தமிழ் - தமிழ் அகரமுதலி - சுகபலம் முதல் - சுசீலன் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| சுகபலம் | எருக்கஞ்செடி . |
| சுகபேதி | மருந்தால் வயிற்றுவலி முதலியன இன்றி மலம் பேதியாகக் கழிகை . |
| சுகபோகம் | இன்ப அனுபவம் . |
| சுகபோசனம் | உடல்நலத்துக்குரிய உணவு . |
| சுகம் | இன்பம் ; நன்மை தருவது ; நல்வாழ்வு ; இணக்கம் ; காண்க : சுகாசனம் ; கிளி ; முலைக்கண் . |
| சுகம்பல் | புளிநறளைச்செடி . |
| சுகர்மம் | நற்செயல் ; யோகம் இருபத்தேழனுள் ஒன்று . |
| சுகரம் | எளிதில் செய்யக்கூடியது . |
| சுகவாகன் | கிளியை ஊர்தியாகவுடைய மன்மதன் . |
| சுகவாசி | தொழிலின்றி இன்பமாக வாழ்வோன் ; நிலைத்த குடியானவன் . |
| சுகவாரி | இன்பக்கடல் . |
| சுகவாழ்வு | நல்வாழ்க்கை . |
| சுகவிருத்தி | நலம் ; இன்பச்செய்தி ; சுகாதாரம் . |
| சுகவீனம் | நலமின்மை . |
| சுகாசனம் | ஆசனம் ஒன்பதனுள் யோகி தன் விருப்பம்போல அமைத்துக்கொள்ளும் ஆசனம் . |
| சுகாசுகம் | இன்பதுன்பம் . |
| சுகாட்டம் | நாணல் ; முடக்கொற்றான் . |
| சுகாதிசயம் | நலம் ; பேரின்பம் . |
| சுகாதீதம் | மேற்பட்ட சுகம் ; வீடுபேறு . |
| சுகாந்தம் | வெண்காயம் . |
| சுகாந்திக்கல் | செவ்வந்திக்கல் . |
| சுகானுபவம் | இன்பநுகர்ச்சி . |
| சுகி | இன்பம் நுகர்பவன் ; செல்வன் ; நோயிலான் ; இனிப்புப் பணிகாரவகை . |
| சுகித்தல் | நலமாயிருத்தல் ; சிற்றின்பந்துய்த்தல் . |
| சுகிதம் | பால் . |
| சுகிப்பு | இன்ப அனுபவம் ; சம்பிரமம் . |
| சுகியன் | இன்பந்துய்ப்பவன் ; ஓர் இனிப்புப் பண்டவகை . |
| சுகிர் | உட்டுளை . |
| சுகிர்த்து | நண்பன் . |
| சுகிர்தகுணம் | நல்ல பண்பு ; நற்குணம் . |
| சுகிர்தசாலி | பாக்கியமுள்ளவன் . |
| சுகிர்தபலன் | நல்வினைப் பயன் . |
| சுகிர்தபுண்ணியம் | நல்வினைப் பயன் . |
| சுகிர்தம் | நற்செயல் ; நன்மை ; இன்பம் ; நெய் . |
| சுகிர்தல் | பஞ்சுகொட்டுதல் ; மயிர்வகிர்தல் ; கிழித்தல் ; வடித்தல் . |
| சுகிர்தவசனம் | நல்வாக்கு . |
| சுகிர்தன் | நண்பன் ; புண்ணியசாலி . |
| சுகிர்புரிதல் | யாழ் நரம்பினை வடித்து முறுக்குதல் . |
| சுகுச்சை | அறுவகை வெறுப்புகளுள் ஒன்றாகிய அருவருப்பு . |
| சுகுடம் | சேம்பு . |
| சுகுணம் | நற்குணம் . |
| சுகுமாரதை | மென்மை ; காண்க : சுகுமாரநெய் ; வல்லொற்று நீங்கிய சொற்களால் ஆக்கப்பெற்ற மென்மை நிரம்பிய செய்யுட்குணமாகிய ஓர் அணி . |
| சுகுமாரநெய் | பெண்களுக்கு மலடுநீங்கக் கொடுக்கும் மருந்து நெய் . |
| சுகுமாரம் | மென்மை ; காண்க : சுகுமாரநெய் ; தானியவகை ; கரும்புவகை . |
| சுகுமாரன் | மெல்லிய உடலுள்ளவன் ; நன்மகன் . |
| சுகோததி | இன்பக்கடல் . |
| சுகோதயள் | சுகத்திற்கு இருப்பிடமானவள் . |
| சுகோதரம் | காண்க : தாளிசபத்திரி . |
| சுங்கக்காரன் | சுங்கம் வசூல் செய்பவன் . |
| சுங்கச்சாவடி | ஆயத்துறை . |
| சுங்கம் | ஆயம் ; கீழறுக்கை ; திருட்டு ; காண்க : ஆடுதின்னாப்பாளை . |
| சுங்கம்பிடித்தல் | கடும்பற்றுள்ளத்தால் பொருள் சேர்த்தல் ; இடைலாப மெடுத்தல் . |
| சுங்கவிறை | ஆயம் . |
| சுங்கன் | சுக்கிரன் ; ஒரு மீன்வகை . |
| சுங்கான் | கப்பல் திருப்பும் கருவி ; புகை குடிக்கும் குழாய் . |
| சுங்கி | ஆலமரம் ; வன்னிமரம் . |
| சுங்கு | ஆடையில் தொங்கவிட்டுக் கட்டும் மூலை ; ஆடையின் கொய்சகம் ; சடைக்குச்சு . |
| சுங்குத்தான்குழல் | பறவை முதலியவற்றை வீழ்த்தும் உண்டை யெறிகுழல் . |
| சுச்சு | இஞ்சி ; சுக்கு ; சுண்டிச்செடி ; பறவை மூக்கு . |
| சுசனம் | காற்று ; உறவினர் . |
| சுசனன் | நல்லவன் . |
| சுசாதிபேதம் | சுயசாதியில் பல இனங்களுக்குள் மாறுபாடு . |
| சுசி | சுத்தம் ; வெண்மை ; நெருப்பு ; சந்திரன் ; முதுவேனில் ; கேடைக்காலம் ; சுக்கிரம் ; ஆடிமாதம் ; சுசிகரம் ; காமக்கவலை ; பாதரசம் ; இணக்கம் ; கொடிவேலி . |
| சுசிகம் | புளியாரைக்கீரை . |
| சுசிகரம் | தூய்மை ; மேன்மை . |
| சுசிதம் | மிக வெண்மையான பால் . |
| சுசிரம் | நெருப்பு ; உட்டுளை ; ஊதுகுழல் . |
| சுசீலம் | இனிய பண்பு . |
| சுசீலன் | நல்லொழுக்கமுள்ளவன் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 475 | 476 | 477 | 478 | 479 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சுகபலம் முதல் - சுசீலன் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, இன்பம், சுகுமாரநெய், மென்மை, நெய், நல்வினைப், பண்பு, நற்குணம், பயன், சுங்கம், சுசிகரம், நெருப்பு, பறவை, ஆயம், நண்பன், பால், இணக்கம், சுகாசனம், நன்மை, சுகம், அனுபவம், நற்செயல், இன்பக்கடல், இன்ப, இனிப்புப், ஆசனம், நலம், உட்டுளை

