தமிழ் - தமிழ் அகரமுதலி - சீவரம் முதல் - சீனை வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| சீவரம் | பௌத்தத் துறவியர் அணியும் துவர் பிடித்த ஆடை . |
| சீவரர் | துவாராடை தரித்த பௌத்தத் துறவியர் . |
| சீவராசி | உயிர்த்தொகுதி . |
| சீவரேக்கு | சிற்பத் தீர்மான வேலை ; குந்தனத் தகடு . |
| சீவரேகை | உள்ளங்கையிலுள்ள ஆயுட்கோடு . |
| சீவல் | செதுக்கினவை ; பாக்குச்சீவல் ; மெலிவு ; நெகிழ்ச்சியானது ; மெலிந்தவர் . |
| சீவல்வெற்றிலை | வெற்றிலைபாக்கு . |
| சீவற்சம் | திருமாலின் மார்பிலுள்ள மறு அல்லது மயிர்ச்சுழி ; சிறப்புக் காலங்களில் மங்கலக்குறியாக எடுத்துச் செல்லும் திருமகள் உருவம் . |
| சீவன் | சீவாத்துமா ; உயிரி ; உயிர் ; ஆற்றல் ; வியாழன் ; காந்தம் ; வைடூரியம் . |
| சீவன்முத்தர் | இம்மையில் முத்திநிலை அடைந்தவர் . |
| சீவன்முத்தி | ஆன்மா இம்மையிலேயே முத்தியடைதல் . |
| சீவனகம் | சோறு . |
| சீவனந்தேடுதல் | பிழைக்கும்வழி நாடுதல் ; இரைதேடுதல் . |
| சீவனம் | உயிர்வாழ்தல் ; நீர் ; கஞ்சி . |
| சீவனாம்சம் | மணவிலக்குப் பெற்ற பெண் , கைம்பெண் முதலியோருடைய வாழ்க்கைக் கென்று கொடுக்கும் பொருள் . |
| சீவனி | உயிர்தரும் மருந்து ; செவ்வழி யாழ்த்திறவகை ; காண்க : மந்தாரச்சிலை ; வெட்பாலை ; பாலைமரம் ; ஆடுதின்னாப்பாளை ; செவ்வள்ளிக்கொடி . |
| சீவனீயம் | நீர் . |
| சீவனோபாயம் | பிழைப்பிற்குரிய தொழில் . |
| சீவாத்துமா | உயிர் ; சிற்றுயிர் . |
| சீவாதாரம் | வாழ்வுக்கு ஆதாரமானது ; உடல் ; உலகம் . |
| சீவாந்தம் | வாழ்க்கை முடிவு . |
| சீவாளம் | வீணையின் சீர் . |
| சீவான்மை | காண்க : சீவாத்துமா . |
| சீவி | உயிருடைய பொருள் ; அழிஞ்சில் . |
| சீவிக்கட்டுதல் | தலைவாரி முடித்தல் ; பாளையைச் சீவிக் கள்ளுக்கட்டுதல் . |
| சீவிகா | சாதிக்காய் . |
| சீவித்தல் | உயிர்வாழ்தல் ; தொழிற்படுதல் . |
| சீவிதம் | உயிர்வாழ்க்கை பிழைப்பதற்குரிய வழி ; உயிர்வாழ்தற்குக் கொடுக்கப்பட்ட இறையிலி நிலம் . |
| சீவிமுடித்தல் | தலைமயிரைக் கோதிக்கட்டுதல் . |
| சீவியம் | காண்க : சீவிதம் . |
| சீவினி | சஞ்சீவி ; யாழின் ஓர் ஓசைவகை . |
| சீவுதல் | செதுக்குதல் ; தலைவாருதல் ; மரமிழைத்தல் ; பெருக்குதல் ; பல் முதலியவை துலக்குதல் . |
| சீவுளி | இழைப்புளிவகை: பலகைசுரண்டி என்னும் கருவி ; மெருகிடுங் கருவிவகை . |
| சீவை | கூத்து . |
| சீவையர் | கூத்தியர் . |
| சீவோற்பத்தி | உயிர்த்தோற்றம் . |
| சீழ் | புண்ணில் வடியும் நீர் ; சீழ்க்கை . |
| சீழ்க்காது | காதிலிருந்து சீழ்வடியும் நோய்வகை . |
| சீழ்க்கை | நாவின் நுனியை மடித்து ஊதும் ஓர் ஒலிவகை . |
| சீழ்க்கைக்கூத்து | சீழ்க்கையெழுப்பி ஆடுங்கூத்து . |
| சீழ்கு | ஊகம்புல் . |
| சீழ்குதல் | விம்முதல் . |
| சீழ்மரம் | மாமரம் . |
| சீற்காரம் | மூச்சை உள்வாங்குதலால் எழும் ஒலி ; சீழ்க்கையடித்தல் . |
| சீற்றம் | கோபம் ; கடுங்கோபம் . |
| சீறடி | சிறிய கால் . |
| சீறல் | பெருங்கோபம் ; பெருங்காயம் . |
| சீறளவு | தலைகட்டாமல் அளக்கும் அளவு . |
| சீறிய கற்பு | மறக்கற்பு . |
| சீறியாழ் | சிறிய யாழ் . |
| சீறில் | சிறுவீடு . |
| சீறு | சீற்றம் . |
| சீறுதல் | பாம்பு முதலியன சத்தத்துடன் வெகுளுதல் ; குதிரை முதலியன மூச்செறிதல் ; மூர்க்கமடைதல் ; தீ முதலியன முழங்கி எரிதல் ; கோபித்தல் ; அழித்தல் . |
| சீறுபாறெனல் | முரண்படுதற்குறிப்பு . |
| சீறுமாறு | சரியாய் நடத்தாமை ; தாறுமாறு ; குழப்பம் . |
| சீறூர் | சிறிய ஊர் ; குறிஞ்சிநிலத்தூர் . |
| சீறெலி | சுண்டெலி . |
| சீனக்காரம் | படிக்காரம் . |
| சீனக்குடை | கடுதாசிக் குடை . |
| சீனச்சூடன் | கருப்பூரவகை . |
| சீனப்பட்டை | காண்க : பறங்கிப்பட்டை . |
| சீனப்பா | பறங்கிக்கிழங்கு ; காண்க : பெருங்கிழங்கு . |
| சீனம் | ஒரு நாடு ; ஒரு மொழி ; சீனத்துச் சரக்கு ; படிக்காரம் . |
| சீனாப்பெட்டி | பெட்டிவாணம் . |
| சீனி | சருக்கரை , சீனிச்சருக்கரை , சீனத்துப்பொருள் ; மரவகை ; சாத்துக்குடி ; சேணம் ; மரநங்கூரம் . |
| சீனிக்கிழங்கு | சருக்கரைவள்ளிக் கிழங்கு . |
| சீனை | வன்னிமரம் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 473 | 474 | 475 | 476 | 477 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சீவரம் முதல் - சீனை வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, நீர், சிறிய, முதலியன, சீவாத்துமா, படிக்காரம், சீற்றம், சீழ்க்கை, பொருள், துறவியர், உயிர், உயிர்வாழ்தல், பௌத்தத், சீவிதம்

