தமிழ் - தமிழ் அகரமுதலி - சுசீலை முதல் - சுடுகலம் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| சுசீலை | நல்லொழுக்கமுடையவள் ; புகைநிறப் பசு . |
| சுசுகம் | முலைக்கண் . |
| சுசுந்தரி | மூஞ்சூறு . |
| சுசுமை | கற்புடையவள் ; சுக்கிரன் ; மனைவி . |
| சுசுருசை | பணிவிடை . |
| சுசுலம் | சிறுபண்டம் ; விழல் . |
| சுசூகம் | காண்க : சுசுகம் . |
| சுஞ்சுமாரம் | காலணி ; முதலை ; கழுத்தெலும்பு . |
| சுஞ்ஞானம் | காண்க : சுக்கியானம் . |
| சுட்கம் | வறட்சி ; உலர்ந்தது ; ஒரு நோய் ; பணம் முதலியவற்றின் குறைவு ; கடும்பற்று . |
| சுட்குதல் | வறளுதல் . |
| சுட்டகல் | சூளையிற் சுடப்பட்ட செங்கல் . |
| சுட்டசெங்கல் | சூளையிற் சுடப்பட்ட செங்கல் . |
| சுட்டணி | காண்க : நிதரிசனம் . |
| சுட்டல் | காட்டுதல் ; குறித்தல் ; பொருண்மை மாத்திரம் காணும் அறிவு . |
| சுட்டறிவு | புலன்களால் அறியும் அறிவு . |
| சுட்டாமுட்டி | சுட்டுவிரல் . |
| சுட்டி | குழந்தைகளும் மகளிரும் நெற்றியிலணியும் அணி ; மாட்டின் நெற்றிச்சுழி ; மயிர்முடி ; பாம்பு முதலிய உயிர்களின் உச்சிவெள்ளை ; நெற்றிப்பட்டம் ; தீயோன் ; நற்பேறு இல்லாதவன் ; புத்திக்கூர்மையுள்ளவன் ; அதன் பொருட்டு ; நாக்கு ; ஆடைக்கரைவகை . |
| சுட்டிக்காட்டுதல் | குறித்துக் காண்பித்தல் . |
| சுட்டிகை | மாதர் நுதலணி . |
| சுட்டிச்சுண்ணம் | உடம்பைத் தூய்மை செய்தற்குரிய நறுமணப்பொடி . |
| சுட்டிசுட்டியாக | வட்டம் வட்டமாக . |
| சுட்டித்தலை | குறும்புத்தனம் ; முரடன் . |
| சுட்டித்தலையன் | முரடன் ; உச்சிவெள்ளையுடைய விலங்கு . |
| சுட்டித்தனம் | குறும்புத்தனம் . |
| சுட்டிப்பேசுதல் | குறிப்பாய்ச் சொல்லுதல் . |
| சுட்டிமுகடு | மகளிர் தலையில் அணியும் ஓர் அணிவகை . |
| சுட்டு | குறிப்பிடுகை ; கருதப்படும் பொருள் ; நன்மதிப்பு ; காண்க : சுட்டெழுத்து ; சுட்டணி . |
| சுட்டுக்கோல் | காண்க : உலையாணிக்கோல் ; தீயோன் . |
| சுட்டுச்சொல் | ஒன்றைக் குறித்துக்காட்டும் மொழி . |
| சுட்டுணர்வு | புலன்களால் அறியும் அறிவு ; பொருண்மை மாத்திரை காணும் அறிவு . |
| சுட்டுதல் | குறிப்பிடுதல் ; நினைத்தல் ; நோக்கமாகக் கொள்ளல் ; நன்கு மதித்தல் . |
| சுட்டுப்பெயர் | சுட்டெழுத்தை முன்பெற்ற பெயர் ; சுட்டுமாத்திரையாய் நிற்கும் பெயர் . |
| சுட்டுப்பொருள் | கருதிய பொருள் ; வழிபாட்டிற்காக மனத்தில் அமைக்கப்படும் மூர்த்தம் . |
| சுட்டுவிரல் | ஆட்காட்டி விரல் . |
