முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » சிம்புளித்தல் முதல் - சிரமநிலை வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - சிம்புளித்தல் முதல் - சிரமநிலை வரை
சொல் | அருஞ்சொற்பொருள் |
சிம்புளித்தல் | கண்ணை மூடிக்கொள்ளுதல் . |
சிம்பை | அவரைக்கொடி . |
சிம்மதம் | பாம்பு . |
சிம்மநகம் | அபிநயக்கைவகை . |
சிம்மம் | சிங்கம் ; சிம்மராசி ; ஆவணிமாதம் . |
சிம்மாசனம் | காண்க : சிங்காசனம் . |
சிம்மாத்தல் | செம்மாத்தல் , இறுமாத்தல் ; மிகக்களித்தல் ; வீறுபெறுதல் . |
சிம்மாளம் | மகிழ்ச்சி . |
சிம்மு | எல்லை . |
சிம்முதல் | கொப்புளங் குத்திவிடுதல் ; ஒலித்தல் . |
சிமட்டி | பேய்க்கொம்மட்டிக்கொடி . |
சிமந்தூரி | காண்க : சிறுபுள்ளடி . |
சிமயம் | இமயமலை ; பொதியமலை ; மலையுச்சி . |
சிமாளம் | காண்க : சிம்மாளம் . |
சிமாளித்தல் | மிக மகிழ்தல் ; சமாளித்தல் . |
சிமி | ஆண்களின் குடுமி . |
சிமிக்கி | கம்மலில் தொடுத்து அணியப்படும் முத்துக் கட்டிய காதணிவகை ; கொடிவகை . |
சிமிக்கிப்பூ | காண்க : சிமிக்கி ; கொடிவகை . |
சிமிட்டா | மயிர்பிடுங்குங் கருவி ; சாமணம் . |
சிமிட்டி | ஒருவகைச் சுண்ணாம்புக் கலவை ; பேய்க்கொம்மட்டி . |
சிமிட்டு | கண் சைகை ; இமைப்பு ; கள்ளவேலை ; கைந்நொடி . |
சிமிட்டுக்கண் | கண் அசைத்தல் ; கொட்டுங்கண் . |
சிமிட்டுக்கள்ளி | தந்திரக்காரி ; கற்புக் குன்றியவள் . |
சிமிட்டுதல் | கண்ணிமைத்தல் ; சாடைதோன்றக் கண் சிமிட்டுதல் ; தந்திரம் செய்து ஏமாற்றுதல் . |
சிமிட்டுவேலை | கள்ளவேலை ; வியத்தகு வேலைப்பாடு . |
சிமிண்டு | தடி . |
சிமிண்டுதல் | நிமிண்டுதல் ; தூண்டிவிடுதல் ; கிள்ளுதல் ; சிமிட்டுதல் . |
சிமிலம் | மலை . |
சிமிலி | குடுமி ; உறி ; தோணி ; சிள்வீடு ; பூளைச்செடி ; வெல்லங்கலந்த எள்ளின் பொடி . |
சிமிழ் | செப்பு ; திமில் . |
சிமிழ்தல் | கட்டுதல் ; அகப்படுத்துதல் ; கண்கொட்டுதல் . |
சிமிழ்ப்பு | பந்தம் ; கட்டுகை . |
சிமிளி | வெல்லங் கலந்த எள்ளின் பொடி . |
சிமிளித்தல் | கண்கொட்டுகை . |
சிமிளிப்பு | கண்கொட்டுகை . |
சிமுக்கிடுதல் | எச்சரிக்கைசெய்தல் ; அசைதல் . |
சிமுட்டி | கீழாநெல்லிப் பூடு . |
சிமை | மலையுச்சி ; குடுமி . |
சிமையம் | மலையுச்சி ; கொடுமுடி . |
சியச்சினி | வேலிப்பருத்திக்கொடி . |
சியத்தினி | தக்காளி . |
சியிருதம் | கடுக்காய் . |
