தமிழ் - தமிழ் அகரமுதலி - சூனம் முதல் - செங்கமலை வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| சூனம் | மான் ; பூமலர் ; வயிற்றுவீக்கம் . |
| சூனர் | ஊன்விற்போர் . |
| சூனியக்காரன் | பில்லிசூனியம் வைப்பவன் . |
| சூனியதிசை | அமங்கல திசையாகக் கருதப்படும் தென்கீழ்த்திசை ; மூச்சுப்போகாத மூக்கின் துளைப்பக்கம் . |
| சூனியப்பார்வை | மந்திரவாதியின் தீக்கண் . |
| சூனியம் | இன்மை ; பூச்சியம் ; வறிதாயிருக்கை ; பயனற்றது ; மாயை ; இறப்பை விளைக்கச் செய்யும் கலை ; சூனியப்பொருள் ; தூய்மையின்மை . |
| சூனியம்வைத்தல் | ஒருவருக்குக் கேடு உண்டாதற் பொருட்டுப் பில்லிசூனியம் செய்தல் . |
| சூனியமாதல் | அழிவுறுதல் ; பயனின்றாதல் ; தவறிப்போதல் . |
| சூனியமெடுத்தல் | பிறரால் வைக்கப்பட்ட பில்லிசூனியத்தை அகற்றல் . |
| சூனியவாதம் | நாத்திக மதம் , கடவுள் இல்லை எனும் ஒருசமயவாதம் . |
| சூனியவாதன் | நாத்திகன் . |
| சூனியவாதி | நாத்திகன் ; சூனியக்காரன் . |
| சூனியவித்தை | பில்லிசூனியம் . |
| சூனியன் | முடவன் . |
| சூனு | மகன் . |
| சூனை | வயிற்றுவீக்கம் ; சொத்தை ; குற்றம் ; மகள் . |
| செ | ஒர் உயிர்மெய்யெழுத்து (ச்+எ) . |
| செக்கச்சிவத்தல் | மிகச் சிவத்தல் . |
| செக்கச்செவேரெனல் | மிகவுஞ் சிவந்திருத்தற் குறிப்பு . |
| செக்கடி | எண்ணெயாட்டும்இடம் . |
| செக்கடித்தல் | செக்கில் எள் , வேர்க்கடலைக் கொட்டை , தேங்காய்க் கொப்பரை முதலியவற்றை ஆட்டுதல் . |
| செக்கணி | ஒரு கூத்துவகை . |
| செக்கம் | சிவப்பு ; கோபம் ; இறப்பு . |
| செக்கர் | சிவப்பு ; செவ்வானம் . |
| செக்கர்ச்சிவப்பு | மிகு சிவப்பு . |
| செக்கர்வானிறத்தன் | செவ்வானம்போல் செந்நிறமுள்ள சிவன் ; வீரபத்திரன் . |
| செக்கல் | செவ்வானம் ; மாலைநேரம் . |
| செக்கவுரி | ஒருசெடிவகை . |
| செக்காட்டி | எண்ணெயின்பொருட்டுச் செக்கு ஆட்டுபவன் ; வாணியன் . |
| செக்காடுதல் | செக்கில் அரைபடுதல் ; எண்ணெய்யூற்றுதல் ; காற்றிலும் மழையிலும் செடிகள் வேர்பறிந்து நிற்றல . |
| செக்கான் | செக்காட்டும் வாணியன் . |
| செக்கில்வைத்தாட்டுதல் | மிகத் துன்புறுத்துதல் ; செக்கிலே வைத்துத் திரித்தல் . |
| செக்கிலிட்டுத்திரித்தல் | மிகத் துன்புறுத்துதல் ; செக்கிலே வைத்துத் திரித்தல் . |
| செக்கு | எண்ணெய் ஆட்டும் எந்திரம் ; சதயநாள் ; உண்டியல் . |
| செக்குமேடு | எண்ணெய் ஆடும் செக்குள்ள மேட்டிடம் . |
| செக்குரல் | செக்கின் அடிப்பகுதி . |
| செக்குலக்கை | செக்குரலில் எள் முதலியவற்றை ஆட்டும் பருத்த மரத்துண்டு ; மிக்க வலிமையுள்ளவன் . |
| செகச்சாலம் | மாயவித்தை ; பேரொளி , செகசோதி . |
| செகதம் | அழித்தல் ; கெடுத்தல் . |
| செகநாதன் | உலகிற்கு இறைவனாகிய கடவுள் . |
| செகம் | உலகம் . |
| செகன் | உலகம் . |
| செகரிகம் | நாயுருவிச்செடி . |
| செகன்மோகினி | உலகனைத்தையும் மயக்கும் பேரழகி . |
| செகில் | தோளின் மேற்புறம் ; சிவப்பு . |
| செகிள் | கனித்தோல் ; கேழ்வரகின் கப்பி ; மீன்செதிள் . |
| செகுத்தல் | வெல்லுதல் ; கொல்லுதல் . |
| செங்கட்டி | காவிக்கல் ; சாதிலிங்கம் ; செங்கல்லின் துண்டு . |
| செங்கடம்பு | ஒரு கடப்பமரவகை . |
| செங்கண் | சிவந்த கண் ; ஒருகடல்மீன்வகை . |
| செங்கண்ணன் | சிவந்த கண்களையுடைய ஒர் எலிவகை . |
| செங்கண்ணி | சிவந்த கண்களையுடைய ஒருமீன்வகை ; ஒருசெந்நெல்வகை . |
| செங்ண்மா | சிவந்த கண்ணுடைய கரடி ; ஒருநகரம் . |
| செங்கண்மாரி | காமாலை . |
| செங்கண்மால் | சிவந்த கண்ணுடைய திருமால் . |
| செங்கணான் | திருமால் ; ஒரு சோழ அரசன் . |
| செங்கதிர் | சிவந்த கதிர்களையுடைய சூரியன் . |
| செங்ககிர்நாள் | சூரியனை அதிதேவதையாகக் கொண்ட உத்தரநாள் . |
| செங்கதிரோன் | சிவந்த கதிர்களையுடைய சூரியன் . |
| செங்கமலம் | செந்தாமரை . |
| செங்கமலவல்லி | செந்தாமரை மலரில் வாழும் கொடியாகிய திருமகள் . |
| செங்கமலை | செந்தாமரை மலரில் வாழும் கொடியாகிய திருமகள் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 495 | 496 | 497 | 498 | 499 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சூனம் முதல் - செங்கமலை வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், சிவந்த, சிவப்பு, பில்லிசூனியம், செந்தாமரை, கண்களையுடைய, கண்ணுடைய, திருமகள், ஆட்டும், உலகம், திருமால், சூரியன், கொடியாகிய, வாழும், மலரில், எண்ணெய், கதிர்களையுடைய, வைத்துத், செக்கில், முதலியவற்றை, நாத்திகன், கடவுள், சூனியக்காரன், செவ்வானம், செக்கு, செக்கிலே, வயிற்றுவீக்கம், துன்புறுத்துதல், மிகத், வாணியன், திரித்தல்

