தமிழ் - தமிழ் அகரமுதலி - சூலிகம் முதல் - சூன்றல் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| சூலிகம் | கோழி . |
| சூலிகை | இடிதாங்கி . |
| சூலினி | சூலத்தைஏந்தியபார்வதி ; வெற்றிலை ; சவர்க்காரம் . |
| சூலுதல் | தோண்டுதல் ; கருவுறுதல் ; அறுத்தல் . |
| சூலை | காலந்தவறி நிகழும் மாதவிடாயால் ஏற்படும் நோய் ; வயிற்றுவலி நோய் ; காண்க : வாரசூலை . |
| சூலைக்கட்டி | புணர்ச்சியால் உண்டாகும் புண்கட்டி . |
| சூலைக்குடைச்சல் | சூலைநோயால் உண்டாகும் திருகுவலி . |
| சூலைசத்துரு | காண்க : ஆமணக்கு . |
| சூலைநீர் | கெட்ட நோயால் சிறுநீர்க்குழாய் வழியாக வெளிவரும் சீழ் ; காண்க : மேகநீர் . |
| சூவானக்காரன் | சமையற்காரன் . |
| சூவானம் | அட்டில் . |
| சூவெனல் | நாயை ஏவுதற்குறிப்பு . |
| சூழ் | ஆலோசனை ; ஆராய்ச்சி ; சுற்று ; தலை மாலை ; கடலைப்பருப்பு . |
| சூழ்கோடை | சூறாவளி . |
| சூழ்ச்சம் | சூழ்ச்சி , ஆலோசனை ; வழிவகை . |
| சூழ்ச்சி | ஆலோசனை ; நுண்ணறிவு ; ஆராய்தல் ; வழிவகை ; மனத்தடுமாற்றம் . |
| சூழ்ச்சித்துணைவர் | அமைச்சர்கள் . |
| சூழ்த்தல் | சுற்றுதல் ; சுற்றி மொய்த்தல் . |
| சூழ்த்துதல் | சூழச்செய்தல் . |
| சூழ்தல் | சுற்றியிருத்தல் ; சுற்றிவருதல் ; ஆராய்தல் ; கருதுதல் ; சதியாலோசனை செய்தல் ; தேர்ந்தெடுத்தல் ; அறிதல் ; பண்ணுதல் ; எழுதுதல் ; தாக்குதல் . |
| சூழ்தாழை | தாமரை . |
| சூழ்ந்திடல் | வளைந்துகொள்ளல் . |
| சூழ்போதல் | சுற்றிப்போதல் ; வலம்வருதல் ; வளைத்தல் ; ஆராய்தல் ; சுற்றிக்கிடத்தல் . |
| சூழ்வல்லோர் | காண்க : சூழ்ச்சித்துணைவர் . |
| சூழ்வளி | சுழல்காற்று . |
| சூழ்வார் | காண்க : சூழ்வோர் . |
| சூழ்வினை | சூழ்ச்சி , உபாயம் . |
| சூழ்வு | ஆராய்கை ; வழிவகை . |
| சூழ்வோர் | அமைச்சர் ; உறவினர் ; சூழ்ந்து நிற்பவர் . |
| சூழல் | சூழ்கை ; சுற்றுப்புறம் ; மணற்குன்று ; கூட்டம் ; சூழ்ச்சி ; வழிவகை ; அவதாரம் . |
| சூழி | உச்சி ; உச்சிக்கொண்டை ; சேணம் ; யானையின் முகபடாம் ; நீர்நிலை ; கடல் ; மேலிடம் . |
| சூழிகை | கள் . |
| சூழியம் | உச்சிக்கொண்டை ; உச்சிக்கொண்டையில் அணியும் நகை . |
| சூழியல் | வீட்டிறப்புத் தாங்கும் கம்பு . |
| சூழியற்கம்பு | வீட்டிறப்புத் தாங்கும் கம்பு . |
| சூள் | ஆணை ; சபதம் ; சத்தியம் ; சாபம் ; தீவட்டி . |
| சூள்தல் | காண்க : சூளுறுதல் . |
| சூளறவு | காண்க : சூளுறவு . |
| சூளாமணி | முடிமணி ; ஒரு செய்யுள் நூல் ; இந்திரன் அணியும் மணி . |
| சூளி | உச்சிக்கொண்டை . |
| சூளிகம் | அப்பவருக்கம் . |
| சூளிகை | நீர்க்கரை ; செய்குன்று ; யானைச்செவியடி ; நிலாமுற்றம் ; தலையணிவகை . |
| சூளுறவு | ஆணையிடுகை . |
| சூளுறுதல் | ஆணையிடுதல் ; வஞ்சினங்சுறுதல் . |
| சூளை | செங்கல் முதலியன சுடும் காளவாய் ; ஈமவிறகு ; விலைமகள் . |
| சூற்பெண்டு | கருவுற்றவள் . |
| சூறல் | தோண்டுதல் . |
| சூறன் | காண்க : மூஞ்சூறு . |
| சூறாவளி | சுழல்காற்று . |
| சூறாவாரி | சுழல்காற்று . |
| சூறு | மலவாய் . |
| சூறுதல் | சூழ்தல் . |
| சூறை | கொள்ளை ; சுழல்காற்று ; பனிச்சை என்னும் மயிர்முடிவகை ; சல்லடம் ; கடல் மீன்வகை : காண்க : சூறைக்குருவி ; கமுத்தின் பின்குழி ; பயிரில் விமும் நோய்வகை . |
| சூறைக்காரன் | கொள்ளையடிப்பவன் . |
| சூறைக்காற்று | சுழல்காற்று ; புயற்காற்று . |
| சூறைக்குருவி | சோளக்கொல்லையிற் கூட்டங் கூட்டமாகக் காணப்படும் குருவிவகை . |
| சூறைகொள்ளுதல் | காண்க : சூறையாடுதல் . |
| சூறைகோட்பறை | வழிப்பறி செய்வோர்க்குரிய பாலைப் பறைவகை . |
| சூறைச்சின்னம் | கொள்ளையிடுவோர்க்குரிய ஊதுகொம்பு . |
| சூறைத்தேங்காய் | நேர்த்திக்கடனாகத் தெய்வத்தின் முன்னிலையில் உடைக்கப்படும் சிதறுதேங்காய் . |
| சூறையர் | பரத்தையர் . |
| சூறையாடுதல் | கொள்ளையடித்தல் ; தலைசுற்றுதல் . |
| சூறைவிடுதல் | கொள்ளையிடச் செய்தல் சொத்தைப் பிறர்க்கு வாரிவிடுதல் . |
| சூன் | பிதுக்கம் ; வளைவு ; குற்றம் ; கபடம் ; கைமுதலியன சூம்பியிருக்கை ; கமுக்கம் ; இரண்டு வீட்டுச் சுவர்களின் இடைச்சந்நு ; புறம்போக்கு நிலம் ; ஆங்கில ஆண்டில் ஆறாம்மாதம் . |
| சூன்றல் | தோண்டுதல் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 494 | 495 | 496 | 497 | 498 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சூலிகம் முதல் - சூன்றல் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, சுழல்காற்று, சூழ்ச்சி, வழிவகை, ஆராய்தல், தோண்டுதல், உச்சிக்கொண்டை, ஆலோசனை, சூறையாடுதல், தாங்கும், வீட்டிறப்புத், சூளுறுதல், சூளுறவு, சூறைக்குருவி, அணியும், கம்பு, செய்தல், உண்டாகும், நோய், சூறாவளி, சூழ்ச்சித்துணைவர், சூழ்வோர், சூழ்தல், கடல்