சியேனம் | பருந்து ; அணிவகுப்பு . |
சிரக்கம்பம் | தலையசைத்தல் ; ஏற்பு முதலியவற்றின் அறிகுறியாகச் செய்யும் தலையசைப்பு . |
சிரக்கம்பனம் | தலையசைத்தல் ; ஏற்பு முதலியவற்றின் அறிகுறியாகச் செய்யும் தலையசைப்பு . |
சிரக்கோழி | குழலாதொண்டைக்கொடி ; வசம்பு . |
சிரகபாலம் | தலையோடு . |
சிரகம் | திவலை ; கரகம் ; தலைச்சீரா . |
சிரகம்பிதம் | காண்க : சிரக்கம்பம் . |
சிரங்காடு | அடர்ந்த காடு . |
சிரங்காய் | காண்க : சிரங்கை . |
சிரங்கு | புண் . |
சிரங்கை | கைகொண்ட அளவு . |
சிரச்சேதம் | தலையை வெட்டுதல் . |
சிரசாவகித்தல் | மரியாதையுடன் ஏற்றுக் கொள்ளுதல் . |
சிரசு | தலை ; தலைமயிர் . |
சிரஞ்சீவி | நீண்ட ஆயுள் உடையவன்(ள்) ; பெரியோர் வாழ்த்த வழங்குஞ் சொல் ; காகம் ; இலவமரம் ; மார்க்கண்டேய முனிவர் . |
சிரஞ்சீவியர் | நீடுழிகாலம் வாழ்ந்திருக்க வரம் பெற்றவரான அசுவத்தாமன் , மாவலி , மார்க்கண்டன் , வியாசன் , அனுமான் , விபீடணன் , பரசுராமன் என்னும் எழுவர் . |
சிரட்டை | கொட்டாங்குச்சி ; பிச்சைக்கலம் . |
சிரணி | ஓமம் . |
சிரத்தகாழகம் | மருக்காரைச்செடி . |
சிரத்தைகாழகம் | மருக்காரைச்செடி . |
சிரத்தல் | தேய்த்தல் ; அழித்தல் ; எழுத்திலாவோசை . |
சிரத்தவன் | தலைவன் . |
சிரத்தியார் | சிறிய தாயார் . |
சிரத்துதல் | உரக்க ஒலித்தல் ; கோபித்தல் . |
சிரத்தை | அன்பு ; பத்தி ; நம்பிக்கை ; விருப்பம் ; ஊற்றம் . |
சிரந்தை | உடுக்கை . |
சிரநதி | கங்கை . |
சிரபங்கம் | காண்க : சிரச்சேதம் . |
சிரபாத்திரி | கபாலத்தைப் பிச்சைப் பாத்திரமாகக்கொண்ட சிவன் . |
சிரபுரம் | சீகாழி . |
சிரம் | தலை ; உச்சி ; மேன்மை ; நெடுங்காலம் ; ஆமணக்கு ; கமுகமரம் ; கூவைநீறு ; வாதமடக்கி . |
சிரமச்சாலை | படைக்கலம் பயிலிடம் . |
சிரமஞ்செய்தல் | சிலம்பம் முதலியன பழகுதல் . |
சிரமநிலை | படைக்கலப் பயிற்சி . |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 457 | 458 | 459 | 460 | 461 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிம்புளித்தல் முதல் - சிரமநிலை வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, மலையுச்சி, சிமிட்டுதல், குடுமி, அறிகுறியாகச், முதலியவற்றின், ஏற்பு, செய்யும், சிரங்கை, மருக்காரைச்செடி, சிரச்சேதம், தலையசைத்தல், தலையசைப்பு, பொடி, சிமிக்கி, ஒலித்தல், சிம்மாளம், கொடிவகை, கள்ளவேலை, கண்கொட்டுகை, சொல், எள்ளின், சிரக்கம்பம்