தமிழ் - தமிழ் அகரமுதலி - சு முதல் - சுகப்பிரசவம் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| சு | ஓர் உயிர்மெய்யெழுத்து(ச்+உ) ; நன்மை ; சுகம் , மங்கலம் , சொந்தம் முதலியவற்றைக் காட்டும் வடமொழி இடைச்சொல் அதட்டும் ஓசை ; நாய் முதலியவற்றைத் துரத்தும் ஒலி . |
| சுஃறு | ஓர் ஒலிக்க்குறிப்பு . |
| சுஃறெனல் | ஓர் ஒலிக்க்குறிப்பு . |
| சுக்கங்காய் | மிதக்கங்காய் . |
| சுக்கங்கீரை | புளிக்கீரைவகை . |
| சுக்கஞ்செட்டி | கடுஞ்செட்டுள்ளவன் , கஞ்சன் . |
| சுக்கடித்தம் | அழுத்தமான புடைவை . |
| சுக்கம் | காண்க : தும்மட்டி ; வெள்ளரி ; களவு ; ஆயம் . |
| சுக்கம்வைத்தல் | களவாய்க் கைப்பற்றுதல் . |
| சுக்கல் | சிறு துண்டு ; கண்ணில் பூ விழும் நோய் வகை . |
| சுக்காஞ்செட்டி | காண்க : சுக்கஞ்செட்டி . |
| சுக்கான் | கப்பலைத் திருப்புங் கருவி ; சுண்ணாம்புக்கல் ; தும்மட்டிக்கொடி . |
| சுக்கான்கல் | சுண்ணாம்புக்கல் ; ஒருவகைக் கட்டிமண் ; சுட்ட செங்கல் . |
| சுக்கான்கீரை | காண்க : சுக்கங்கீரை . |
| சுக்கான்சுண்ணாம்பு | சுக்கான்கல்லை நீற்றியெடுத்த சுண்ணாம்பு |
| சுக்கான்திருப்புதல் | கப்பலை நடத்துதல் ; பிறனைத் தன்வயப்படுத்துதல் . |
| சுக்கியானம் | பரஞானம் ; மெய்யறிவு . |
| சுக்கிரதசை | சுக்கிரனுக்குரிய இருபது ஆண்டு ஆட்சிக்காலம் ; யோககாலம் . |
| சுக்கிரம் | ஆனிமாதம் ; கண்ணோய்வகை ; கழுநீர் ; கள் ; நீர் . |
| சுக்கிரவாரம் | வெள்ளிக்கிழமை . |
| சுக்கிரன் | வெள்ளிக்கோள் ; அசுரகுரு ; தீ ; கண்ணோயுள் ஒன்று . |
| சுக்கிராக்கினை | மிகக் கடுமையான கட்டளை ; சுக்கிரீவனது ஆணை . |
| சுக்கிரிகை | புளியாரை . |
| சுக்கில | அறுபதாண்டுக் கணக்கில் மூன்றாம் ஆண்டு . |
| சுக்கிலத்தம்பம் | அறுபத்து நான்கு கலைகளுள் ஒன்றான விந்தைக் கட்டும் வித்தை . |
| சுக்கிலத்தியானம் | தன்னைப் பரமான்மாவாகப் பாவித்தல் . |
| சுக்கிலபக்கம் | வளர்பிறைக் காலம் , அமாவாசைக்கு அடுத்த நாள் தொடங்கி பௌர்ணமி முடிய உள்ள காலம் . |
| சுக்கிலபட்சம் | வளர்பிறைக் காலம் , அமாவாசைக்கு அடுத்த நாள் தொடங்கி பௌர்ணமி முடிய உள்ள காலம் . |
| சுக்கிலபுட்டா | காண்க : குங்குமம் . |
| சுக்கிலம் | வெண்மை ; விந்து ; காண்க : சுக்கிலபட்சம் ; பாலைமரம் ; பழமுண்ணிப்பாலை . |
| சுக்கிலமண்டலம் | வெள்ளைவிழி ; விழியின் மேல்தோல் . |
| சுக்கிலை | பராசத்தி பேதம் . |
| சுக்கு | உலர்ந்த இஞ்சி ; சிறுதுண்டு ; பயனற்றது . |
| சுக்குச்சுக்காய் | துண்டுதுண்டாய் . |
| சுக்குதல் | செய்தல் ; புணர்தல் ; உலர்தல் . |
| சுக்குநாறிப்புல் | சுன்னாறிப் புல் . |
