |
செந்தீவண்ணன் | நெருப்பின் நிறமுடையவனாகிய சிவன் ; செவ்வாய் . |
செந்தீவளர்ப்போர் | வேள்வித்தீயை வளர்ப்பவராகிய அந்தணர் . |
செந்தீவேட்டல் | வேள்விசெய்தல் . |
செந்து | அணு ; நரி ; உயிரினம் ; ஊர்வன முதலிய உயிரி ; ஏழு நரகத்துள் ஒன்று ; பெரும் பண்ணுள் ஒன்று ; காண்க : சடாமாஞ்சில் ; பெருங்காயம் . |
செந்துத்தி | சிறுதுத்திச்செடி . |
செந்துத்தீ | பெருங்காயம் ; காண்க : சடாமாஞ்சில் . |
செந்தும்பை | ஒரு தும்பைப்பூண்டுவகை . |
செந்துரசம் | ஒரு பிசின்வகை . |
செந்துருக்கம் | ஒரு செடிவகை . |
செந்துருத்தி | செம்பாலைப் பண்களுள் ஒன்று . |
செந்துருதி | குறுஞ்சி யாழ்த்திறத்துள் ஒன்று . |
செந்துளிர் | செந்நிறத் தளிர் . |
செந்துறை | பாடற்கேற்ற பாட்டு . |
செந்தூக்கு | நேராகத் தூக்குகை ; செங்குத்து ; தாளவகை : ஒருபாட்டுவகை . |
செந்தூரத்தாசி | கந்தகம் . |
செந்தூரம் | சிவந்த பொடி . |
செந்தூள் | போர்க்களத்து இரத்தமயமானதுகள் . |
செந்தூள்கருந்தூள் பறத்தல் | சண்டை முதலியவற்றின் கடுமையை உணர்த்தும் குறிப்பு . |
செந்தேன் | உயர்ந்த தேன் ; அறுவைப் புகைக்கும் நறுமணப்பொருள்களுள் ஒன்று . |
செந்தொட்டி | காஞ்சொறிக்கொடி . |
செந்தொடை | சிவந்த மாலை ; மோனை எதுகை முதலியன அமைக்கப்படாத பாட்டு ; அம்பு முதலியவற்றை எய்யும் குறி . |
செந்தொடையன் | செந்நிறப் பூமாலையை அணிந்தவனான வயிரவன் . |
செந்தோன்றி | காண்க : செங்கழுநீர் ; காந்தள் . |
செந்நகரை | ஒரு மரவகை ; ஒரு கடல்மீன்வகை . |
செந்நாகம் | செந்நிறமுள்ள நாகப்பாம்புவகை ; கேது . |
செந்நாடிக்கா | மூக்கிரட்டைக்கொடி . |
செந்நாப்போதர் | திருவள்ளுவர் . |
செந்நாயுருவி | ஒரு நாயுருவிச்செடிவகை . |
செந்நிலம் | செந்தரை ; போர்க்களம் . |
செந்நிலை | கூத்துநிலைவகை . |
செந்நிறக்கல் | மாமிசச்சிலை . |
செந்நிறுவுதல் | நேர்வழியில் நிறுத்துதல் . |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 498 | 499 | 500 | 501 | 502 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
செந்தட்டு முதல் - செந்நிறுவுதல் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், ஒன்று, காண்க, சிவந்த, செந்நிறமுள்ள, செந்தமிழ், ஒலைக், மூடுசுருள், கடிதத்தின், நோய்வகை, செழிப்பு, கயிற்றில், திருச்செந்தூர், தொடுக்கும், சடாமாஞ்சில், பெருங்காயம், பாட்டு, யாழ்த்திறத்துள், ஒலைச்சுருள், செல்லுமாறு, செழிப்பாதல், ஏறிச், வழங்கும், பவளக்கொடி, வையையாற்றின், வடக்கும், செந்தீ, செந்தணல், கதிர், தணக்குவகை, மருதயாற்றின், தெற்கும், ஆகிய, முதலிய, கிழக்கும், கருவூரின், மருவூரின், மேற்கும், நிலம்