| சுட்டுவைத்தல் | ஒருவரை நினைத்தவண்ணமாயிருத்தல் ; வழிபாட்டில் மனத்தை நிறுத்துதல் ; இலக்குவைத்தல் . |
| சுட்டெழுத்து | சுட்டி உணர்த்தும் அ , இ , உ என்னும் எழுத்துகள் . |
| சுடர் | ஒளி ; சூரியன் ; வெயில் ; சந்திரன் ; கோள் ; ஆண்டு ; தளிர் ; விளக்கு ; சுடர் ; தீப்பொறி ; சுடரிலிருந்து விழும் எண்ணெய்த்துளி . |
| சுடர்க்கடை | மின்மினி ; மயில் . |
| சுடர்க்கொடி | ஆரத்திக் கருப்பூரம் . |
| சுடர்ச்சக்கரம் | துருவச்சக்கரம் . |
| சுடர்தல் | ஒளிவிடுதல் . |
| சுடர்நிலை | விளக்குத்தண்டு ; விளக்கணி . |
| சுடர்நிலைத்தண்டு | விளக்குத்தண்டு . |
| சுடர்நேமி | காண்க : சுடர்ச்சக்கரம் . |
| சுடர்மணிக்கோவை | யானையின் அணிவகை . |
| சுடர்மௌலியர் | ஒளிவிடும் சென்னியராகிய தேவர்கள் . |
| சுடர்விட்டெரிதல் | சுவாலைவிட்டு எரிதல் . |
| சுடர்விடுதல் | சுவாலைவிட்டு எரிதல் . |
| சுடர்விழியோன் | வீரபத்திரன் ; சிவபெருமான் . |
| சுடர்விழுதல் | விளக்கு முதலியவற்றிலிருந்து தீச்சிகை விழுதல் . |
| சுடரவன் | ஒளியுடைய சூரியன் . |
| சுடரோன் | ஒளியுடைய சூரியன் . |
| சுடல் | சுடரிலிருந்து விழும் எண்ணெய்த் துளி ; திரியின் எரிந்த முனைமுடிச்சு . |
| சுடலை | காண்க : சுடுகாடு ; சவர்க்காரம் . |
| சுடலைக்கரை | சுடுகாடு . |
| சுடலைக்கான் | சுடுகாடு . |
| சுடலைநோன்பிகள் | காபாலமதக் கொள்கையுடைய துறவியர் . |
| சுடலைமாடன் | சுடுகாட்டிலுள்ள ஒரு பேய்வகை . |
| சுடலையாடி | சுடுகாட்டில் ஆடுவோனாகிய சிவபெருமான் ; சவர்க்காரம் . |
| சுடாரி | கவசம் ; கையுறை . |
| சுடிகை | தலையுச்சி ; முடி ; நெற்றிச்சுட்டி ; மயிர்முடி ; சூட்டு ; பொட்டு ; பனங்கள் . |
| சுடீரம் | துளை . |
| சுடு | சுடுகை ; சும்மாடு . |
| சுடுக்குதல் | நெட்டிவாங்குதல் ; பேன் முதலியவற்றை நெரித்தல் . |
| சுடுகண் | கொள்ளிக்கண் . |
| சுடுகலம் | சுடப்பட்ட மட்பாண்டம் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 476 | 477 | 478 | 479 | 480 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சுசீலை முதல் - சுடுகலம் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, அறிவு, சூரியன், சுடுகாடு, சுடப்பட்ட, சுடரிலிருந்து, விழும், விளக்கு, சுடர், பெயர், சுடர்ச்சக்கரம், சுவாலைவிட்டு, சிவபெருமான், ஒளியுடைய, எரிதல், சுட்டெழுத்து, சவர்க்காரம், விளக்குத்தண்டு, முரடன், காணும், புலன்களால், பொருண்மை, சுட்டணி, சூளையிற், செங்கல், அறியும், சுட்டுவிரல், சுசுகம், அணிவகை, குறும்புத்தனம், தீயோன், சுட்டி, மயிர்முடி, பொருள்