| சுக்குமம் | சிற்றேலம் . |
| சுக்குமாத்தடி | வைராகிகள் கொள்ளுங் கைக் கழி ; சிறு தெய்வங்களின் கையில் அமைக்கப்படும் சிறு தண்டம் ; மந்திரக்கோல் . |
| சுக்குமாந்தடி | வைராகிகள் கொள்ளுங் கைக் கழி ; சிறு தெய்வங்களின் கையில் அமைக்கப்படும் சிறு தண்டம் ; மந்திரக்கோல் . |
| சுக்கை | நட்சத்திரம் ; பூமாலை ; கப்பற் சுங்கம் ; காண்க : முசுமுசுக்கை . |
| சுகக்காரன் | இன்பம் நுகர்பவன் ; செல்லமாக வளர்ந்தவன் ; வேசிக்கள்ளன் . |
| சுகக்கேடு | உடல்நலக் குறைவு . |
| சுகங்காட்டுதல் | இணங்கி மகிழ்வித்தல் ; உடல் நலக்குறி தோற்றுவித்தல் . |
| சுகசரீரம் | நோயற்ற உடல் ; மென்மையான உடல் . |
| சுகசன்னி | பொருந்தாப் புணர்ச்சி ; அகாலப்புணர்ச்சி இவற்றால் உண்டாகும் சன்னிநோய் . |
| சுகசிம்பி | பூனைக்காலிச்செடி . |
| சுகசீவி | இன்பமாக வாழ்பவன் . |
| சுகட்டான் | முடக்கொற்றான் ; நாணற்புல் . |
| சுகத்திரம் | வாகைமரம் . |
| சுகதம் | உறுப்பிக்கும் உறுப்புக்குமுள்ள வேறுபாடு . |
| சுகதன் | அருகன் ; புத்தன் . |
| சுகதாரு | கடப்பமரம் . |
| சுகதுக்கம் | இன்பதுன்பம் . |
| சுகந்தபரிமளம் | நறுமணப்பண்டம் ; நறுமணம் . |
| சுகந்தம் | நறுமணம் ; நறுமணப்பொருள் ; வாழைமரம் ; கிழங்கு ; சந்தனம் ; கந்தகம் ; கொடிச்சம்பங்கி ; ஈரவெண்காயம் ; அரத்தைச்செடி . |
| சுகந்தமா | கத்தூரி விலங்கு ; கருப்பூரமரம் . |
| சுகந்தமூலி | வெட்டிவேர் . |
| சுகந்தவர்க்கம் | நறுமணப்பண்டம் . |
| சுகந்தவர்க்கமிடல் | நறுமணப்பொருள்களால் பிணத்தைக் கெடாது வைத்தல் . |
| சுகந்தவாழை | பூவாழை . |
| சுகந்தி | செவ்வந்திக்கல் , ஒரு மணிவகை . |
| சுகந்திக்கல் | செவ்வந்திக்கல் , ஒரு மணிவகை . |
| சுகந்திகம் | ஒரு நெல்வகை ; வெண்டாமரை . |
| சுகந்திரம் | உரிமைப்பேறு . |
| சுகப்படுதல் | நலமடைதல் ; நோயின்றியிருத்தல் ; நலமாயிருத்தல் ; மனமிணங்குதல் . |
| சுகப்பிரசவம் | வருத்தமின்றிக் குழந்தை பிறத்தல் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 474 | 475 | 476 | 477 | 478 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சு முதல் - சுகப்பிரசவம் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, சிறு, காலம், உடல், கையில், அமைக்கப்படும், தெய்வங்களின், கைக், கொள்ளுங், தண்டம், மந்திரக்கோல், நறுமணம், நறுமணப்பண்டம், வைராகிகள், மணிவகை, செவ்வந்திக்கல், முடிய, ஆண்டு, வளர்பிறைக், சுண்ணாம்புக்கல், சுக்கஞ்செட்டி, சுக்கங்கீரை, அமாவாசைக்கு, அடுத்த, ஒலிக்க்குறிப்பு, உள்ள, பௌர்ணமி, தொடங்கி, நாள், சுக்கிலபட்சம்

