தமிழ் - தமிழ் அகரமுதலி - சீரா முதல் - சீவரத்தினம் வரை
சொல் | அருஞ்சொற்பொருள் |
சீரா | தலைச்சீரா ; பலாசு ; கவசம் ; சிற்றுண்டி வகை . |
சீராகம் | ஒரு பண்வகை . |
சீராட்டு | செல்லம் பாராட்டுகை ; சிறு சண்டை . |
சீராட்டுதல் | செல்லம் பாராட்டுதல் ; கொண்டாடுதல் . |
சீராளன் | சிறப்புப்பெற்றவன் ; சிறுத்தொண்ட நாயனார் மகன் . |
சீரி | புளியமரம் ; முக்காடு . |
சீரிகை | சுவர்க்கோழி . |
சீரிடம் | வாய்த்த இடம் ; தலை ; வாகைமரம் . |
சீரிணன் | கற்றோன் . |
சீரித்தல் | சிறப்புறுதல் . |
சீரிப்பு | பழக்கம் . |
சீரியது | சிறந்தது . |
சீரியார் | குணஞ் செயல்களால் சிறந்தவர் ; அறிஞர் ; புலவர் ; செல்வர் ; நல்லோர் ; உயந்தோர் . |
சீரிவிருட்சம் | புளியமரம் . |
சீருகை | காண்க : சீரிகை . |
சீருணம் | செம்பு . |
சீருணி | செம்பு . |
சீருள் | ஈயம் ; செம்பு ; வெள்ளீயம் ; செல்வம் . |
சீருளியம் | செம்பு . |
சீரெடுத்தல் | திருமணம் முதலியவற்றில் வரிசை கொடுத்தல் . |
சீரை | மரவுரி ; சீலை ; கந்தை ; துலாத்தட்டு . |
சீலக்கேடு | கெட்ட நடத்தை . |
சீலசம்பன்னன் | நற்குணன் . |
சீலத்துவம் | குணம் . |
சீலம் | தன்மை ; ஒழுக்கம் ; நல்லுணர்வு ; நல்லொழுக்கம் ; யானையைப் பயிற்றும் நிலை ; தண்டனை ; சீந்தில் . |
சீலவான் | நற்குணமுடையவன் , ஒழுக்கமுள்ளவன் . |
சீலவிருத்தன் | நற்குணம் முதலியவற்றால் உயர்ந்தவன் . |
சீலன் | காண்க : சீலவான் . |
சீலனம் | சாத்திரங்களைப் பலகால் பயிலுகை . |
சீலா | ஒரு கடல்மீன்வகை ; படகின் இறைகூடை ; நீர்வாழ் பறவை . |
சீலாசாரம் | ஒழுக்கவகை . |
சீலாந்தி | பூவரசுமரம் . |
சீலி | ஒழுக்கமுடையவன்(ள்) . |
சீலித்தல் | நல்லொழுக்கத்தில் நிறுத்தல் ; பழகுதல் . |
சீலை | துணி ; புடைவை ; 2 1/4 முழத் துணி ; கோவணம் . |
சீலைகொடுத்தல் | கைம்பெண்ணுக்குப் புடைவைகொடுத்து அவளை மணம்புரிதல் . |
சீலைத்துணி | சிறு துண்டு ; அலங்காரத் துணி ; ஆடை . |
சீலைநாட்டுதல் | குட்டி பால்குடிக்காதிருக்கும் பொருட்டு ஆட்டின் மடியில் துணிகட்டுதல் . |
சீலைப்பாய் | கந்தைத் துணி ; கிழிந்த பாய் . |
சீலைப்பிள்ளை | துணியாற் செய்யப்பட்ட ஒருவிதப் பொம்மை . |
சீலைப்பேன் | சீலையிற் பற்றும் பேன் . |
சீலைமண் | மருந்துச் சட்டியின் வாயை அடைக்கும் சீலையில் பூசும் மண் . |
சீவ | 'நீடு வாழ்க' என வாழ்த்துதற் குறிப்பு . |
சீவகம் | இலந்தைப்பிசின் ; ஏலம் ; காண்க : திருநாமப்பாலை ; வேங்கைமரம் . |
சீவகர் | புத்த சமயத்தார் ; பௌத்தத் துறவியர் ; பிச்சைக்காரர் . |
சீவகளை | உயிரின் தளிர்ப்பு . |
சீவகன் | சீவகசிந்தாமணிக் கதைத் தலைவன் ; ஆசீவகன் . |
சீவகாருண்ணியம் | பிற உயிர்களின் மீது வைக்கும் இரக்கம் . |
சீவகாலம் | வாழ்நாள் . |
சீவகோடி | உயிர்த்தொகுதி . |
சீவசஞ்சீவி | சீந்திற்கொடி . |
சீவசாட்சி | பரப்பிரமம் ; உயிர்கள் அனைத்திற்கும் சாட்சி . |
சீவசுத்தி | சச்சிதானந்த மயமாகிய பிரமத்தைச் சீவன் அவ்வொளியே கண்ணாகக் கண்டறிந்து அதில் சீவதற்போதம் அடங்கித் தனக்கு அதிட்டானமாகிய பிரமம் தானாய் நிற்கை . |
சீவசெந்து | உயிருள்ளவை . |
சீவடம் | இழைப்பு . |
சீவத்துவம் | ஆன்மசத்தி . |
சீவதசை | காண்க : சீவகாலம் . |
சீவதம் | முகில் ; ஆமை ; மயில் . |
சீவதயாபரன் | உயிர்வகைமீது அன்புடைய இறைவன் . |
சீவதயை | உயிர்களிடத்து அருள்காட்டுகை . |
சீவதருமம் | பசு புண்ணியம் . |
சீவதன் | நீண்ட ஆயுளுடையவன் ; மருத்துவன் . |
சீவதாது | உயிர்நாடி . |
சீவதேகம் | உயிர் வாழும் உடல் . |
சீவந்தன் | உயிரோடிருப்பவன் . |
சீவந்தி | சீந்திற்கொடி ; பாலைமரம் ; கடுக்காய் ; கொடிப்பாலை ; வெட்பாலை ; புல்லுருவி . |
சீவம் | உயிர் ; சீவன் . |
சீவர் | உயிருள்ளோர் . |
சீவரஆடை | காவியாடை . |
சீவரத்தார் | துவராடை தரித்த பௌத்தத் துறவியர் . |
சீவரத்தினம் | பாம்புக்கு உயிராதாரமாயுள்ளதும் வேண்டியதைக் கொடுக்கவல்லதுமான மணி . |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 472 | 473 | 474 | 475 | 476 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சீரா முதல் - சீவரத்தினம் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், துணி, செம்பு, காண்க, துறவியர், உயிர், சீவகாலம், சீவன், பௌத்தத், சீந்திற்கொடி, சீலவான், சிறு, புளியமரம், சீரிகை, சீலை, செல்லம்